18th February 2012

மனத்திற்கு அதிகமாக சுதந்திரம் அளிப்பதே கட்டுண்டு இருப்பதன் முக்கிய காரணம் ஆகும். ஒரு மிருகம் ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு இருக்கும்போது அதனால் எங்கும் போக இயலாது. யாரிடமும் கோபம் கொள்ளவோ, ஆவேசப்படவோ, யாருக்கும் தீங்கிழைக்கவோ முடியாது. ஆனால் அதன் கட்டினை அவிழ்த்துவிட்டால் அது சுற்றித்திரிந்து, பயிர்களை அழித்து, நஷ்டம் ஏற்படுத்தி மற்றவர்களுக்கு தீங்கிழைக்கும். இவ்வாறு தொல்லை தருவதால் அதற்கு நன்றாக அடி கூட விழலாம். அதுபோலவே, மனதும் சில ஒழுங்குமுறைகள் மற்றும் எல்லைக்குள் கட்டப்பட்டு இருக்க வேண்டும். மனிதன் விதிமுறைகளுடனும் கட்டுப்பாடுகளுடனும் வாழும்வரையில் அவனால் தன் நற்பெயரைக் காப்பாற்றிக் கொண்டு, சந்தோஷமான, பயனுள்ள வாழ்க்கை வாழ முடியும். இந்த எல்லைகளைக் கடந்தால் அவன் வழி தவறிவிடுவான்.

– தெய்வீக உரை (பிப்ரவரி 17, 1985)

Leave a comment