19th February 2012

கர்மாவிற்கு பிணைப்படுத்தும் தன்மை கிடையாது; ‘நான் செய்கிறேன்’ என்கிற இருமாப்பே பற்றியும் பிணைப்பையும் ஏற்படுத்துகிறது. மேலும் செயல்களின் பலன்கள் மேல் உள்ள ஆசையே பந்தத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, பூஜ்யத்திற்கு வேறொரு எண்ணின் சேர்க்கை இருந்தால்தான் மதிப்பு உள்ளது. இங்கு கர்மாவே பூஜ்யம்; செயல்புரிபவன் என்கிற எண்ணம் கர்மாவிடம் சேர்ந்து இருக்கும்போது பந்தந்தை உருவாக்குகிறது. ஆகவே, ‘நான்’ என்கிற எண்ணத்தை விட்டுவிடுங்கள். இவ்வாறு நீங்கள் புரியும் கர்மா உங்களுக்கு எப்பொழுதும் தீங்கிழைக்காது. எவ்வித ஆசைகளும் இல்லாமல் புரியப்படும் கர்மா எவ்வித உத்வேகத்தையும் தராது. பிறப்பிர்க்கான உந்ததலைக்கூடத் தராது. முந்தைய காலத்திய ஆன்மீக சாதகர்கள் இந்த உயர்ந்த குறிக்கோளுடன் தான் கர்மாவில் ஈடுபட்டார்கள். எப்பொழுதும் அவர்கள் ‘நான் தான் செய்கிறேன்’ மற்றும் ‘நான் தான் பலன்களை அனுபவிக்கிறேன்’ எனும் எண்ணம் இல்லாது எந்த காரியத்தையும் செய்தார்கள். கடவுள் செய்தார், கடவுளே பலன்கள் அளிக்கிறார் மற்றும் கடவுளே அவற்றை அனுபவிக்கிறார் என்பதில் அவர்கள் திடமான நம்பிக்கை கொண்டிருந்தனர். நீங்களும் அப்படிப்பட்ட நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

– கீதா வாஹினி (அத்தியாயம் 9)

Leave a comment