9th March 2012

உங்கள் கண்களை ஐந்து நிமிடத்திற்கு மூடிக்கொண்டு உங்கள் முயற்சிகள் உங்களுக்குக் கொடுத்துள்ள இலாபத்தை எண்ணிப் பாருங்கள். ஒரு விருப்பம் எப்பொழுதும் வேறொரு விருப்பத்திற்கு இட்டுச்செல்லும். இது ஒரு முடிவில்லாத சங்கிலி போல சென்றுகொண்டே இருக்கும். முதலில், நீ திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறாய். பின்னர் ஓர் மகனையோ மகளையோ பெறுகிறாய். இதன் பின், அவர்கள் படிப்பு, அவர்கள் திருமணம் என்று மேலும் மேலும் விருப்பப்படுகிறாய். எந்தவித ஆசை நிறைவேரும்போதும் ஒருவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி முழுதாக இருக்காது, நிறைவாக இருக்காது, நிரந்தரமற்று இருக்கும் மற்றும் துக்கம் நிறைந்ததாக இருக்கும். உண்மையான மகிழ்ச்சிக்கான இரகசியம் வைராக்கியத்தில்தான் இருக்கிறது. நாக்கின் மேல் எண்ணெய், கொழுப்பு மற்றும் பிசுக்கு பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அது இவற்றால் பாதிக்கப்படுவது இல்லை. அது பிசுக்கடைவதில்லை. மனமும் வெற்றித் தோல்வியாலோ, இலாப நஷ்டத்தாலோ, சுக துக்கத்தாலோ பாதிக்கப்படாமல் இருக்கப் பழக்கப்பட வேண்டும். கடவுளின் பாதங்களில் சரணாகதி அடையப் பயிலுங்கள். அவரது விருப்பமே நிறைவேறட்டும்.

– தெய்வீக உரை, மார்ச் 3, 1965

Leave a comment