11th March 2012

பக்தன் கடவுளிடம் ஈர்க்கப்படுகிற காந்த முள்ளைப் போன்றவன். ஆனால் அந்த காந்த முள் அருகிலும் இருக்க வேண்டும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் உங்களுக்கு ஆண்டவனின் அருள் கிடைக்கவில்லை என உணர்ந்தால் அதற்குக் காரணம் அந்த காந்த முள் தேவையான அளவுக்கு புனிதமாக இல்லை என்பது தான். கழிவிரக்கத்தின் செயல்முறைகள் மூலம் நீங்கள் மண், தூசி மற்றும் துரு ஆகிய பற்றுதலை அறவே நீக்கவில்லை. மேலும், அருகாமை என்றால் பௌதிகமாக (உடலளவில்) அருகாமை என்று நான் கூறவில்லை. உங்களுக்கும் எனக்கும் இடையேயான தூரத்தை மைல்களைக் கொண்டோ, மீட்டர்களைக் கொண்டோ நான் அளப்பதில்லை. நீங்கள் உடலளவில் என்னைவிட்டு தூரத்தில் இருக்கலாம் ஆனால் மனத்தளவில் என் அருகில் இருக்கலாம். நான் எப்பொழுதும் உங்களுடன், உங்களுள், உங்கள் அருகில் என்றென்றும் இருக்கிறேன். நீங்கள் தான் நான் இருப்பதை உணர்ந்து என் இருப்பை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். நற்குணங்களையும், நல்ல பழக்கங்களையும், நல்ல மனப்பான்மையையும், உயர்ந்த சீலத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதயத்தில் அன்பை நிரப்பிக்கொண்டு, கடவுளின் பெயரை மீண்டும் மீண்டும் ஜபித்து, ஆன்மீக சாதனைகளில் ஈடுபடுங்கள். அவ்வாறிருந்தால், அருள் உங்கள் மேல் பாயும்.

– தெய்வீக உரை, மார்ச் 3, 1965

Leave a comment