12th March 2012

நீங்கள் தியானத்தின் மூலம் புலன்களின் மேல் ஆதிக்கம் பெற முடிவு செய்து கொண்டு, அதனை சீராக, முறையாக, ஒழுங்காக, ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், இடத்திலும் உங்கள் சபலத்திற்கு ஏற்றவாறு மாற்றாமல் பின்பற்றுங்கள். நீங்கள் இஷ்டப்பட்டபடி மாற்றாதீர்கள். ஏனெனில் அது கொடிய விளைவுகளை அளிக்கும். எவர் நிறைய உணவு உண்டு, அதனை ஜீரணிப்பதற்கு சோர்வடைகிறார்களோ, எவர் மிகக் குறைவாகவே உண்டு, சோர்வால் வாடுகிறார்களோ, எவர் மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ தூங்குகிறார்களோ, எவர் தமது ஸௌகர்யத்திற்கு ஏற்றவாறு ஆன்மீக சாதனைகள் செய்கிறார்களோ (அதாவது, அவர்களுக்கு வேறெந்த பணியும் இல்லாமல் உள்ள ஒரு நாள், நீண்ட மணி நேரங்கள் செய்து, மறுநாள் நிறைய பணிகள் இருப்பதால் போதும் போதாததாக செய்து கொண்டு இருக்கிறார்களோ), எவர் தம் உள் இருக்கும் ஆறு எதிரிகளுக்கும் சுதந்திரமாக தம் மேல் கட்டுப்பாட்டை வழங்குகிறார்களோ, எவர் தமது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காமல் இருக்கிறார்களோ, எவர் தமது இதயத்தினுள்ளே உறையும் ஆண்டவனின் மேல் மிகவும் குறைந்த அளவே நம்பிக்கை வைத்துள்ளார்களோ, அப்படிப்பட்டவர்களுக்கு ஆன்மீக சாதனைகள் எந்தப் பலனையும் கண்டிப்பாக தராது.

– கீதா வாஹினி, அத்தியாயம் 11

Leave a comment