13th March 2012

ஒவ்வொருவரும் சந்தோஷத்தின் பின்னே செல்கிறார்கள். நிம்மதியான உத்தியோகம் மற்றும் அதிகாரம் வாய்ந்த பதவிகள் ஆகிவற்றைத் தேடி வேட்டை ஆடுதல், வங்கிகள் மற்றும் வாணிப நிலையங்கள் நிர்மாணித்தல், பெரும் மாளிகைகளின் வளர்ச்சி ஆகியவை சந்தோஷமாக வாழ வேண்டும் எனும் ஆவல் இருப்பதன் ஆதாரமாக விளங்குகின்றன. ஆனால் அமைதியாக வாழவேண்டும் என்று ஆவல் இருப்பதில்லை. மகிழ்ச்சியை அமைதி என்று குழப்பிக்கொள்ளக் கூடாது. செல்வம் பொருந்தி, நல்ல பதவியில் இருந்து கொண்டு, வளமாகவும் அதிகாரபலம் வாய்ந்தவரிடம் அமைதி இருப்பதில்லை. அமைதி வங்கிக்கணக்கேடு (பாஸ்புக்) மற்றும் இரும்புப் பெட்டகங்களில் காணமுடியாது. இந்த உண்மையை நீங்களே கண்டறிந்து உறுதி செய்துகொள்ளலாம். வெடிகுண்டுகளையும் ஆயுதங்களையும் சேமித்து வைத்தால் கூட அமைதியை உறுதிப்படுத்த முடியாது. தீவிரவாதமும், அதனை எதிர்த்துப் போராடுவதும் அமைதியையும் இசைவையும் நிலைநாட்டாது. ஜடப்பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்றும் ஆன்மீக விஷயங்களைவிடத் தாழ்ந்தவை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அமைதியை அடைவதற்கான இரகசியம் எல்லா ஜீவராசிகளுக்கும் சேவை செய்வதிலும், அன்பு பாராட்டுவதிலும் தான் உள்ளது. மனங்கள் வெறுப்பு மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து சுத்தப்படும் வரை சர்வதேச அமைதி கிட்டாது. இவ்விரண்டு தீய குணாதிசயங்களையும் ஒவ்வொரு இதயத்திலிருந்தும் களைந்து, அங்கே அன்பு, சேவை ஆகிய செடிகளை நடுங்கள்.

– தெய்வீக உரை, மார்ச் 22, 1965

Leave a comment