14th March 2012

கீதையில் அர்ஜுனன் கிருஷ்ணனிடம், “மனம் என்ன எளிதாகக் கட்டுப்படும்படி உள்ளதா? மனதைப் போன்று ஒரு யானையால் கூட மனிதனை கட்டி இழுக்க முடியாது. அது தான்தோன்றித்தனத்தின் நாற்றங்காலாக உள்ளது. அதனின் பணிவின்மை, உறுதி மற்றும் பிடிவாதம் மிகுந்த வலிமையானவை. மனம் எந்த ஒரு இடத்திலும் தங்காது. மனதைக் கட்டுப்படுத்துவது காற்றைப் பிடிப்பது போன்றும், நீரைக் கட்டிவைப்பது போன்றும் இருக்கிறது. எவ்வாறு ஒருவரால் மனதைக் கட்டுப்படுத்த முடியும்? எவ்வாறு ஒருவரால் அப்படிப்பட்ட மனத்தைக் கொண்டு ஆன்மீக சாதனைகள் செய்ய முடியும்?” என்று வினவினான். இதனைக் கேட்டு கிருஷ்ணர் நகைத்துக் கொண்டே, “அர்ஜுனா! நீ மனதை நன்றாக வர்ணித்துள்ளாய். அதன் இயல்பை நன்கு அறிந்துள்ளாய். ஆனால் அது முடியாத செயல் அல்ல. மனதை எளிதாகக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். முறையான பயிற்சி (அப்யாஸம்), விடாத விசாரணை (விசாரம்) மற்றும் பற்றில்லாமை (வைராக்கியம்) ஆகியவற்றின் மூலம் மனதை நிச்சயமாக வெற்றி கொள்ள முடியும். சீரான பயிற்சியின் மூலம் எந்த ஒரு செயலையும் செய்யாமல் இருக்க முடியாது. கடவுளின் மேல் நம்பிக்கை கொண்டு, உன்னிடத்தில் சக்தியும், அருளும் இருக்கிறது என்ற திட உறுதியோடு பயிற்சி செய்தால் அனைத்து செயல்களும் எளிதாகிவிடும்”, என்றார்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 11

Leave a comment