Sai Inspires (Tamil Translation): 17th April 2012

The source of all types of sorrow is ignorance (ajnana). The source of ignorance is identification with the body – the delusion that you are the body. This can be removed only by the acquisition of right knowledge. To remove darkness, light is needed; darkness cannot be frightened away, nor can you make it yield by prayer or petition or protest. It will not disappear unless light comes in. When ignorance goes, grief too vanishes. That is why, in the Geeta, Lord Krishna tells Arjuna, “Attach yourself to Me and earn the light of True Knowledge and tread the path of ‘No grief’.”

– Geetha Vahini, Chapter 14

அனைத்து விதமான துன்பங்களுக்கும் மூலமாக இருப்பது அஞ்ஞானம் தான். இந்த தேகத்துடன் அடையாளம் காண்பது அதாவது நீங்கள் தேகம் என்று கருதும் மாயைதான் அஞ்ஞானத்தின் மூலம் ஆகும். சரியான ஞானத்தைப் பெறுவதன் மூலமே இதனை நீக்க முடியும். இருட்டை ஒழிக்க ஒளி தேவை. இருட்டை பயமுறுத்தி விரட்ட முடியாது. பிரார்த்தனையோ முறையீடோ எதிர்ப்போ தெரிவித்து அதனை மசிய வைக்க முடியாது. ஒளி வந்தாலொழிய அது மறையாது. அஞ்ஞானம் விலகும்போது துன்பமும் மறைந்துவிடும். அதனால்தான் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் “என்னுடன் உன்னை இணைத்துக் கொண்டு உண்மையான ஞான ஒளியைப் பெற்று ‘துன்பமின்மை’ என்கிற பாதையில் நடைபோடு” என்று கூறுகிறார்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 14

Leave a comment