Sai Inspires (Tamil Translation): 19th June 2012

It is good to attend discourses on the Geetha by learned scholars. However this is of no use if you lean on a pillar in the lecture hall and doze off. That is to say, it is not the sound, but the meaning that matters. It is not the ear, but the heart that must drink the nectar of Geetha and imbibe its essence. Seek and enjoy noble company (Sathsangam); but along with that, there also needs to be self-examination. Examine yourself to see how much you have succeeded in escaping from the senses, and getting close to God. The mind is like a wild elephant which can be tamed by the repetition of the Lord’s name. Do not feed it with conceit, envy, hatred and greed. Let the name of the Lord echo ever in the ear.

– Divine Discourse, May 22, 1965

கற்றறிந்தவர்களின் கீதைப் பேருரைகளுக்குச் செல்வது நல்லதுதான். ஆனால், அந்த அரங்கின் ஒரு தூணில் மேல் சாய்ந்து கொண்டு தூங்கிவிடுவதில் எவ்விதப் பயனும் இல்லை. அதாவது, ஒலி இல்லை அதன் பொருளே முக்கியமானதாகும். காது அல்ல, உங்கள் இதயம் தான் கீதையின் அமுதை சுவைத்து அதன் சாராம்சத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். சத்சங்கத்தை நாடி மகிழுங்கள். ஆனால், அதனுடன் கூடி சுய-பரிசோதனை செய்து கொள்வதும் தேவைப்படுகிறது. புலன்களிடமிருந்து தப்பித்து, கடவுளிடம் நெருங்குவதில் எந்த அளவு வெற்றி கண்டுள்ளீர்கள் என்பதனை அறிவதற்கு உங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். மனம் மிரண்ட யானை போலுள்ளது. கடவுளின் நாமத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் மூலம் அதனை அடக்க முடியும். அதனை இறுமாப்பு, பொறாமை, வெறுப்பு மற்றும் பேராசை ஆகியவை கொண்டு போஷிக்காதீர்கள். கடவுளின் நாமம் செவிகளில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கட்டும்.

– தெய்வீக உரை, மே 22, 1965

Leave a comment