Sai Inspires (Tamil Translation): 29th June 2012


Krishna has said in the Geetha that ‘Om’ has to be remembered at the moment of death. But when the mind is flitting from one fancy to another, how can the production of a sound ‘Om, Om..’ by the vocal organs be of any benefit? The mere sound will not help you attain liberation. The senses have to be curbed, thoughts have to be one-pointed and the divine glory has to be apprehended. If you postpone sadhana (spiritual practices) till the last moment, you will be like the student who turns over the pages of his textbook for the first time, just before entering the examination hall! If the student has neglected to learn from the teacher, lecture-notes and books, how can anything enter his head on that morning? It will only add to the student’s despair. That is why the Lord advised that one must start early in the search for truth.

– Geetha Vahini, Chapter 15

மரணத் தருவாயில் “ஓம்” என்பதனை நினைவில் கொள்ள வேண்டும் என்று கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார். ஆனால், மனம் ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்குத் தாவிக் கொண்டிருக்கும் பொழுது, “ஓம், ஓம்..” என்கிற ஒலி, குரல் நாளங்களிலிருந்து எழுவதால் என்ன பயன்? வெறும் ஒலி மட்டும் மோக்ஷம் அடைய உங்களுக்கு உதவாது. புலன்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், எண்ணங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு தெய்வத்தின் புகழை உணர வேண்டும். ஆன்மீக சாதனையை கடைசித் தருணம் வரை தாமதப்படுத்தினால், பரீட்சை நடக்கும் அரங்கில் நுழையும் முன் முதல் முறையாகப் பாடப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும் மாணவன் போல் தான் இருப்பீர்கள்! மாணவன் ஆசிரியரிடமிருந்தும், பாடக்குறிப்புகளிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும் படிப்பதைப் புறக்கணித்தால், அந்நாளின் காலை வேளையில் எவ்வாறு எதுவும் நுழையும்? அது மாணவனின் நம்பிக்கையை மேலும் இழக்க வைக்கும். அதனால் தான் பகவான் ஒவ்வொருவரும் உண்மையைக் கண்டறிவதற்கு வெகு சீக்கிரமாகவே துவங்க வேண்டும் என்று அறிவுரைத்துள்ளார்.

– கீதா வாஹினி, அத்தியாயம் 15

Leave a comment