Sai Inspires (Tamil Translation): 14th August 2012

If the mind is immersed in bliss, the body will not suffer from illness. The human body is the vehicle which you have to use for attaining the state of bliss, and so it has to be kept safe and strong for that noble purpose. It is an instrument for spiritual effort, which has been earned by the merit of previous births. Every moment, the body is speedily proceeding towards dissolution, and so time should not be wasted in vain pursuits. Do not get attached to the body; treat it as a wound, which has to be covered by bandage (clothes), treated with drugs (food) and also washed regularly. Then you can get rid of the inordinate attachment, and this is essential because only then will you get the true urge and inspiration to serve others!

– Divine Discourse, September 26, 1965

மனம் ஆனந்தத்தில் திளைத்திருந்தால், உடல் நோயால் அவதிப்படாது. மனித உடல் ஆனந்தம் எனும் நிலையை அடைவதற்காக நீங்கள் உபயோகப்படுத்த வேண்டிய ஒரு சாதனம் என்பதால், அந்த உயர்ந்த குறிக்கோளுக்காக அதனைப் பாதுகாப்பாகவும், திடமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். முற்பிறவிகளின் புண்ணியத்தால் கிடைக்கப்பெற்றதான இது ஆன்மீக முயற்சிக்கு ஒரு கருவியாகும். ஒவ்வொரு கணமும், உடல் நாசத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறதென்பதால், நேரத்தை வீணான நாட்டங்களுக்காக விரையப்படுத்தப்படக் கூடாது. இந்த உடல் மேல் பற்றுதல் கொள்ளாதீர்கள்; புண்கட்டால் (துணி) கட்டி, மருந்தைக் (உணவு) கொண்டு சிகிச்சையளித்து, அடிக்கடி அலம்பப்பட வேண்டிய ஒரு புண்ணாக அதனைக் கருத வேண்டும். அவ்வாறானால், அளவுக்கு மிஞ்சிய பற்றுதலை நீங்கள் தொலைத்துவிட முடியும். பின்னர் தான், பிறருக்குச் சேவை செய்வதற்கு உங்களுக்கு உண்மையான உந்துதலும் ஊக்கமும் கிடைக்கும் என்பதால் இது அத்தியாவசியமானதாகும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 26, 1965

Leave a comment