Sai Inspires (Tamil Translation): 16th August 2012

The same current activates all. To realise this and to merge in that Unity is the purpose of this life in the human body. For this consummation, the seeds of attachment to sense objects has to be scrupulously got rid of. A field may look barren and dead, but the first shower of rain will convert it into a green carpet. The seeds of grass in the soil sprout at the touch of dampness. So too, at the first contact with temptation, the seeds of attachment to sense objects sprout and prevent spiritual growth. Spiritual practices must be done sincerely, with a full sense of responsibility. It must not be reduced to empty routine. Realize that to visualize the Lord as the resident in all and as responsible for everything is the hallmark of devotion.

– Divine Discourse, September 26, 1965

ஒரே ஓட்டமே அனைத்தையும் இயக்குகிறது. இதனை உணர்ந்து அந்த ஒருமையில் கலப்பதுவே மனித உடலிலுள்ள இவ்வாழ்வின் நோக்கமாகும். இந்த முழுமையை அடைவதற்கு, புலன் சார்ந்த பொருட்கள் மேலுள்ள பற்றுதலின் விதைகளைக் கவனமாக விலக்க வேண்டும். ஒரு விளைநிலம் தரிசாகவும் வளமற்றதாகவும் காணப்படலாம். ஆனால் மழையின் முதல் சாரல் அதனை ஒரு பச்சைக் கம்பளமாக மாற்றிவிடும். நிலத்திலுள்ள புல்லின் விதைகள் தம் மீது ஈரம் பட்ட உடனேயே முளைத்து விட்டுவிடும். அதே போல, சபலத்தின் முதல் தொடர்பிலேயே புலன் சார்ந்த பொருட்களின் மீதான பற்றுதலின் விதைகள் முளைத்து ஆன்மீக வளர்ச்சியை தடை செய்கின்றன. ஆன்மீக சாதனைகள் மனமாரவும், முழுப்பொறுப்புணர்ச்சியுடனும் செய்யப்பட வேண்டும். ஒரு சாதாரணச் சடங்காக அது குறைந்துவிடக் கூடாது. கடவுளை அனைவரினுள்ளும் உறைபவர் எனவும், அனைத்திற்கும் பொறுப்பானவர் என்றும் காண்பதே பக்தியின் முத்திரை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 26, 1965

Leave a comment