Sai Inspires (Tamil Translation): 11th September 2012

True nature of a human being is divine. This innate nature is to be found in children; at that stage one is untouched by the pulls and stresses of the senses. So the child revels in its own reality – in joy, peace and love. As you grow make that stage steady, so that you may lead a dharmic (righteous) life. That is your duty. To discover your reality and to dwell in Divine Peace, you need not give up the world and take to asceticism. Detachment is the crucial boon you must win for yourself. You can cultivate it as easily at home as you can in the jungle! In addition, when you fix your mind on truth, you become dearer to God.

– Divine Discourse, 29 September 1965

மனிதனின் உண்மையான இயல்பு தெய்வீகமே. இந்த உள்ளார்ந்த இயல்பை குழந்தைகளிடம் காணலாம்; அந்த நிலையில் புலன்களின் உந்துதல்களால் அது பாதிக்கப்படாமல் இருக்கிறது. ஆகையால் குழந்தை தன் சொந்த உண்மையாகிய மகிழ்ச்சியிலும், அமைதியிலும், அன்பிலும் திளைத்திருக்கிறது. நீங்கள் தர்மத்தின் படியான வாழ்க்கை வாழும் வண்ணம் அந்த நிலையை நிதானமாக்குங்கள். அது உங்கள் கடமையாகும். உங்கள் உண்மையை அறிந்து தெய்வீக அமைதியில் திளைப்பதற்கு நீங்கள் உலகை விடுத்து சந்நியாசம் எடுத்துக் கொள்ளும் அவசியமில்லை. பற்றின்மை எனும் அத்தியாவசியமான வரத்தை நீங்களே உங்களுக்குப் பெற்றுத் தர வேண்டும். அதனை காட்டில் எவ்வளவு எளிதாக வளர்த்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு எளிதாக வீட்டிலும் வளர்த்துக் கொள்ளலாம்! மேலும், உங்கள் மனதை நீங்கள் உண்மையில் நிறுத்தினால் நீங்கள் கடவுளுக்கு மேலும் விருப்பமானவராவீர்கள்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 29, 1965

Leave a comment