Sai Inspires (Tamil Translation): 16th September 2012

Be firm to not discard the one Name and Form you have selected carefully; even if someone speaks ill about them. Hold fast to your chosen deity and save yourselves. At the same time, do not cavil at others’ chosen deities. Undermining the faith of another or disturbing your own – both are wrong. Faith is a plant of slow growth. Its roots go deep into the heart. Silence is the best spiritual practice to guard faith. Hence I insist that you adopt this as the first and most important step in your spiritual journey. The Lord’s feet, eyes and face is compared to the Lotus, because He is like the Lotus – unaffected by the environment it is in. You too, must be smiling at all times, imparting joy to all around you and making their burden lighter.

– Divine Discourse, September 30, 1965

யாரேனும் தவறாகப் பேசினாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள நாமத்தையும் ரூபத்தையும் தவறவிடாமல் திடமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள தெய்வத்தை நன்றாகப் பற்றிக் கொண்டு உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதே சமயம், பிறர் தேர்ந்தெடுத்துள்ள தெய்வத்தை நிந்திக்காதீர்கள். பிறரின் நம்பிக்கையைப் பற்றித் தவறாகப் பேசுவது உங்கள் நம்பிக்கையைத் தவறவிடுவது ஆகிய இரண்டுமே தவறானவையாகும். நம்பிக்கை என்பது மெதுவாக வளரும் செடியைப் போன்றதாகும். அதன் வேர்கள் இதயத்தில் ஆழமாக ஊடுறுவும். அமைதியே நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்வதற்கான சிறந்த ஆன்மீக சாதனையாகும். அதனால் தான், நான் உங்களை, இதனை ஆன்மீகப் பயணத்தின் முதல் மற்றும் முக்கியமான அடியாகக் கொள்ள வற்புறுத்துகிறேன். கடவுளின் பாதங்கள், கண்கள் மற்றும் முகம் தாமரைக்கு ஒப்பிடப்படுகிறது. ஏனெனில், அது தன்னுடையச் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படுவதில்லை. நீங்களும், எப்பொழுதும் புன்முறுவலுடன், உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்வித்து அவர்களின் சுமையைக் குறைக்க வேண்டும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 30, 1965

Leave a comment