Sai Inspires (Tamil Translation): 17th September 2012

When a man is suffering from the effects of cobra-bite, they give him chillies to chew; the idea is that the ailing person will not feel the spicy taste, if the poison is still in his system. So too, when the poison of worldly sensualism is there, worship, japam (contemplation), and dhyanam (meditation) – all of this will taste drab and dismal. Above all, insist on the senses obeying you when you command them to desist from dragging you. Or else you are like a car without a brake. With the senses under control, your intelligence will become clear to reflect the Glory of God that pervades the Universe. That is the teaching of the scriptures. Steady faith alone can help you earn victory. Hold on till the realization is rewarded to you.

– Divine Discourse, October 1, 1965

ஒரு மனிதன் நாகத்தால் கடிபட்டிருந்தால், அவன் மெல்வதற்கு மிளகாய் கொடுப்பார்கள். ஏனெனில், அந்த விஷம் பாதிக்கப்பட்ட நபரினுள் இருக்கும்வரை அவனுக்கு அதன் காரம் தெரியாது. அதே போல, உலக சுகம் எனும் விஷம் இருக்கும் பொழுது, வழிபாடு, ஜபம் மற்றும் தியானம் ஆகிய அனைத்தும் மந்தமாகவும் சுவையற்றும் இருக்கும். அனைத்திற்கும் மேலாக, உங்கள் புலன்கள், உங்களைத் இழுக்காமல் உங்கள் ஆணைகளின்படி நடக்குமாறு இருங்கள். இல்லையெனில் நீங்கள் ப்ரேக் இல்லாத ஊர்தியைப் போல் தான் இருப்பீர்கள். புலன்கள் கட்டுக்குள் இருக்கும் பொழுது, பிரபஞ்சம் தழுவியுள்ள கடவுளின் மகிமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் உங்கள் புத்தி தெளிவாகும். அதுவே புனித நூல்களின் உபதேசம். திடமான நம்பிக்கை மட்டுமே உங்களை வெற்றி பெறச் செய்யும். இந்த சாக்ஷாத்காரம் உங்களுக்கு அளிக்கப்படும் வரை உறுதியாக இருங்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர் 1, 1965

Leave a comment