Sai Inspires (Tamil Translation): 18th September 2012

The word Dhanam (wealth) means any valued possession, an object of affection. It does not merely mean riches and precious metals. The most valued possession of human beings is Self-Knowledge. Arjuna earned this, and hence was called ‘Dhananjaya’. Anyone can earn riches or money – even crooks, dacoits and pirates amass money. True wealth, worthy of deposits in the Divine Bank, is earned only by those who struggle to be virtuous, detached, humble and holy. Do not underestimate the value of this deposit. Your meritorious noble deeds, your purity, the selfless love that you manifest with your fellow beings – bring to God these precious commodities and He will readily accept them as deposits to your credit.

– Divine Discourse, July 14, 1966

தனம் (செல்வம்) என்ற சொல்லிற்கு நாம் மதிக்கும், தக்க வைத்துக் கொள்ள விரும்பும் பொருள் என்று பொருள். அது பொருட்செல்வங்களையும் மதிப்பு வாய்ந்த உலோகங்களையும் மட்டும் குறிப்பதில்லை. மனிதர்களின் மிகவும் மதிப்பு வாய்ந்தது சுய-ஞானமே. அர்ஜுனன் இதனைப் பெற்றதனால் “தனஞ்செயன்” என அழைக்கப்பட்டான். தவறான வழியில் செல்பவர்கள், வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள், கடற்கொள்ளையர்கள் ஆகியவர்களும் கூட பணம் சேர்க்கிறார்கள். நல்லவர்களாக, பற்றின்றி, பணிவுடன், புனிதமாக இருப்பதற்கு போராடுபவர்களால் மட்டுமே உண்மையான செல்வமாகியவற்றை, தெய்வீக வங்கியில் சேமிக்கப்படத் தகுதியானவற்றை ஈட்டமுடியும். இந்த வைப்பீட்டின் மதிப்பைக் குறைவாக மதிப்பிடாதீர்கள். உங்கள் புண்ணிய நற்செயல்கள், உங்கள் தூய்மை, சக ஜீவராசிகளிடம் நீங்கள்  காட்டும் சுயநலமில்லாத அன்பு ஆகியவற்றைக் கடவுளிடம் விலை மதிக்க முடியாதப் பொருட்களாக நீங்கள் எடுத்துச் சென்றால், உடனடியாக அவற்றை உங்கள் கணக்கில் வைப்பீடாகப் பெற்றுக்கொள்வார்.

– தெய்வீக உரை, ஜூலை 14, 1966

Leave a comment