Sai Inspires (Tamil Translation): 30th September 2012

You must expand your love to as wide a circle as possible. That is how kulaabhimanam, mathaabhimanam and deshaabimanam – affection for one’s community, one’s religion and one’s country becomes desirable and commendable. If, instead of love, these create hatred towards other communities, religions and countries, then they become poisonous. Love your religion, such that you may practice it with greater faith! When each one practices one’s religion with faith, there can be no hatred in this world, for all religions are built on the principle of universal love. Let the purity which you are manifest itself; endeavour to express it in your activities – that is what pleases Me and wins My grace.

– Divine Discourse, October 2, 1965

உங்கள் அன்பை முடிந்தளவு அகன்ற வட்டத்திற்கு விரிவடையச் செய்ய வேண்டும். அவ்வாறானால் தான் சமுதாயத்தின் பால் இருக்கும் பற்றான குலாபிமானமும், மதத்தின் பால் இருக்கும் பற்றான மதாபிமானமும், தேசத்தின் பால் இருக்கும் பற்றான தேசாபிமானமும் விரும்பத்தக்கதாகவும் பாராட்டத்தக்கதாகவும் இருக்கும். அன்பிற்கு பதிலாக இவை பிற சமுதாயங்களின் மேலும், பிற மதங்களின் மேலும், பிற தேசங்களின் மேலும் வெறுப்பை உருவாக்கினால், அவை விஷமாக மாறிவிடும். நீங்கள் மேலும் உயர்ந்த நம்பிக்கை கொண்டு கடைப்பிடிப்பதற்காக உங்கள் மதத்தை விரும்புங்கள்! ஒவ்வொருவரும் தத்தம் மதங்களை நம்பிக்கையுடன் பின்பற்றினால், இவ்வுலகில் வெறுப்பே இருக்காது. ஏனெனில், அனைத்து மதங்களும் பிரபஞ்சம் தழுவிய அன்பு எனும் கோட்பாட்டின் மேல் தான் எழுப்பப்பட்டுள்ளன. உங்கள் புனிதத்தன்மை வெளிப்படட்டும். அதனை உங்கள் செயல்களில் உணர்த்த முயலுங்கள் – இதுவே என்னை மகிழ வைத்து என் அருளைப் பெறச் செய்யும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 2, 1965

Leave a comment