Monthly Archives: October, 2012

Sai Inspires (Tamil Translation): 31st October 2012

Millions read and write; millions have qualified for degrees and have become experts and specialists. This only means that they are efficient collectors of information or big encyclopaedias of general knowledge! But none can say, who one really is. People try to fly millions of miles into space, but they are powerless to travel even half an inch into their own inner realm and discover what lies therein. What is the use then, of the vast amount of exertion and energy they have spent for their education? True learning must be like that of ancient India, where knowledge and scientific temper was developed and practised along with sense and mind control, and character development. That will be beneficial to the individual, the society and lead to the progressive unfoldment of the Divinity present in every being.

– Sathya Sai Speaks, Volume 6, Chapter 25

இலட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள்; இலட்சக்கணக்கானவர்கள் தகுதி வாய்ந்த பட்டங்கள் பெற்று, நிபுணர்களாகவும், வல்லுநர்களாகவும் மாறியுள்ளனர். அவர்கள் திறமையாக தகவல்களைச் சேர்ப்பவர்களாகவோ, அறிவுத் தகவல் திரட்டு களஞ்சியங்களாகவோ உள்ளார்கள் என்று இதிலிருந்து புலப்படுகிறது! ஆனால் யாராலும் தாம் யார் என்று சரியாகச் சொல்ல முடிவதில்லை. மக்கள் பல இலட்சகணக்கான மைல்கள் ஆகாயத்தினுள் பறக்க முற்படுகிறார்கள். ஆனால் தம் உட்புற சாம்ராஜ்யத்தினுள் ஒரு அங்குலம் கூட செல்ல சக்தியில்லாமல், அதனுள் என்ன உள்ளது என்று காண முடிவதில்லை. அவர்கள் கற்பதற்குச் செலவு செய்த பெரும் உழைப்பினாலும், சக்தியினாலும் என்ன பயன்? உண்மையான கல்வி என்பது பழங்கால பாரதத்தில் இருந்ததைப் போல் அறிவும், விஞ்ஞான மனநிலையும் வளர்க்கப்பட்டு, புலனடக்கம், மனக்கட்டுப்பாடு மற்றும் நற்குண மேம்பாடு ஆகியவற்றுடன் பின்பற்றப்பட்டன. அது தனி மனிதருக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக இருந்து, ஒவ்வொரு ஜீவனுள்ளும் உள்ள தெய்வீகத்தின்பால் படிப்படியாக இட்டுச் செல்லும்.

– சாயி அருளமுதம், பாகம் 6, அத்தியாயம் 25

Sai Inspires (Tamil Translation): 30th October 2012

Proceed ever towards strength (balam). Do not take to untruth, wickedness, and crookedness – all of which denotes a fundamental fatal trait of cowardice and weakness (bala heenam). Weakness is born of accepting as true, a lower image of yourself than what the facts warrant. That is the main mistake. You believe you are the husk, but you really are the kernel. All spiritual practices must be directed to the removal of the husk and the revelation of the kernel. So long as you say, ”I am so and so”, there is bound to be fear. Once you say and feel “I am Divine” (Aham Brahmasmi), you get unconquerable strength.

– Divine Discourse, January 14, 1964

என்றும் பலத்தை நோக்கியே செல்லுங்கள். பொய்மை, சூழ்ச்சி மற்றும் நேர்மையின்மை ஆகியவையான, அடிப்படையாக அழிவைத் தரக்கூடிய கோழைத்தனம் மற்றும் பலவீனம் ஆகிய குணாதிசயங்களை பின்பற்றாதீர்கள். உங்களை உண்மைக்குப் புறம்பாக கீழ்த்தரமாகக் உங்களை அடையாளம் காட்டிக் கொள்வதிலிருந்து தான் பலவீனம் தோன்றுகிறது. அதுவே முக்கியத் தவறாகும். நீங்கள் உள்ளிருக்கும் கொப்பரையாக விளங்கும் உங்களை நீங்கள் வெளியிலிருக்கும் நார் எனக் கருதிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நாரினை அகற்றி உள்ளிருக்கும் கொப்பரை வெளிப்படும்படியாக அனைத்து ஆன்மீகப் பயிற்சிகளும் இயக்கப்பட வேண்டும். “நான் இவர்; நான் அவர்” என்று நீங்கள் கூறிக் கொண்டிருக்கும் வரையில் நீங்கள் பயம் கொள்ள வேண்டியிருக்கலாம். நீங்கள் “நான் தெய்வீகமே” (அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்று கூறி உணர்ந்தால் நீங்கள் வெல்லப்பட முடியாத பலத்தைப் பெறுவீர்கள்.

– தெய்வீக உரை, ஜனவரி 14, 1964

Sai Inspires (Tamil Translation): 29th October 2012

Illusion is like a fierce dog that will not allow anyone to near its Master, God. You can easily manage to by-pass it by assuming the Form of the Master which is called Sarupyam or by calling out to the Master so loudly that He comes down and accompanies you into the house; that is to say, by winning His Grace as proximity, Saameepyam. Illusion is His pet and so will not harm you, if He orders not to. Illusion is the blemish that affects the mind. The Master comes to save not just one good person from Illusion, but the whole of mankind. Of course, He has to come assuming a form that man can love, revere, and appreciate.

– Divine Discourse, January 1, 1964

மாயையானது ஒருவரைத் தன் எஜமானரிடம் அண்டவிடாத வெறி நாய் போன்றதாகும். சாரூப்யம் எனப்படும் அதன் எஜமானரைப் போன்ற உருவம் கொண்டோ, எஜமானரைக் கத்திக் கீழே வரவைத்து அவருடன் வீட்டிற்குள் உள்ளே செல்லவோ அதாவது சாமீப்யம் என்ற அவர் அருளை அருகாமையாக வென்றோ நீங்கள் அதனை எளிதாகத் தவிர்க்க முடியும். மாயை என்பது அவருடையச் செல்லப்பிராணி ஆகும். ஆகையால், அவர் அதனுக்குக் கட்டளையிட்டால் அது உனக்குத் தீங்கு விளைவிக்காது. மாயை, மனதை பாதிக்கும் கறையாகும். எஜமானர் ஒரு நல்ல மனிதரை மட்டுமே மாயையிலிருந்து காப்பாற்ற வருவதில்லை, முழு மானிடத்தையும் காப்பாற்ற வருகிறார். ஐயமின்றி மனிதன் அன்பு செலுத்தும்படியாக, போற்றும்படியாக பாராட்டும்படியாக, ஒரு உருவம் கொண்டு வந்துள்ளார்.

– தெய்வீக உரை, ஜனவரி 1, 1964

Sai Inspires (Tamil Translation): 28th October 2012

Action must not be felt as a burden. No action which helps your progress will weigh heavily on you. It is only when you go counter to your innermost nature, that you feel it as a burden. If you focus only on the worldly gains, a time will come when you look back on your achievements and will yourself sigh at the futility of it. Entrust your mind the task of serving your Lord, before it is too late. Let Him shape it as He likes, and your mind will be tamed. You don’t have to hand over to the goldsmith an ornament that is quite beautiful. You give him broken and dented ones, or those that have gone out of fashion! So too willingly give the Lord your mind that certainly needs repair, if not complete reconstruction!

– Divine Discourse, January 1, 1964

செயல் புரிதல் சுமையாகக் கருதப்படக்கூடாது. உங்களுக்கு முன்னேற்றம் அளிக்கக் கூடிய எந்த செயலும் உங்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது. உங்கள் உள் இயல்பிற்குப் புறம்பாகச் சென்றால் மட்டுமே அதனைச் சுமையாகக் கருதுவீர்கள். நீங்கள் உலகியலான இலாபங்கள் மேல் மட்டுமே கவனம் கொண்டிருந்தால், நீங்கள் சாதித்தவற்றையெல்லாம் பிற்காலத்தில் திரும்பிப் பார்க்கும் பொழுது அவற்றின் அற்பத்தைக் கண்டு நீங்களே பெருமூச்சுவிடுவீர்கள். தாமதமாகும் முன்னரே, உங்கள் மனதிற்குக் கடவுளுக்குச் சேவை செய்யும் பணியை அளியுங்கள். அவர் அதனைத் தன் விருப்பம்போல் உருவேற்றி, உங்கள் மனத்தை அடிபணியச் செய்யட்டும். முன்னதாகவே வெகு அழகாக இருக்கும் நகையைப் பொற்கொல்லனிடம் கொடுக்கத் தேவையில்லை. அவரிடம் உடைந்தவற்றையோ, நெளிந்தவற்றையோ, பழைய பாணியில் இருப்பவற்றையோ தான் அளிக்கிறீர்கள்! அதே போல, முழுதாக மறு சீரமைப்புச் செய்யப்பட வேண்டியதாக இல்லாவிடினும், பழுது பார்க்கப்பட வேண்டிய உங்கள் மனதை இறைவனிடம் விருப்பத்துடன் அளித்துவிடுங்கள்.

– தெய்வீக உரை, ஜனவரி 1, 1964

Sai Inspires (Tamil Translation): 27th October 2012

Bhagavan Sri Sathya Sai Baba

The root of education fulfills itself in the fruit of virtue. Earning a fat salary is not the chief thing one should expect from education. The goal should be the cultivation of virtues. Education is the root of the tree of life. The affection which the individual develops towards kith and kin, the objects of the world, the ideals and the goals, the fancies and fashions – these form the branches and twigs. The blossoms which the tree produces are the intelligence and its manifestations. These flower blossoms yield the fruit of joy (anandam). The sweetness this fruit confers is character. The essence of character is virtue. It is in virtue that the tree of life justifies itself.

– Sathya Sai Speaks, Volume 6, Chapter 25

கல்வியின் வேர் நற்குணம் எனும் பழமாக நிறைவடைகிறது. கல்வியினால் அதிகமான சம்பளம் பெறுவதையே முக்கியப் பொருளாக கொள்ளக்கூடாது. நற்குணங்களைப் வளர்ப்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும். கல்வி என்பது வாழ்க்கை எனும் மரத்தின் வேராக உள்ளது. ஒரு தனி மனிதன் உற்றார் உறவினருடனும், உலகப் பொருட்கள் மீதும், இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்கள் மீதும், ஆடம்பரங்கள் மற்றும் நாகரீகங்கள் மீதும் ஒருவர் கொள்ளும் பாசமானது அம்மரத்தின் கிளைகள் மற்றும் குச்சிகள் ஆகும். புத்தி மற்றும் அதன் படைப்புகளே அந்த மரம் உருவாக்கும் மலர்கள் ஆகும். இந்தப் பூக்கள் ஆனந்தம் எனும் பழத்தை நல்குகின்றன. இந்தப் பழம் அளிக்கும் இனிமையே நன்னடத்தையாகும். நன்னடத்தையின் சாரம் நற்குணமே. அந்த நற்குணம் மட்டுமே வாழ்க்கை எனும் மரத்தை பூரணப்படுத்துகிறது.

– சாயி அருளமுதம், பாகம் 6, அத்தியாயம் 25

Sai Inspires (Tamil Translation): 26th October 2012

People are blinded by the objective world and they believe that world to be real, meaningful and worthy of pursuit. The cataract grows in the eye and robs it of its efficiency. Ignorance is the cataract of the inner eye. It hides the true vision and blinds the intellect such that one cannot see that Divinity is their real nature. Ignorance misleads you and makes you believe that you are an ordinary human (manava), when in reality you are God (Madhava). Of what use is the eye, when the vision is not correct? You have focussed too long on riches, status, children, relatives, fame and standard of living. All of these are of minor interest and momentary value. Fix your urge on the Truth, Eternal, the Real, the Pure and Immovable (Nithya, Sathya, Nirmala and Nischala) – the Divinity present within you and around you.

– Divine Discourse, January 1, 1964

மக்கள் இந்த பௌதிக உலகத்தினால் குருடாக்கப்பட்டு, அதனை உண்மை என்றும், அர்த்தமுள்ளது என்றும், பின்பற்றத் தக்கது என்றும் நம்புகிறார்கள். கண்புறை கண்ணில் வளர்ந்து அதன் செயல்திறனைக் குலைக்கின்றது. அஞ்ஞானம் தான் உட்கண்ணின் புறை ஆகும். அது உண்மையான பார்வையை மறைத்து, தம் உண்மை இயல்பான தெய்வீகத்தை ஒருவரால் பார்க்க முடியாதவாறு புத்தியைக் குருடாக்குகிறது. அஞ்ஞானம் உங்களைத் தவறாக வழிநடத்தி நீங்கள் உண்மையில் கடவுள் (மாதவன்) தான் என்று இருக்கையில் நீங்கள் ஒரு சாதாரண மனிதன் (மானவன்) என நம்ப வைக்கிறது. பார்வை சரியாக இல்லாவிடில் கண் எதற்கு? நீங்கள் வெகு காலமாக செல்வங்கள், அந்தஸ்து, பிள்ளைச் செல்வம், உறவினர்கள், புகழ் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் மேல் கவனம் செலுத்தியுள்ளீர்கள். இவையனைத்தும் அற்பமானவை, நிலையில்லாத மதிப்பு கொண்டவை. சத்தியமான, நித்தியமான, நிர்மலமான, அசையாததான (நித்ய, சத்ய, நிர்மல, நிஸ்சல), உங்களுள்ளும், உங்களைச் சுற்றியும் உள்ள தெய்வீகத்தின் பால் உங்கள் உந்துதலை நிலை நிறுத்துங்கள்.

– தெய்வீக உரை, ஜனவரி 1, 1964

Sai Inspires (Tamil Translation): 25th October 2012

Believe in your experience; confidently accept whatever has given you peace and joy. This is the basis for faith. Also, gather wisdom from wherever you can acquire it. Listen to the good things that teachers of different denominations elaborate upon. Weigh in your own mind, against your own experience, the teachings you have heard. Listening (Shravanam) should be followed and confirmed by Reflection (Mananam). You must think through the background, implications, reservations, and limitations of what you have been told. Then comes Nididhyaasana – you should meditate on the truth that you have painstakingly garnered over the years and plant this wisdom deep down in your consciousness and let it become part of yourself.

– Divine Discourse, September 8, 1966

உங்கள் அனுபவத்தின் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்; உங்களுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் அளித்த எதனையும் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். இதுவே நம்பிக்கைக்கு ஆதாரமாகும். மேலும், எங்கிருந்தெல்லாம் ஞானத்தை நீங்கள் அடையலாமோ அங்கிருந்தெல்லாம் அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள். பல்வேறு தரப்பட்ட ஆசிரியர்கள் விரிவுரைக்கும் நல்ல விஷயங்களைக் கேளுங்கள். உங்கள் மனதிலேயே உங்கள் அனுபவத்தைப் பொறுத்து நீங்கள் கேட்ட உபதேசங்களை எடை போட்டுப் பாருங்கள். கேட்பது (ச்ரவணம்) என்பது ஆழ்ந்த சிந்தனையின் (மனனம்) மூலம் பின்பற்றப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். உங்களுக்குச் சொல்லப்பட்டவற்றின் பின்னணியும், விளைவுகளும், அனுமானங்களும், வரம்பும் பற்றி நீங்கள் நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். அதன் பின் நிதித்யாஸனம் வருகின்றது – நீங்கள் வருடக்கணக்காக கஷ்டப்பட்டு அடைந்த சத்தியத்தின் மேல் தியானித்து, இந்த ஞானம் உங்கள் ஆழ் உணர்வில் ஆழமாக ஊன்றப்பட்டு, அது உங்களில் ஒரு பகுதியாகவே மாறட்டும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 8, 1966

Sai Inspires (Tamil Translation): 24th October 2012

Many often believe and state in the spirit of surrender: “I offer to You my body, my mind, my possessions, my all.” This is incorrect and is a sign of ignorance. It concedes that you and God are distinct entities. God is not separate from you, for God is in all, everywhere, at all times. (Ishwarassarva-bhoothaanaam). How then can you or God be apart? To see God in everything, everywhere, at all times, is true surrender (Sharanaagathi). Repetition of mantras (holy formulae) and platform speeches on holy texts alone is not true devotion. The real devotee is one whose deeds are in accordance with the words of advice they utter. Devotion cannot tolerate in a devotee, the slightest trace of envy or jealousy. Make your daily life holy and pure. Render your life worth-while through service to man and service to society. That is the most important aspect of surrendering the self.

– Divine Discourse, October 8, 1981

“நான் உங்களுக்கு என் உடல், என் மனம் , என் அனைத்து சொத்துகள் மற்றும் என் அனைத்தையும் அர்ப்பணிக்கிறேன்” என்று பலர் நம்பி, சரணாகதி எனும் உணர்வின் அடிப்படையில் கூறுகிறார்கள். இது தவறு. மேலும் அறியாமையின் அடையாளம். அவ்வாறானால் நீங்களும் கடவுளும் வெவ்வேறு வஸ்துக்கள் என்று ஆகிறது. கடவுள் உங்களிடம் இருந்து வேறுபட்டவர் இல்லை, ஏனெனில் கடவுள் அனைத்திலும், அனைத்து இடங்களிலும், அனைத்து நேரங்களிலும் உள்ளார். (ஈஸ்வரஸ் ஸர்வ பூதாநாம்). அவ்வாறிருக்கையில், நீங்களும் கடவுளும் வெவ்வேறாக எப்படியிருக்க முடியும்? கடவுளை அனைத்திலும், எங்கும், எக்கணமும் காண்பதே உண்மையான சரணாகதி ஆகும். மந்திரங்களை ஜபிப்பது மற்றும் ஆன்மீக நூல்களைப் பற்றி மேடையில் உரையாற்றுவதும் மட்டுமே உண்மையான பக்தியல்ல. உண்மையான பக்தன் என்பவன் தன் உபதேசங்களின் படி செயல்கள் புரிபவனே. பக்தனுள் பகைமையும் பொறாமையும் சிறிதளவு இருந்தாலும் கூட உண்மையான பக்தியால் பொறுக்க முடியாது. உங்கள் தினசரி வாழ்க்கையைப் புனிதமாகவும் சுத்தமாகவும் ஆக்குங்கள். மனிதனுக்கு சேவை செய்வதன் மூலமும், சமுதாயத்திற்கு சேவை செய்வதன் மூலமும் உங்கள் வாழ்க்கையைப் பயனுடையதாக மாற்றுங்கள். அதுவே சரணடைவதில் மிகவும் முக்கியமான அம்சமாகும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 8, 1981

Sai Inspires (Tamil Translation): 23rd October 2012

Your heart is the ceremonial altar; your body is the fire place; your hair is the holy grass, darbha; wishes are the fuel-sticks with which the fire is fed; desire is the ghee that is poured into the fire to make it burst into flame; anger is the sacrificial animal; the fire is the tapas you accomplish. People sometimes interpret tapas as ascetic practices like standing on one leg, and so on. No, tapas is not physical contortion. It is the complete and correct coordination of thought, word and deed. When all words emanating from you are sweet, your breath becomes Rig Veda. When you restrict what you listen to and prefer only sweet speech, all that you hear becomes Saama gaana. When you do only sweet deeds, all that you do is Yajur homa. Thus, you will be performing every day the Vedhapurusha Yajna, the yajna which propitiates the Supreme Vedic Being.

– Divine Discourse, October 2, 1981

உங்கள் இதயமே புனிதமான பீடம் ஆகும்; உங்கள் உடலே யாக குண்டம் ஆகும்; உங்கள் தலைமுடியே தர்பைப் புல்லாகும்; விருப்பங்களே நெருப்பிற்கு இரையாக இடப்படும் குச்சிகளாகும்; ஆசையே அந்தத் தீயைக் கொழுந்துவிட்டு எரிய விடக் கூடிய நெய்யாகும்; கோபமே பலியிடப்படும் மிருகமாகும்; நீங்கள் செய்யும் தவமே நெருப்பாகும். மக்கள் சில நேரங்களில் தவத்தை ஒற்றைக் காலில் நிற்பது போன்ற கடுமையான செயல்கள் என்று பொருள் கொள்கிறார்கள். அது தவறு. தவம் என்பது உடலை வருத்துவதல்ல. தவம் என்பது எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றின் பூரணமான, சரியான இசைவாகும். உங்களிடம் தோன்றும் அனைத்து சொற்களும் இனிமையாக இருந்தால் உங்கள் மூச்சே ரிக்வேதம் ஆகின்றது. நீங்கள் கேட்பவற்றின் மேல் கட்டுப்பாடு கொண்டு, இனிய பேச்சையே நீங்கள் விரும்பினால் நீங்கள் கேட்கும் அனைத்தும் சாமகானம் ஆகின்றது. நீங்கள் இனிமை பயக்கும் செயல்களை மட்டுமே செய்யும் பொழுது, நீங்கள் செய்யும் அனைத்தும் யஜுர் ஹோமம் ஆகின்றது. இவ்வாறாக, நீங்கள் ஒவ்வொரு நாளும் பரம்பொருளான வேத புருஷனை மகிழ்விக்கச் செய்யும் வேத புருஷ யக்ஞத்தை நடத்துவீர்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர் 2, 1981

Sai Inspires (Tamil Translation): 22nd October 2012

The term Yajna means ‘any activity dedicated to the glory of God’. Such activity can be done in all climes, in all realms, and by all races. The key to success is ‘Dedication’. Without it, there will inevitably arise anxiety, fear and faction. Every activity in the world is directed unto God, whether you know it or not. If God is not the inspirer and motivator, how can the Universe be moving in harmony, wheeling so smoothly, without chaos and anarchy? Those who are aware of this fact and accept it, experience thrill and joy in witnessing it! Anyone who lives in the constant presence of God and does all acts dedicated to God is continuously engaged in Yajna.

– Divine Discourse, October 11, 1972

யக்ஞம் எனும் சொல் ‘கடவுளின் மகிமைக்கு அர்ப்பணிக்கப்பட்ட செயல்’ எனப் பொருள்படும். அப்படிப்பட்ட செயல் அனைத்து நாடுகளிலும், அனைத்து ஆதிக்கங்களிலும், அனைத்து இனத்தவராலும் செய்யப்படலாம். வெற்றிக்கு மிக முக்கியமானது இந்த ‘அர்ப்பணிப்பு’ ஆகும். அது இல்லாமல், கவலையும், பயமும், கலகமும் கண்டிப்பாக ஏற்படும். நீங்கள் அறிந்து கொண்டிருந்தாலும் இல்லாவிடினும் இவ்வுலகின் ஒவ்வொரு செயலும் இறைவன் பால் தான் இயக்கப்படுகின்றன. இறைவன் ஊக்கமூட்டுபவராகவும், ஆர்வமூட்டுபவராகவும் இல்லாவிடில், இவ்வாறு இப்பிரபஞ்சம் இணக்கத்துடன், குழப்பமின்றி, ஒழுங்கின்மையின்றி, இவ்வளவு சீராக நகர்ந்து கொண்டிருக்க முடியுமா? இந்த உண்மையை அறிந்து, ஏற்றுக் கொண்டவர்கள், அதனைக் காண்கையில் சிலிர்ப்பும், மகிழ்ச்சியும் அடைகிறார்கள்! இறைவனின் நிரந்தர அண்மையில் இருந்து, தம் செயல்கள் அனைத்தையும் அவருக்கு அர்ப்பணிப்பவர்கள் எப்பொழுதும் யக்ஞத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர் 11, 1972