Monthly Archives: October, 2012

Sai Inspires (Tamil Translation): 21st October 2012

Obstacles that come in the way are often treated with a certain amount of resentment by the pilgrims on the spiritual path. But these tests are to be treated as a means of ensuring safety. You drive a nail into the wall to place a picture thereon; but before hanging the photo, you try to see whether the nail has been well driven by shaking it; when you are certain it does not move a bit even when all your strength is used, you have the confidence to hang the picture on it. You must welcome tests because it gives you confidence and it ensures promotion.

– Divine Discourse, September 8, 1966

ஆன்மீகப் பாதையில் பிரயாணிகள் சந்திக்கும் தடங்கல்கள் பெரும்பாலும் சற்று கோபத்துடன் தான் எதிர்கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்த பரீட்சைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் சாதனங்களாக எதிர்கொள்ளப்பட வேண்டும். சுவற்றில் ஒரு சித்திரத்தை தொங்கவிடுவதற்காக நீங்கள் ஒரு ஆணியை அறைகிறீர்கள். ஆனால் அந்த ஆணி சரியாக ஊன்றியிருக்கிறதா என்று அறிய அதனை அசைத்துப் பார்க்கிறீர்கள். உங்கள் அனைத்து பலத்தையும் பிரயோகித்தும் அது சிறிதளவும் அசையாமல் இருக்கிறது என்ற நம்பிக்கை தோன்றியவுடன், அதன் மேல் சித்திரத்தை மாட்டுவதற்கான நம்பிக்கை உங்களுள் தோன்றுகிறது. பரிட்சைகள் உங்களுக்கு நம்பிக்கை அளித்து, முன்னேற்றத்தை உறுதிபடுத்துவதால் அவற்றை நீங்கள் வரவேற்க வேண்டும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 8, 1966

Sai Inspires (Tamil Translation): 20th October 2012

All water is not potable. The stagnant pool is to be avoided, the flowing river is better. Select safe and pure water to drink. Use the mosquito net, but see that mosquitoes do not enter into the net, when you go to bed. Keep the mosquitoes away; do not imprison them inside the net. Sail in the boat that floats on water, but do not allow the water to enter the boat. So too, be in worldly life, but do not allow it to get into you. The lotus born in slime and mud rises up through water and lifts its head high above the water. It refuses to get wet though water is the element which gives it life. Be like the lotus.

– Divine Discourse, January 1, 1964

அனைத்து நீரும் குடிநீர் அல்ல. தேங்கி நிற்கும் குட்டை ஒதுக்கப்பட வேண்டும், ஓடும் ஆறு தான் மேலானது. பாதுகாப்பான, சுத்தப்படுத்தப்பட்ட நீரையே குடிப்பதற்குத் தேர்ந்தெடுங்கள். கொசுவலையை பயன்படுத்துங்கள். ஆனால் படுப்பதற்கு அதனுள் செல்லும் பொழுது அதனுள் கொசுக்கள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசுக்களை அண்டையில் விடாதீர்கள். அவற்றை வலைக்குள் சிறைப்படுத்தாதீர்கள். நீரின் மேல் மிதக்கும் படகில் சவாரி செய்யுங்கள். ஆனால் படகினுள் நீர் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல, உலக வாழ்க்கையில் இருங்கள் ஆனால் அதனை உங்களுள் நுழைய அனுமதிக்காதீர்கள். சகதியிலும் மண்ணிலும் தோன்றிய தாமரை மலர், நீரின் வழியாக வெளி வந்து, அதன் தலையை நீரின் மட்டத்திலிருந்து வெகு உயரத்திற்குக் கொண்டு வருகிறது. நீர் எனும் பொருள் அதற்கு வாழ்வளித்தாலும் அது தன்னை நனைப்பதற்கு அனுமதிப்பதில்லை. தாமரை மலர் போல் இருங்கள்.

– தெய்வீக உரை, ஜனவரி 1, 1964

Sai Inspires (Tamil Translation): 19th October 2012

Cleanse the heart with the water of love and the detergents of prayer and contrition, so that the stains of desire will be removed. Then God will pour His Grace into it. If you yearn for God, you should give up attachment to the external world and to the body (Loka bhranthi and Deha bhranthi). There is no use trying to put one foot in one boat and another in a different boat. You may have been a spiritual aspirant for 20 or 25 years, but if you worry more about physical needs and comforts than meditation and spiritual progress, then the years of practice is of no value, as there has been no progress. The waving of the camphor flame (aarti) at the end of the prayer or bhajan session is to remind you that your sensual cravings must be burnt away without leaving any trace behind. You must offer yourself completely to God, to be merged in His Glory.

– Divine Discourse, September 8, 1966

அன்பு எனும் நீரையும், பிரார்த்தனை மற்றும் தன்மறுக்கம் ஆகிய சலவைத் தூளையும் கொண்டு, ஆசை எனும் கறைகள் நீங்குமாறு இதயத்தைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் கடவுள் தன் அருளை அதனுள் பொழிவார். நீங்கள் கடவுளுக்காக விழைந்தால், புற உலகின் மேலும் தேகத்தின் மேலும் உள்ள பற்றுதலை (லோக பிராந்தி மற்றும் தேக பிராந்தியை) நீங்கள் களைய வேண்டும். ஒரு காலை ஒரு படகிலும், மற்றொரு காலை வேறொரு படகிலும் வைக்க முயற்சிப்பது உபயோகமற்றதாகும். நீங்கள் 20  அல்லது 25 வருடங்கள் ஆன்மீக சாதகராக இருந்திருக்கலாம், ஆனால் தியானம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை விட உங்கள் பௌதிகத் தேவைகள் மற்றும் சௌகரியங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், வருடக்கணக்கான பயிற்சி, முன்னேற்றம் இல்லை என்பதனால், மதிப்பற்றதாக ஆகிறது. பிரார்த்தனை மற்றும் பஜனை முடிந்தவுடன் கற்பூர ஆரத்தியைக் காண்பிப்பது என்பது உங்கள் புலன் சார்ந்த நாட்டங்களை,  சுவடில்லாமல் எரித்துவிட வேண்டும் என்பதனை நினைவில் கொண்டு வருவதற்காகவே ஆகும். கடவுளின் மகிமையில் உங்களை அமிழ்த்துக் கொள்வதற்காக நீங்கள் உங்களைப் பூரணமாக அவரிடம் அர்ப்பணித்து விட வேண்டும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 8, 1966

Sai Inspires (Tamil Translation): 18th October 2012

A merchant was once brought before a magistrate for selling adulterated ghee (clarified butter). Judgment was pronounced and as a punishment he was asked to either consume the entire quantity of the foul ghee or receive 20 whips or pay a fine of 100 gold coins. He preferred the ghee and started drinking the stuff a little bit, but finding the smell unbearable, he then chose the stripes. He received a few but could not stand any more. So finally he pleaded with the magistrate to let him go with the fine and paid his dues. If only he had opted for this initially, he could have avoided the foul drink and the excruciating pain. By swaying in his decision, he had to taste the wreck and the rod. So too, most people do not opt for God in the beginning when grief overpowers them. They do not recognize the inevitability but eventually come to God, sooner or later. Make your choices wisely.

– Divine Discourse, September 8, 1966

நெய்யில் கலப்படம் செய்ததற்காக ஒரு வணிகன் ஒரு முறை ஒரு நீதிபதியின் முன் அழைத்து வரப்பட்டான். தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவன் அனைத்துக் கலப்பட நெய்யையும் பருகவோ அல்லது 20 கசையடிகள் பெறவோ அல்லது 100 பொற்காசுகளை அபராதமாகச் செலுத்தவோ வேண்டும் என்ற தண்டனையைப் பெற்றான். இவற்றில் நெய்யைப் பருகுவதை அவன் தேர்ந்தெடுத்து, சிறிது அதனைப் பருகத் துவங்கினான். ஆனால், அதன் துர்நாற்றத்தைப் பொறுக்க முடியாமல், கசையடியைத் தேர்ந்தெடுத்தான். சிறிதளவு அடிகள் பெற்றவுடனேயே அவனால் அதனை மேலும் தாங்க முடியவில்லை. ஆகையால் அவன் அபராதம் செலுத்திவிட்டுச் செல்வதாக நீதிபதியிடம் வேண்டி, அதனைச் செலுத்தினான். இதனை அவன் முதலிலேயே தேர்ந்தெடுத்திருந்தால், அந்த துர்நாற்றத்தையும், தாங்க முடியாத வலியையும் தவிர்த்திருக்க முடியும். தன் முடிவிலிருந்து மாறியதால் அவன் கெட்டுப்போன பொருளையும், கசையையும் ருசிக்க வேண்டியதாக ஆயிற்று. அதே போல, பெரும்பாலானோர், துயரம் தம்மை ஆட்கொண்டவுடனேயே கடவுளைத் தேர்ந்தெடுக்கத் தவறுகிறார்கள். தவிர்க்க இயலாததை அடையாளம் காணாமல், முடிவில் விரைவாகவோ அல்லது தாமதமாகவோ கடவுளிடம் வருகிறார்கள். உங்கள் விருப்பங்களை அறிவுப் பூர்வமாகத் தேர்ந்தெடுங்கள்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 8, 1966

Sai Inspires (Tamil Translation): 17th October 2012

Like the silkworm that spins from out of itself the cocoon that proves to be its tomb, man spins from out of his mind the cage in which he gets trapped eventually. But there is a way of escape, which the spiritual teacher (Guru) can teach you or which the God in you will reveal to you. Take to the spiritual practices that will bring you relief. Forget the past; do not worry about possible errors or disappointments. Decide and Do. Substitute good thoughts for the bad and cleanse the mind of all evil by dwelling on righteous deeds and holy thoughts. Forget the things you do not want to remember and bring to memory only those things that are worth remembering. Take on the role of the Hero from now on, not the Zero. This is a sure way to achieve spiritual progress.

– Divine Discourse, January 1, 1964

எவ்வாறு ஒரு பட்டுப்புழு தன் கல்லறையாக மாறவிருக்கும் பூச்சிக் கூட்டைத் தன்னுள்ளிருந்து உருவாக்குகிறதோ, மனிதனும் தன் மனதிலிருந்து இறுதியாகத் தான் சிக்கிக்கொள்ளவிருக்கும் கூண்டினை உருவாக்குகின்றான். ஆனால் தப்பிப்பதற்கு ஒரு வழியுள்ளது. ஒரு ஆன்மீக ஆசான் (குரு) உங்களுக்கு அதனை கற்பிக்க இயலும். அல்லது உங்களுள் உள்ள கடவுளே அதனை உங்களுக்குப் புலப்படச் செய்யலாம். உங்களுக்கு நிவாரணம் அளிக்கவல்ல ஆன்மீகப் பயிற்சிகளைத் துவங்குங்கள். கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்; நடக்கக் கூடிய தவறுகளையும், ஏமாற்றங்களையும் பற்றிக் கவலைப்படாதீர்கள். தீர்மானித்து செயல் புரியுங்கள். தீய எண்ணங்களுக்குப் பதிலாக நல்லெண்ணங்களுக்கு இடமளித்து, நற்செயல்களிலும் புனித சிந்தனைகளிலும் நிலை நிறுத்துவதன் மூலம் உங்கள் மனதினை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஞாபகத்தில் கொள்ள விரும்பாத பொருட்களை மறந்து, ஞாபகத்தில் கொள்ளவல்ல பொருட்களை உங்கள் நினைவிற்குக் கொண்டு வாருங்கள். இக்கணத்திலிருந்து நாயகனின் (ஹீரோ) பாத்திரத்தை ஏற்று பூஜ்ஜியத்தின் (ஜீரோ) பாத்திரத்தைத் துறந்துவிடுங்கள். இது ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு ஒரு உறுதியான வழியாகும்.

– தெய்வீக உரை, ஜனவரி 1, 1964

Sai Inspires (Tamil Translation): 16th October 2012

If only the agony and toil now being experienced by you to accumulate the symbols of wealth and power for keeping yourself and your family in comfort, are directed towards God, you can be infinitely happier. The veil of maya (illusion), however, hides from you the face of God which is shining from every being and thing around you. Maya creates the universe and attracts the mind with the vast paraphernalia of the objective world. It is a narthaki, an enchantress who entices the intelligence and traps the senses. This na-rtha-ki can be subdued by ki-rtha-na (note the re-ordering of the syllables). Kirthana is the concentrated contemplation of the glory of God.

– Divine Discourse, September 8, 1966

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சௌகரியமாக வைத்துக் கொள்வதற்கு நீங்கள் செல்வம் மற்றும் அதிகாரத்தைச் சேர்ப்பதற்காக நீங்கள் அனுபவிக்கும் வேதனையும் கடின உழைப்பும் கடவுளின் பால் இயக்கப்பட்டால் நீங்கள் எல்லையற்ற ஆனந்தத்தை அடைவீர்கள். ஆனால், மாயையின் திரை, உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு ஜீவனிலும் பொருளிலும் பிரகாசிக்கும் கடவுளின் முகத்தை உங்களிடமிருந்து மறைக்கின்றது. மாயை பிரபஞ்சத்தை உருவாக்கி, பௌதிக உலகின் கவர்ச்சிகளைக் கொண்டு மனதை கவர்கிறது. நர்த்தகீ என்கிற ஒரு மோஹினியே புத்தியை வசீகரித்து, புலன்களை சிக்க வைக்கின்றாள். இந்த ந-ர்த்த-கீ-யை ,கீ-ர்த்த-ந மூலம் அடக்கியாள முடியும் (எழுத்துக்களின் அமைப்பிலுள்ள மாற்றத்தை கவனிக்கவும்). கீர்த்தன என்பது ஒருமுகத்துடன் கடவுளின் மகிமையைப் பற்றி நினைவில்  நிறுத்துவது ஆகும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 8, 1966

Sai Inspires (Tamil Translation): 15th October 2012

A small lump of steel can become a beautiful and efficient watch through the application of intelligence and skill. Can not a human being be transformed into one who has realised the Ultimate through the application of the tools of discrimination and detachment? Have faith in yourself, your own capacity to adhere to a strict time-table of sadhana, your own ability to reach the goal of realisation. When you have no faith in the wave, how can you get faith in the ocean? Do not give ear to what others say. Believe your experience; what gives you peace and joy, the bliss of Aatma anandham – the joy of the Inner Self. Believe in that. That is the real basis for faith.

– Divine Discourse, September 8, 1966

ஒரு சிறிய இரும்புக் கட்டியை புத்தி மற்றும் அறிவுத்திறனின் மூலம் அழகான, பயனுறுதி வாய்ந்த ஒரு கைக்கடிகாரமாக மாற்ற முடிகிறது. அவ்வாறிருக்கையில் பகுத்தறிவு மற்றும் பற்றுதலின்மை ஆகிய சாதனங்களைப் பயன்படுத்தி ஒரு மனிதனை, பரம்பொருளை அறிந்தவனாக ஏன் மாற்ற முடியாது? உங்கள் மேலும், ஆன்மீக சாதனைக்கான ஒரு கண்டிப்பான கால அட்டவணையை பின்பற்றுவதற்கேற்ப உள்ள உங்கள் திறனின் மேலும், அறிதல் என்ற குறிக்கோளை எட்டுவதற்கான உங்கள் சொந்தத் திறனின் மேலும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்கு அலையின் மேல் நம்பிக்கையில்லாவிடில், சமுத்திரத்தின் மேல் எவ்வாறு நம்பிக்கை ஏற்படும்? பிறர் சொல்வதற்கு செவிமடுக்காதீர்கள். உங்களுக்கு ஆத்மானந்தம் என்ற உள்ளுள்ள பொருளின் மகிழ்ச்சியாகிய அமைதியும் மகிழ்ச்சியும் அளிக்கவல்ல, உங்கள் அனுபவத்தை நம்புங்கள். அதனை நம்புங்கள். அதுவே நம்பிக்கையின் உண்மையான ஆதாரம் ஆகும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 8, 1966

Sai Inspires (Tamil Translation): 14th October 2012

Meditate upon the flute of Krishna and the melody it aroused in the veins of mankind, animals, birds, plants and even hills, rivers and rocks on sand dunes. Dwell also on the supreme love of the Gopis, their surrender of everything, gross and subtle, of ego and egoistic attachment at the feet of the Supreme Being. They spoke no word except prayer, they moved no step, except towards God, they saw and heard only Krishna in every being, they spoke every word of Him, to Him, no matter who was present with them. Lord Krishna filled their hearts and transmuted them into the most self-effacing group of devotees the world has ever seen. And know that the Lord’s assurance, “Yogakshemam Vahaamyaham” (I shall take care of the well being of My devotees) is no empty declaration; it is the vow of the Lord, and He is the very embodiment of Truth.

– Divine Discourse, September 7, 1966

கிருஷ்ணரின் குழலின் மேலும், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், ஏன் மலைகள், ஆறுகள் மற்றும் மணல் மேலுள்ள பாறைகள் ஆகியவற்றின் நாளங்களில் அது எழுப்பிய இந்நிசையின் மேலும் தியானம் செய்யுங்கள். கோபியர்களின் உயர்ந்த அன்பு, கண்ணுக்குப் புலப்படும் மற்றும் கண்ணுக்குப் புலப்படாதவை, அஹங்கார மமகாரங்கள் ஆகிய தம் அனைத்தையும் அவர்கள் பரமாத்மாவின் பாதங்களில் அர்ப்பணம் செய்ததை எண்ணிப் பாருங்கள். அவர்கள் பிரார்த்தனையைத் தவிர எதனையும் பேசியதில்லை, கடவுளை நாடுவதைத் தவிர எந்தவொரு அடியையும் எடுத்து வைக்கவில்லை, அவர்கள் ஒவ்வொரு ஜீவனிலும் கிருஷ்ணரையே பார்த்தார்கள் கேட்டார்கள், தம்முடன் யார் இருந்தாலும் அவர்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் அவரைப்பற்றியே, அவருக்காகவே இருந்தன. பகவான் கிருஷ்ணர் அவர்கள் இதயங்களை நிறைத்து, உலகம் என்றும் காண முடியாத தன்முனைப்பற்ற பக்தர்களின் குழுவாக மாற்றினார். பகவானின் “யோகக்ஷேமம் வஹாம்யஹம்” என்ற பிரகடனம் வெறும் பொய்யானப் பிரகடனம் அல்ல என்பதனை அறியுங்கள்; அது பகவானின் சங்கல்பமாகும். அவர் சத்தியத்தின் திருவுருவமே.

– தெய்வீக உரை, செப்டம்பர் 7, 1966

Sai Inspires (Tamil Translation): 13th October 2012

Be thankful to the Lord, for He gave you Time, as well as action to fill it with. He gave you food, as well as hunger to relish it. But that does not entitle you to engage yourself in action indiscriminately. When you build a house, you install a door in it, don’t you? What is the purpose of the door? It has dual objectives – to welcome all you would like to offer hospitality to, and to keep out all and sundry, so that they cannot walk in whenever they like. So too, install a door in your mind. Select the impulses, the motives, and the incentives that appear in your mind and welcome them in. Keep out the demeaning, the debasing and the deleterious. Then, gradually you will be able to admit and experience the highest wisdom of the scriptures, the wisdom culled out of the crucible of experience (anubhava jnanam).

– Divine Discourse, January 1, 1964

உங்களுக்கு நேரமும், அதனை நிறைப்பதற்குத் தேவையான வேலைகளையும் அளித்ததற்காக கடவுள் மேல் நன்றியுடன் இருங்கள். உங்களுக்கு உணவும், அதனை நன்றாக ருசிப்பதற்குப் பசியும் கூட அளித்துள்ளார். ஆனால் அதனை நீங்கள் தேவையற்ற வழியில் செலவழிப்பதற்கு உங்களுக்கு அது அளிக்கப்படவில்லை. ஒரு வீட்டைக் கட்டும்பொழுது, நீங்கள் அதற்கு ஒரு கதவையும் வைப்பீர்கள் இல்லையா? கதவின் நோக்கம் என்ன? அதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று – யாருக்கெல்லாம் விருந்தோம்பல் புரிய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களை வரவேற்பதற்கும்; இரண்டு – தம் விருப்பப்படியெல்லாம் அந்நியர் உள்ளே வர முடியாதவாறு பாதுகாப்பதற்குமே. அதே போல, உங்கள் மனதிலும் ஒரு கதவை நீங்கள் வைக்க வேண்டும். உங்கள் மனதில் தோன்றும் உந்துதல்களையும், நோக்கங்களையும், தூண்டுதல்களையும் நீங்கள் தேர்ந்தெடுத்தே வரவேற்க வேண்டும். தாழ்த்தும், தரக்குறைவாக மாற்றும், நாசம் விளைவிக்கும் விஷயங்களை விட்டு விலகியிருங்கள். பின்னர், படிப்படியாக அனுபவ ஞானம் மூலம் பெறப்பட்ட புனித நூல்களின் உயர்ந்த ஞானத்தை ஏற்றுக்கொள்வதற்கும் அனுபவிப்பதற்கும் உங்களால் முடியும்.

– தெய்வீக உரை, ஜனவரி 1, 1964

Sai Inspires (Tamil Translation): 12th October 2012

The best among men is one who has compassion; the most blessed time is the ‘present’, this very second, and the best act is to relieve the pain and grief of others. You decide to start Naamasmarana (remembrance of the Divine Name) ‘next Thursday’, as if death has assured you in writing that he will not call on you till that date. Do not postpone what you can do today or do now, this very moment. Make your efforts towards your goal. The goal will near you faster than the pace with which you near the goal. God is as eager to save you as you are eager to be saved. He is Love, He is Compassion for all who flounder on the path. God grants the desires of each one of His devotees, and hence has won the name, Bhaktha Abheeshta Pradha.

– Divine Discourse, September 7, 1966

மனிதர்களில் உயர்ந்தவர்கள் கருணை படைத்தவர்களே; மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட காலம் ‘தற்காலமே’, இந்த வினாடியே; உயர்ந்த செயல் என்பது பிறரின் வலியையும் துயரத்தையும் தீர்ப்பதே. நீங்கள் நாமஸ்மரணையை ‘அடுத்த வியாழக்கிழமை’ துவங்கலாம் என்று, உங்களுக்கு அந்தத் தேதி வரை மரண தேவனின் அழைப்பு வராது என்று அவன் உங்களுக்கு எழுதிக் கொடுத்தாற் போல, முடிவு செய்கிறீர்கள். இன்றோ, இப்பொழுதோ, இக்கணமோ செய்ய முடிந்ததை தள்ளிப் போடாதீர்கள். உங்கள் குறிக்கோளின் பால் உங்கள் முயற்சிகளை செலுத்துங்கள். நீங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேறும் வேகத்தை விட குறிக்கோள் உங்களை நோக்கி வேகமாக வரும். நீங்கள் எந்த அளவு காப்பாற்றப்படுவதற்காக விழைகிறீர்களோ அதே ஆர்வத்துடன் கடவுள் உங்களைக் காப்பாற்றுவதற்கு விழைகிறார். அவர் ப்ரேமையே, பாதையில் தடுமாறும் அனைவருக்கும் அவர் கருணையே. கடவுள் தன் ஒவ்வொரு பக்தரின் விருப்பங்களையும் அருள்வதனால், அவர் “பக்த அபீஷ்ட ப்ரத” என்ற பெயரை வென்றுள்ளார்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 7, 1966