Monthly Archives: October, 2012

Sai Inspires (Tamil Translation): 11th October 2012

When you feed the cow with fermented gruel so that it may yield more milk, the milk emits an unpleasant smell. When you engross yourself too much with the trifles of the world, your character and conduct will also become unpleasant. It would indeed be tragic to witness the downfall of a ‘child of immortality’, struggling in despair and distress. If only you were to ask yourself: “What are my qualifications? What is my position? What are the opportunities I am bestowed with?” Then you will soon realize your own downfall and make efforts to recover. Will a tiger, however hungry eat popcorn or peanuts? Stay focussed on the goal worthy of your lineage. Never slacken the effort, whatever be the obstacle, however long the journey. Keep your efforts on, in line with the dignity of your noble goals.

– Divine Discourse, September 7, 1966

அதிகமாகப் பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக புளித்த கஞ்சியை மாட்டிற்கு வைத்தால், பாலில் ஒருவிதமான துர்நாற்றம் வீசும்.  உலகத்தின் அற்பமான விஷயங்களில் உங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டால், உங்கள் குணம் மற்றும் நடத்தையும் கூட இனிமையற்று இருக்கும். “இறவாமையின் குழந்தை” நம்பிக்கையின்மையிலும் வேதனையிலும் தவிப்பதைப் பார்ப்பது துயரம் அளிக்கும். “என் தகுதிகள் யாவை? என் நிலை என்ன? எனக்கு எந்தெந்த வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன?” என்று நீங்கள் உங்களையே கேட்டுக் கொண்டால், உங்கள் வீழ்ச்சியை அறிந்து கொண்டு, அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளை எடுக்கத் துவங்குவீர்கள். எவ்விதப் பசியிருந்தாலும் ஒரு புலி என்றாவது பாப்கார்ன் அல்லது வேர்க்கடலைகளை உண்ணுமா? உங்கள் பரம்பரையின் கௌரவத்திற்கு ஏற்றவாறு, உங்கள் குறிக்கோளின் மேல் முனைப்புடன் இருங்கள். எவ்விதத் தடை வந்தாலும், பயணம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும்  முயற்சியை என்றும் தளரவிடாதீர்கள். உங்கள் உயரிய குறிக்கோள்களின் மதிப்பிற்கு ஏற்றவாறு உங்கள் முயற்சிகளை முன்வையுங்கள்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 7, 1966</p>

Sai Inspires (Tamil Translation): 10th October 2012

You have to become Divine, the Divinity from which you have arrived. So lessen your attachment to the world, not by cutting yourself off from the world, but by being in it, as an instrument in His hands. To realize the omnipotent Divine within you, recognize your kinship with the Universe. Keep your body fit, light and bright. Don’t add to it the burden of attachment to this and that. Subdue the heads of all the tendencies within you that lead you to egoism. Have single-minded attention to the dictates of God and practice right-conduct. Edison, the great scientist concentrated so much on the solution of the problems that worried him that at times, he left food untouched for days on end, when they were pushed through the doors of his lab. You must have that same concentration and earnestness, when engaged in spiritual practices.

– Divine Discourse, October 4, 1965

நீங்கள் எந்த தெய்வீகத்திலிருந்து வந்துள்ளீர்களோ, அந்த தெய்வமாகவே நீங்கள் மாற வேண்டும். ஆகையால் உலகத்துடனானப் பற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். அதனை அறுத்துவிடச் சொல்லவில்லை, அதனுள் இருந்து கொண்டே அவர் கைகளில் ஒரு கருவியாக இருங்கள். உங்களுள் உறையும் சர்வவல்லமை படைத்த தெய்வத்தை உணர்வதற்கு நீங்கள் இந்தப் ப்ரபஞ்சத்துடனான உங்கள் உறவை அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், லேசாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு எந்தப் பற்றுதலின் சுமையையும் கூட்டாதீர்கள். உங்களை அஹங்காரத்திற்கு இட்டுச் செல்லும் உந்துதல்களின் தோற்றங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கடவுளின் ஆணைகளின் மேலும், தர்மத்தைக் கடைப்பிடிப்பதிலும் ஒருமுகச் சிந்தனையுடன் விழிப்பாக இருங்கள். மாபெரும் விஞ்ஞானியாகிய எடிசன், அவரது பரிசோதனை அறையின் கதவுகள் வழியாகத் தள்ளப்பட்ட உணவை நாட்கணக்காகத் தொடாமல், தன்னைப் பாதித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஒருமுகச் சிந்தனையுடன் இருந்தார். நீங்கள் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடும் பொழுது, அதே போன்ற ஒருமுகச் சிந்தனையும் அக்கறையும் கொள்ளவேண்டும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 4, 1965

Sai Inspires (Tamil Translation): 9th October 2012

God incarnates to foster spiritual aspirants (sadhus), it is said. The term sadhus does not refer to just those renunciants who dwell in forests. Sadhu is the virtuous person who forms the inner reality in each one of you. Every being is a sadhu, for all mankind is an embodiment of love, peace and bliss. By allowing the crust of ego to grow thick and fast, your real nature is tarnished. By the action of sathsang (the company of the noble and pious), and systematic attention to self-control and self-improvement, you can overcome the delusion that makes you identify with the body, its needs and cravings.

– Divine Discourse, September 7, 1966

கடவுள் ஆன்மீக சாதகர்களை (சாதுக்களை) போஷிப்பதற்கு அவதரிக்கிறார் என்று கூறப்படுகிறது. சாதுக்கள் என்றால் காடுகளில் வசிக்கும் சந்நியாசிகளை மட்டுமே குறிப்பதில்லை. உங்கள் ஒவ்வொருவரினுள்ளும் உள்ளுண்மையாகத் திகழும் நற்குணம் படைத்தவனே அந்த சாது ஆவான். ஒவ்வொரு ஜீவனும் சாதுவே. ஏனெனில் அனைத்து மானிடமும் அன்பு, அமைதி மற்றும் ஆனந்தத்தின் ஸ்வரூபங்களே. அஹங்காரம் எனும் ஓடு கடினமாகவும் விரைவாகவும் வளரவிட்டு உங்கள் உண்மை இயல்பைக் கறைப்படுத்திக் கொள்ளாதீர்கள். சத்சங்கம் (நல்லோர் சேர்க்கை) மற்றும் சுயக்கட்டுப்பாடு, சுயமுன்னேற்றம் ஆகியவற்றின் மேல் முறைப்படுத்தப்பட்ட கவனம் ஆகியவற்றின் செயலின் மூலம் உடலுடனும், அதன் தேவைகள் மற்றும் ஆசைகளுடன் உங்களை அடையாளம் கண்டுகொள்ளச் செய்யும் மாயையை வெற்றிகொள்ள முடியும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 7, 1966

Sai Inspires (Tamil Translation): 8th October 2012

If your thoughts are centred around the body, you will have worries of pains and illnesses, real or imaginary. If they are centred on riches, you will be worried about profit and loss, tax and exemptions. If they roam round fame, then, you are bound to suffer from the ups and downs of scandal, calumny and jealousy. So let them centre round the seat of power and love which deserve willing submission – the Name of the Lord. Let your whole being surrender to it. Then you will be happy forever. For the sages of the Vedic culture, the Name of the Lord was the very breath; they lived on the sustenance, which contemplation of the Lord’s glory provided. God is the very embodiment of Love. He can be won only through Love.

– Divine Discourse, October 3, 1965

உங்கள் எண்ணங்கள் உங்கள் உடலைப் பற்றி இருந்தால், உங்களுக்கு வலிகள் மற்றும் நோய்கள், உண்மை மற்றும் கற்பனை ஆகியவற்றின் கவலைகள் இருக்கும். அவை செல்வத்தைப் பற்றி இருந்தால், இலாபம் மற்றும் நஷ்டம், வரி மற்றும் வரி விலக்கு ஆகியவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படுவீர்கள். அவை புகழைப் பற்றி இருந்தால், நீங்கள் அவமானங்கள், பழிச்சொற்கள் மற்றும் பொறாமையினால் உண்டாகும் ஏற்றத் தாழ்வுகளாலும் கண்டிப்பாகக் துயரப்படுவீர்கள். ஆகையால், அவை மனமகிழ்வுடன் விழைகிற சரணாகதியைப் பெறத் தகுதியான சக்தி மற்றும் அன்பின் இருப்பிடமான இறைவனின் திருநாமத்தைப் பற்றி இருக்கட்டும். உங்கள் முழு ஜீவனும் அதற்குச் சரணடையட்டும். அவ்வாறானால் நீங்கள் என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேத கலாசாரத்தின் முனிவர்களுக்கு இறைவனின் திருநாமம் தம் உயிர் மூச்சாகவே இருந்தது. கடவுளின் மகிமையின் மேல் உள்ள ஒருமுக மனப்பாங்கு அளித்த ஊட்டத்தைக் கொண்டு உயிர் வாழ்ந்தனர். கடவுள் அன்பின் ஸ்வரூபம். அவர் அன்பினால் மட்டுமே வெற்றி கொள்ளப்படுவார்.

– தெய்வீக உரை, அக்டோபர் 3, 1965

Sai Inspires (Tamil Translation): 7th October 2012

The body is but a boat, an instrument for crossing the sea of births and deaths, that you have earned through the merits of many generations. Crossing the sea is to realise the Dweller, in the Dwelling. The purpose of the body (deha) is to realize the Indweller (Dehi). So even when the body is strong and skilled, the intellect is sharp and the mind alert, every effort must be made to seek the Indweller. So keep your body fit, strong and free from trouble. Just as the boat should be seaworthy, your body too should be fit for its purpose. You must take good care of it.

– Divine Discourse, August 3, 1966

தேஹம் என்பது பிறப்புகள் மற்றும் இறப்புகள் நிறைந்த கடலைக் கடக்க உதவும், சந்ததி சந்ததியாகப் செய்யப்பட்ட புண்ணியங்களின் வாயிலாகப் பெறப்பட்டக் கருவியான ஒரு படகு தான். கடலைக் கடப்பது என்பது தேஹத்தினுள் வசிக்கும் தேஹி எனப்படும் தெய்வத்தை உணர்வதே ஆகும். தேஹத்தின் பயன் தேஹியை உணர்வதே. ஆகையால், தேஹம் பலமாகவும், திறனுடனும் இருந்து, புத்தி கூர்மையாகவும் இருந்து, மனம் விழிப்பாகவும் இருந்து, செய்யப்படும் ஒவ்வொரு செயலும் உள்ளுறைபவரை நாட விழையவேண்டும். ஆகையால், உங்கள் தேஹத்தை ஆரோக்கியமாக, பலமாக, பிரச்சினைகளில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வாறு படகு கடலில் மிதப்பதற்குத் தகுந்தாற்போல் இருக்க வேண்டுமோ, உங்கள் தேஹமும் அதன் பயனுக்குத் ஏற்றாற்போல் இருக்க வேண்டும். நீங்கள் அதனைச் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 3, 1966

Sai Inspires (Tamil Translation): 6th October 2012

When worship is rendered with a view to fulfill desires and realize wishes, the precious prize will be lost. Worship must cleanse the heart, so that God, the Indweller, may shine in all His glory. Know that desires tarnish the heart, instead of cleansing it. Invite a prince, who is yet a child to sit on the throne – he will start weeping, for he cannot play on the throne with his toys and pets. The adults would sneer at the boy’s fondness for toys, they would call it childishness. So too, all those, who keep away from the throne of ‘Sovereignty over themselves’ and prefer to play with the toys and pets of material things are equally childish, no matter what their age or status is!

– Divine Discourse, October 3, 1965

ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறுவதற்காக வழிபாடு புரிந்தால், அரிய பரிசானது இழக்கப்படும். வழிபாடு என்பது இதயத்தை சுத்தப்படுத்தி, உள்ளுறைபவனான இறைவன் அங்குத் தன் முழு மகிமையுடன் ஒளிர்வடும் படியாக இருக்க வேண்டும். ஆசைகள் இதயத்தை சுத்தம் செய்வதற்கு மாறாக  அசுத்தப்படுத்தும் என்பதை அறியுங்கள். இன்னும் சிறு குழந்தையாக இருக்கும் இளவரசனை அரியணையில் உட்கார அழைத்தால் அவன் அழத் தொடங்குவான். ஏனெனில், அவனால் அரியணை மீது தன் விளையாட்டுப் பொருட்களுடனும், தன் செல்லப் பிராணிகளுடனும் விளையாட முடியாது. வயதில் மூத்தவர்கள் பொம்மைகளுடனான அச்சிறுவனின் பற்றுதலைக் கண்டு குழந்தைத்தனம் என்று இகழ்வார்கள். அதே போல, “தம் மீதான ஆளுமை” எனும் அரியணையிலிருந்து விலகி, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் செல்லப் பிராணிகள் போன்ற உலகாயத பொருட்களுடன் விளையாட நினைப்பது, எந்த வயதைச் சேர்ந்தவரானாலும் எந்த சமுதாயப் படிநிலையிலிருப்பவராக இருந்தாலும் இதற்கு நிகரான குழந்தைதனமே!

– தெய்வீக உரை, அக்டோபர் 3, 1965

Sai Inspires (Tamil Translation): 5th October 2012

The tree of life can yield the fruit of bliss only when it is watered with virtue and fed on faith. Provision of food, clothing, and shelter will not ensure peace and joy; they can come only through virtue and faith. Virtue alone can endow love and sympathy. We are now putting the cart (the body) before the horse (mind) and providing for the safety and strength of the cart alone. The horse (mind) is allowed to grow wild or is starved. Harmony at home and in society can be brought about only through the recognition of the Oneness of All. Virtues alone can endow love and sympathy, peace and joy for one and all.

– Divine Discourse, August 3, 1966

நற்குணம் எனும் நீர் பாய்ச்சி, நம்பிக்கை எனும் உரம் இட்டால் தான் வாழ்க்கை எனும் மரம் ஆனந்தம் எனும் பழத்தை நல்கும். உண்ண உணவும், உடுத்த உடையும், தங்குவதற்கு இடமும் இருந்தால் மட்டும் உங்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் உறுதியாகாது; நற்குணம் மற்றும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவை உங்களுக்குக் கிடைக்கும். நற்குணம் மட்டுமே அன்பையும் பரிவையும் அளிக்கும். இன்று நாம் தேகமாகிய வண்டிக்கு மனமாகிய குதிரையைவிட, வண்டிக்கு மட்டுமே பாதுகாப்பும் பலமும் அளிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். மனம் எனும் குதிரையைக் காட்டுத்தனமாகவோ பசியால் வாடும்படியோ செய்கிறோம். இல்லத்திலும், சமுதாயத்திலும் நல்லிணக்கம் என்பது, அனைவரின் ஒற்றுமையை ஏற்றால் தான் தோன்றும். நற்குணங்கள் மட்டுமே அன்பையும், பரிவையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் அனைவருக்கும் நல்கும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 3, 1966

Sai Inspires (Tamil Translation): 4th October 2012

Repeating the Name of God saved Prahladha from the agony of torture. He learnt the Sacred Name and understood its sweetness. He chanted it constantly and internalized its nectarine taste. When the enraged elephant rushed towards him, he did not call out for his physical parents to rescue him; he instantaneously cried out “Narayana”. The Lord is the source of strength for the weak and the strong; He is the Supreme Power. When Prahladha took the Name of the Lord, enraged elephants backed out, no fire could touch him and no poison could affect him. The Lord’s Name was his armour, his shield, his breath, infact his very life. For chanting the Divine Name, no expense is involved, no materials are needed, no special place or time is required. Scholarship, caste or creed does not matter. When a piece of iron is rubbed on a slab of stone, heat is generated. So too, in order to generate sufficient heat to melt the soft heart of the Lord, repeat the Divine Name vigorously and constantly. Then, the Lord will shower His Grace.

– Divine Discourse, October 3, 1965

நாம ஜபம் ப்ரஹலாதனை துன்புறுத்தப்படும் பொழுது வலியிலிருந்து காத்தது. அவன் திருநாமத்தை கற்று, அதன் இனிமையை உணர்ந்து இருந்தான். அவன் அதனை எப்பொழுதும் ஜபித்துக் கொண்டு, அதன் அமுதான சுவையை உட்கொண்டிருந்தான். மதம் பிடித்த யானை அவனை நோக்கி வரும்பொழுது அவன் தன் உடலளவிலான பெற்றோரைத் தன்னைக் காப்பாற்ற அழைக்கவில்லை; அவன் கண நேரத்தில் “நாராயணா” எனக் கூக்குரல் விடுத்தான். கடவுளே பலவீனமானவர்களுக்கும், பலசாளிகளுக்கும் பலத்தின் ஊற்றாக இருக்கிறார். அவரே உயர்ந்த சக்தியானவர். ப்ரஹலாதன் கடவுளின் நாமத்தைச் சொன்னவுடன், மதம் பிடித்த யானைகள் பின்வாங்கின, எந்தத் தீயும் அவனைத் தீண்டவில்லை, எந்த விஷமும் அவனை பாதிக்கவில்லை. கடவுளின் நாமம் அவனுடைய கவசமாகவும், கேடயமாகவும், சுவாசமாகவும், ஏன் அவன் உயிராகவுமே இருந்தது. கடவுளின் நாமத்தை ஜபிப்பதற்கு எந்த செலவும் இல்லை, எந்தப் பொருளும் தேவையில்லை, எந்தவொரு தனி இடமோ, தனி நேரமோ தேவையில்லை. பாண்டித்யம், ஜாதி அல்லது மதக் கோட்பாடு என்ன என்பதும் அவசியமில்லை. ஒரு இரும்புத் துண்டினை ஒரு கல்லின் மேல் தேய்த்தால் வெப்பம் உண்டாகிறது. அதே போல, கடவுளின் மிருதுவான இதயத்தை உருக்குவதற்கான அளவு வெப்பத்தை உருவாக்குவதற்கு இறைவன் நாமத்தை பலமாகவும், இடைவிடாமலும் ஜபித்திடுங்கள். அவ்வாறு செய்தால், கடவுள் தன் அருளைப் பொழிவார்.

– தெய்வீக உரை, அக்டோபர் 3, 1965

Sai Inspires (Tamil Translation): 3rd October 2012

In the firmament of the heart, the intellect (sun) and the mind (moon) revolve on their regular courses. If envy, greed, hate or malice dim the glory, they are to be dismissed as passing clouds that cannot affect the sources of light. The more you reason out things, the clearer will become the reality. Reasoning power will never hinder the discovery of the Truth; only you have to go as far as reason can take you; then you can see the vast vistas beyond. Man has been endowed with enormous, immeasurable talents, skills and power; but is using all that to journey towards the moon, instead of journeying towards the wonderland of one’s own inner realms, where one can come face to face with God who is the inner Reality of this entire phenomenal world.

– Divine Discourse, August 3, 1966

இதயம் எனும் ஆகாயத்தில், புத்தி (சூரியன்) மற்றும் மனம் (சந்திரன்) ஆகியவை தத்தம் பாதைகளில் சுழன்று கொண்டிருக்கின்றன. பொறாமை, பேராசை, வெறுப்பு அல்லது காழ்ப்புணர்ச்சி ஆகியவை ஒளியைக் குலைத்தால், அவற்றை ஒளியின் தோற்றுவாய்களை பாதிக்காத, நகரும் மேகங்கள் எனக் கருதி உதாசீனப்படுத்த வேண்டும். நீங்கள் ஆராய ஆராய, உண்மை மென்மேலும் தெளிவாகும். ஆராயும் திறன் என்றென்றும் உண்மையைக் காண்பதைத் தடுக்காது. உங்கள் ஆராயும் திறன் உங்களை எந்தத் தொலைவிற்கு இட்டுச் செல்கிறதோ அது வரை நீங்கள்தான் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால், நீங்கள் பற்பலவற்றைக் காண்பீர்கள். மனிதனுக்கு மகத்தான, அளவிடமுடியாத திறன்களும் சக்திகளும் அளிக்கப்பட்டிருந்தும் அவற்றை முழுவுலகின் உள்ளுண்மையான கடவுளிடம் தன்னை நேருக்கு நேர் இருக்க வைக்கக் கூடிய, தன்னுள் உள்ள அதிசயமான இடத்தை நோக்கிச் செல்லாமல் வெறும் நிலவிற்குச் செல்வதற்காகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 3, 1966

Sai Inspires (Tamil Translation): 2nd October 2012

A glowing electric lamp can be compared to Prema (Love). For the lamp of love to burn, there should be a bulb, which is Shanthi (peace). The electric wire connected to the bulb is Dharma (Right Conduct). The current flowing into the wire is Sathya (Truth). Thus, the lamp of love glows and sheds its light, using all other human values. Sathya, Dharma, Shanthi and Prema constitute a single whole and not separate values. All the four values have to be adhered to equally. Prema must express itself in professional life too. Develop the feeling that all in your place of work – managers, workers and others are members of one family. Develop fraternal feelings towards all. With mutual love and regard, harmony can be achieved even in one’s profession.

– Divine Discourse, February 10, 1990

ஒரு ஒளிரும் மின்விளக்கை ப்ரேமைக்கு ஒப்பிட முடியும். ப்ரேமையின் விளக்கு ஒளிர்வதற்கு, ஓர் மின் குமிழ் விளக்கு இருக்க வேண்டும். அதுவே சாந்தி. குமிழ் விளக்கை இணைக்கும் மின் கம்பியே தர்மம் ஆகும். மின் கம்பியினுள் பாயும் மின்சாரமே சத்யம் ஆகும். ஆகவே, மற்ற அனைத்து மனித விழுக்காடுகளையும் பயன்படுத்திக் கொண்டு தான் ப்ரேமையின் விளக்கு ஒளிர்ந்து, வெளிச்சம் அளிக்கிறது. சத்யம், தர்மம், சாந்தி மற்றும் ப்ரேமை முழுமையாகவே உள்ளன, தனித்தனியாக அல்ல. நான்கு விழுக்காடுகளுமே சமமாகப் பின்பற்றப்பட வேண்டும். ஒருவரது தொழிலிலும் ப்ரேமை வெளிப்படுத்தப்பட வேண்டும். உங்கள் பணியிடத்தில் – மேலாளர், தொழிலாளி, மற்றவர்கள் ஆகிய அனைவருமே ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்கள் எனும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைவரின் மேலும் சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். பரஸ்பரப் ப்ரேமையும் மதிப்பும் கொண்டு, ஒருவரது தொழிலிலும் கூட இணக்கம் ஏற்படுத்த முடியும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 10, 1990