Monthly Archives: November, 2012

Sai Inspires (Tamil Translation): 30th November 2012

https://i0.wp.com/media.radiosai.org/sai_inspires/2012/uploadimages/SI_20121130.jpg

When the seven colours of the spectrum come together, the effect is ‘no colour’; when they stand apart, the seven colours can be separately identified. The betel nut is brown, betel leaf is green and the chunnam (slaked lime) is white, but when you chew these three together, your tongue becomes red. When the three blades of a ceiling fan revolve fast enough and no blade is separately noticeable, they give cool comfort. So too only when the different qualities of Sathwa, Rajas and Thamas are unrecognisably integrated, one can be happy. When the three gunas are equated in saadhana (spiritual practice), the result is peace. The lamp is the sathwa guna, the wick is the thamo guna and the oil is the rajo guna. When all the three are integrated, they give the light of wisdom, which illumines.

– Sathya Sai Speaks, Volume VI, Chapter 27

நிறமாலையின் ஏழு வர்ணங்களும் ஒன்றாகக் கூடினால், வர்ணமே இல்லாமல் போகிறது. ஆனால், அவை தனித் தனியாக இருந்தால், ஏழு வர்ணங்களையும் தனித் தனியாகக் காணலாம். பாக்கு பழுப்பு நிறத்திலும் (ப்ரௌன்), வெற்றிலை பச்சை நிறத்திலும், சுண்ணாம்பு வெள்ளை நிறத்திலும் உள்ளன. ஆனால் இம்மூன்றையும் நீங்கள் ஒன்றாகச் சேர்த்து மென்றால், உங்கள் நாக்கு சிவப்பாகிவிடும். மின்விசிறியின் மூன்றுத் தகடுகளும் சேர்ந்து ஒரு தகடு கூடத் தனியாகத் தெரியாதவாறு வேகமாகச் சுற்றினால், அது குளுமையான சுகத்தை அளிக்கும். அதே போல, சத்வ, ரஜோ, தமோ குணங்கள்  தனித் தனியாகப் புலப்படாதவாறு ஒன்று சேர்க்கப்பட்டால், ஒருவர் சந்தோஷமாக இருக்கலாம். இம்மூன்று குணங்களும் ஆன்மீக சாதனையில் ஒன்று சேர்க்கப்பட்டால், அமைதி கிட்டும். விளக்கு சத்வ குணமாகும், திரி தமோ குணமாகும், எண்ணெய் ரஜோ குணமாகும். இம்மூன்றும் ஒன்று சேர்க்கப்பட்டால், ஒளிர்விக்கும் ஞான ஒளியை அவை அளிக்கும்.

– சாயி அருளமுதம், பாகம் 6, அத்தியாயம் 27

Sai Inspires (Tamil Translation): 29th November 2012

Those who are trying to build the human community on the foundation of wealth (dhana) are like builders using sand as their foundation. Those who seek to build it on the rock of righteousness (Dharma) are the wise ones. Always remember that righteousness is the very root of this world. (Dharma Moolam Idham Jagath). Those who practice evil are cowards, they will constantly be haunted by fear and have no peace within them. Practice righteousness and you will remain happy forever. Respect for the parents who brought you into this world is the first lesson in right conduct. And gratitude is the spring which feeds that respect.

– Divine Discourse, February 3, 1964

செல்வத்தை அடித்தளமாகக் கொண்டு மனித சமுதாயத்தை அமைக்க முயற்சிப்பவர்கள், மணலை அடித்தளமாகக் கொண்டு கட்டிடம் கட்டுபவர்களைப் போன்றவர்கள் ஆவார்கள். தர்மம் எனும் பாறையின் மேல் அதனை அமைக்க விழைபவர்களே அறிவுடையோர். தர்மமே இவ்வுலகின் வேர் என்பதனை என்றும் நினைவில் கொள்ளுங்கள் (தர்ம மூலம் இதம் ஜகத்). தீயவற்றைப் பின்பற்றுபவர்கள் கோழைகள். அவர்கள் எப்பொழுதும் பயத்தால் அவதிப்பட்டு, அமைதியில்லாமல் இருப்பார்கள். தர்மத்தைப் பின்பற்றினால் நீங்கள் என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களை இவ்வுலகிற்குக் கொணர்ந்த பெற்றோர்களை மதிப்பதே தர்மத்தின் முதல் பாடம் ஆகும். அந்த மதிப்பிற்கு ஊட்டமளிக்கும் நீரூற்றே நன்றியறிதல் என்பதாகும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 3, 1964

Sai Inspires (Tamil Translation): 28th November 2012

Education must train the children to love, to co-operate, to be brave in the cause of truth, to be helpful, to be sympathetic and to be grateful. Dear children! Revere your parents, elders and teachers, be humble before them and respect their experience and deeper love for you. You must follow these virtues consistently and strictly. The educators, elders and parents too, on their part, must cleanse their intelligence and practice the same virtues with humility and detachment. There is no use teaching the children one thing and holding out examples, contrary to the teachings. Thus, true learning occurs when noble truths are taught and supplemented by the conduct of the teachers, parents and the elders.

– Sathya Sai Speaks, Volume VI, Chapter 26

கல்வியானது, அன்புடன் இருக்கவும், ஒத்துழைக்கவும், உண்மையைக் காக்கத் துணிவுடன் இருக்கவும், உதவியாக இருக்கவும், பிறர் மேல் அனுதாபம் கொண்டிருக்கவும், நன்றியுணர்வுடன் இருப்பதற்கும் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். அன்பார்ந்த குழந்தைகளே! உங்கள் பெற்றோரையும், பெரியோர்களையும், ஆசிரியர்களையும்  உயர்வாக மதித்து, அவர்கள் முன்புப் பணிவாக இருந்து, அவர்களுடைய அனுபவத்தையும், அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பையும் மதியுங்கள். இந்த நற்குணங்களை நீங்கள் விட்டுவிடாமல், தளராமல் பின்பற்ற வேண்டும். கல்வியாளர்களும், பெரியோரும், பெற்றோரும் கூட அவர்களுடைய புத்தியைச் சுத்தப்படுத்தி இதே நற்குணங்களைப் பணிவுடனும் பற்றில்லாமலும் பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு ஒன்றைக் கற்பித்து, அதற்குப் புறம்பான எடுத்துக்காட்டாக விளங்குவதனால் எந்தப் பயனும் இல்லை. ஆகையால், உயர்ந்த உண்மைகள் கற்பிக்கப்பட்டு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் நடத்தை அதனுடன் இசைந்திருக்கும் பொழுது தான் உண்மையான கல்வி ஏற்படும்.

– சாயி அருளமுதம், பாகம் 6, அத்தியாயம் 26

Sai Inspires (Tamil Translation): 27th November 2012

“Deho Devalaya” – Body is the temple, scriptures teach us. Realize that the human body is not just a mass of flesh and bone. The human body is a sacred instrument equipped with reason and emotion, capable of being used for deliverance from grief and evil; you have earned it after long ages of struggle. Honour it as such, keep it in good condition, so that it might serve that high purpose. Maintain it even more carefully than your brick homes and never let go of the conviction that it is an instrument and nothing more. Use it justly, for the purpose for which it has been designed and given. Install the Lord in the altar of your heart and invite Him into it. God loves to reside in a pure and aspiring heart.

– Divine Discourse, February 3, 1964

“தேஹோ தேவாலய” – புனித நூல்கள் உடலே திருக்கோயில் என்று நமக்கு உபதேசிக்கின்றன. மனித உடல் வெறும் சதை மற்றும் எலும்பின் திரள் மட்டுமே கிடையாது என்பதை அறியுங்கள். மனித உடல், துயரத்திலிருந்தும், தீயவற்றிலிருந்தும் விடுபடுவதற்குப் பயன்படுத்தப்படத் தகுதியான, ஆராயும் திறனும், உணர்வும் கொண்ட ஒரு புனிதமான கருவியாகும்; நீங்கள் பல காலமாகப் போராடி இதனைப் பெற்றுள்ளீர்கள். அந்த உயர் குறிக்கோளிற்குப் பயன்படுமாறு அதற்கு மரியாதையளித்து, அதனை நல்ல நிலையில் பேணுங்கள். செங்கற்களாலான உங்கள் வீடுகளைவிட இதனை மேலும் கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது ஒரு கருவி மட்டுமே வேறெதுவும் இல்லை எனும் திடநம்பிக்கையை என்றும் இழக்காதீர்கள். அது உருவமைக்கப்பட்டு அளிக்கப்பட்டதற்கான குறிக்கோளிற்காக அதனைச் சரியாகப் பயன்படுத்துங்கள். உங்கள் இதயம் எனும் பீடத்தில் கடவுளை அமர்த்துவதற்கு நீங்கள் அவரை வரவேற்க வேண்டும். தூய்மையான, ஆர்வம் கொண்ட இதயத்தில் வசிப்பதை அவர் விரும்புகிறார்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 3, 1964

Sai Inspires (Tamil Translation): 26th November 2012

Sand that has little grains of mica is valuable. But the sand, which has veins of gold, is much more precious. Thus, sand is valued according to the preciousness of the metal, which it has in its fold. Similarly, human hearts are evaluated by the contents therein. Keep God in your hearts. That is the best way to make your heart the most precious of your possessions. When God is installed in the heart, you will see only God everywhere, even in the objective world. The influence of God is such that even as you contemplate on Him, all traces of envy and greed will disappear from the mind.

– Divine Discourse, January 14, 1964

மைக்கா எனும் கனிமப் பொருளைக் கொண்ட மணல் விலை மதிப்பானதாகும். ஆனால், தங்க இழைகளைக் கொண்ட மணல் அதனை விட மேலும் மதிப்பு வாய்ந்ததாகும். ஆகையால், தன்னுள் கொண்டிருக்கும் உலோகத்தின் மதிப்பைக் கொண்டுதான் மணல் மதிப்பிடப்படுகிறது. அது போல, மனித இதயங்களும் அவற்றுள் உள்ளவற்றின்படியே மதிப்பிடப்படுகின்றன. கடவுளை உங்கள் இதயங்களில் கொள்ளுங்கள். உங்கள் இதயத்தை, உங்களின் மிகவும் மதிப்பான உடைமையாக மாற்ற இதுவே சிறந்த வழியாகும். கடவுளை உங்கள் இதயத்தில் அமர்த்தினால், நீங்கள் எங்கும் கடவுளைக் காண்பீர்கள். ஏன் இந்த பௌதிக உலகிலும் கூட அவரைக் காண்பீர்கள்! கடவுளின் தாக்கம் எவ்வாறு உள்ளதென்றால், அவரைப் பற்றி நினைத்தாலே, பொறாமை, பேராசை ஆகியவைச் சுவடே இல்லாமல் உங்கள் மனதிலிருந்து நீங்கிவிடும்.

– தெய்வீக உரை, ஜனவரி 14, 1964

Sai Inspires (Tamil Translation): 25th November 2012

Resolve this day to engage only in virtuous deeds, good thoughts and noble company. Let your mind dwell on elevating thoughts. Do not waste a single moment of your time in idle gossip or vain boasting or demeaning recreations. Death stalks behind you to snatch you and carry you off. Consider President Kennedy – how death was lurking around, waiting for the right time? Did he not have powerful soldiers and security men to guard him? All was in vain. No security personnel or device can prevent death from occurring. So while life persists, do good things, speak softly and sweetly. Never injure or insult another, serve those in need and keep the image of God, ever before your mind’s eye.

– Divine Discourse, January 14, 1964

நற்செயல்கள், நற்சிந்தனைகள் மற்றும் நல்லோர் சேர்க்கை ஆகியவற்றில் ஈடுபட வேண்டும் என்று இன்று உறுதி கொள்ளுங்கள். உங்கள் மனம் உயர்த்தும் எண்ணங்களில் நிலை கொள்ளட்டும். வீண் பேச்சுகளிலும், தற்பெருமையிலும், தாழ்த்தும் பொழுதுபோக்குகளிலும் உங்கள் நேரத்தின் ஒரு கணத்தைக் கூட வீணாக்காதீர்கள். மரணம் உங்களை இழுத்துத் தூக்கிச் செல்வதற்காக உங்களைத் தொடர்கிறது. ஜனாதிபதி கென்னடியை எடுத்துக் கொள்ளுங்கள் – சரியான நேரத்தை எதிர்பார்த்து மரணம் எவ்வாறு அவரைச் சுற்றிக் கொண்டிருந்தது? அவரைக் காப்பதற்கு அவரிடம் பலம் கொண்ட போராளிகளும், பாதுகாவலர்களும் இல்லையா? அனைத்தும் வீணாயிற்றே. எந்தப் பாதுகாவலரும், இயந்திரமும் மரணத்தை நிறுத்த முடியாது. ஆகையால், வாழ்க்கை இருக்கும் பொழுதே நற்செயல்களைச் செய்யுங்கள், மெதுவாகவும் இனிமையாகவும் பேசுங்கள். ஒருபொழுதும் பிறரைக் காயப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ விழையாதீர்கள். யாருக்குச் சேவைத் தேவைப்படுகிறதோ அவருக்குச் சேவை புரியுங்கள், எப்பொழுதும் கடவுளின் திருவுருவத்தை உங்கள் மனக்கண் முன் வைத்துக் கொள்ளுங்கள்.

– தெய்வீக உரை, ஜனவரி 14, 1964

Sai Inspires (Tamil Translation): 24th November 2012

Many of you are wasting a lot of time in meaningless pursuits. Time wasted is life wasted. Our ancients considered God as the embodiment of time and extolled Him thus: Kalaya Namah, Kala Kalaya Namah (Salutations to the Embodiment of Time, the One who conquered and transcends time). Do not forget the truth that time is verily God. You eagerly wait for a Sunday, thinking that you can relax and enjoy. In fact, you should feel sad that you are wasting time without doing any work on a Sunday. Utilise your time in a proper way. If you do not have any work, undertake social service. When your feelings are pure, and you utilize your time well to perform noble actions, your life will be sanctified and all work you do will be transformed into worship.

– Divine Discourse, 19 November 2002

உங்களில் பலர் அர்த்தமற்ற விஷயங்களில் காலத்தை அதிகமாக வீணடிக்கின்றீர்கள். காலத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதற்கு ஒப்பாகும். நம் முன்னோர்கள் கடவுளைக் காலத்தின் வடிவமாகக் கருதி, அவரை, காலாய நம:, கால காலாய நம: (காலத்தின் வடிவிற்கு என் வணக்கங்கள், காலத்தை வென்று அதனைக் கடந்தவருக்கு என் வணக்கங்கள்) என்று போற்றினார்கள். காலம் கடவுள் தான் எனும் உண்மையை மறந்து விடாதீர்கள். ஓய்வெடுத்து மகிழலாம் என்று நீங்கள் ஞாயிற்றுக்கிழமையை ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், ஞாயிற்றுக்கிழமையன்று வேலை எதுவும் செய்யாமல் காலத்தை வீணடிக்கிறோமே என்று நீங்கள் வருத்தம் தான் பட வேண்டும். உங்கள் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள். உங்களுக்கு வேலை எதுவும் இல்லையெனில், சமூக சேவை செய்யுங்கள். உங்கள் உணர்வுகள் தூய்மையாக இருந்து, உங்கள் நேரத்தை நற்செயல்கள் செய்வதற்கு நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் வாழ்க்கைப் புனிதமடைந்து, உங்கள் பணிகளனைத்தும் வழிபாடாக மாறிவிடும்.

– தெய்வீக உரை, 19 நவம்பர் 2002

Sai Inspires (Tamil Translation): 23rd November 2012

All that I seek from you is that you love your fellowmen, share their sufferings, and engage yourselves in serving them. Rich people and those in power have plentiful servants. But the distressed, the poverty-stricken, and those who suffer have no one to serve them. Go to such people and be their friends, their kith and kin, and their closest well-wishers. Let them welcome you as such. If you pour spirituality into the ears of those who are tortured by hunger, it will not be assimilated. First satiate the hunger. Give them God in the form of food and in the form of clothes. Give God in the form of peace to those who are afflicted with anxiety and in the form of medicine to those who are suffering from ill health. Give God in a form that will assuage fear, pain and sorrow. It is only when this is done that spirituality can soak into their hearts.

– Divine Discourse, 23 November 1982

நான் உங்களிடமிருந்து கேட்பதெல்லாம் நீங்கள் உங்கள் சக மனிதர்களின் மேல் அன்பு செலுத்தி, அவர்களுடைய கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டு, அவர்களுக்குச் சேவை செய்வதில் ஈடுபட வேண்டும் என்பது தான். பணக்காரர்களுக்கும், அதிகாரம் உள்ளவர்களுக்கும் நிறைய வேலைக்காரர்கள் உள்ளனர். ஆனால்வேதனையில் உழன்று கொண்டு, ஏழ்மையில் வாடிக்கொண்டு, துயரப்படுபவர்களுக்குச் சேவை செய்வதற்கு எவரும் இல்லை. அப்படிப்பட்ட மக்களை நாடி அவர்களுடைய நண்பர்களாக, அவர்களுடைய நெருங்கிய உறவினராக, அவர்களுடைய நலத்தை நாடுபவராக இருங்கள். உங்களை அவர்கள் வரவேற்கட்டும். பசியில் வாடுபவரின் செவிகளில் ஆன்மீகத்தை ஊற்றினால் அவர்களால் அதனை ஜீரணிக்க முடியாது. முதலில் அவர்களுடைய பசியைத் தீருங்கள். உணவின் வடிவிலும், உடைகளின் வடிவிலும் உள்ள கடவுளை அவர்களுக்கு அளியுங்கள். பதற்றத்தில் உள்ளவர்களுக்கு அமைதியின் வடிவில் உள்ள கடவுளையும், உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்களுக்கு மருந்தின் வடிவில் உள்ள கடவுளையும் அளியுங்கள். அவர்களுடைய பயம், வலி மற்றும் மனத்துயரம் ஆகியவற்றைத் தீர்க்கும் வடிவில் கடவுளை அவர்களுக்கு அளியுங்கள். இது நடந்தால் தான் ஆன்மிகம் அவர்களது இதயங்களில் ஊற முடியும்.

– தெய்வீக உரை, 23 நவம்பர் 1982

Sai Inspires (Tamil Translation): 22nd November 2012

The happiness that one derives from virtues is far superior to the happiness that you get from the possession of wealth. Unfortunately, many educated youth today are striving for wealth, physical strength and friendship. But all these have little value without the wealth of character. For men or women, character is the foundation. If you lack character, you become feeble in all other respects. Know that one’s strength lies in character and not in the wealth one earns. Materialistic wealth is not what we need today. Wealth can never confer true happiness. Hence, earn the wealth of virtues by developing good character. Without good character, all learning will prove futile, sooner or later. Embodiments of Love! With good character and purity of heart, perform all your actions. Know that even if a small act is done with a pure heart, it becomes fruitful.

– Divine Discourse, 19 November, 2002

செல்வம் சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை விட நற்குணங்கள் மூலம் ஒருவர் பெரும் மகிழ்ச்சி மிகவும் மேலானதாகும். இன்று, துரதிர்ஷ்டவசமாக கல்வி கற்ற பல இளைஞர்கள் செல்வத்திற்காகவும், உடல் பலத்திற்காகவும் தோழமைக்காகவும் பாடுபடுகிறார்கள். நன்னடத்தை எனும் செல்வத்துடன் மதிப்பிடும் பொழுது இவற்றைவிட மதிப்பில் குறைவானவையே. ஆணோ, பெண்ணோ, நன்னடத்தையே அடித்தளமாக உள்ளது. உங்களுக்கு நடத்தை சரியாக இல்லையெனில், நீங்கள் பிற விஷயங்களிலும் தளர்ந்துவிடுவீர்கள். ஒருவருடைய பலம் அவர் ஈட்டும் செல்வத்தில் இல்லை, அவருடைய நன்னடத்தையில் தான் உள்ளது. நமக்கு இன்று தேவைப்படுவது பொருட்செல்வம் இல்லை. செல்வத்தால் என்றும் உண்மையான மகிழ்ச்சியை நல்க முடியாது. ஆகையால், நன்னடத்தையை வளர்ப்பதன் மூலம் நற்குணங்கள் எனும் செல்வத்தை ஈட்டுங்கள். நன்னடத்தையில்லாமல், சீக்கிரமாகவோ தாமதமாகவோ அனைத்து கல்வியும் வீணாகிவிடும். அன்பின் வடிவங்களே! நன்னடத்தையுடனும், இதயத்தூய்மையுடனும் உங்கள் அனைத்துச் செயல்களையும் செய்யுங்கள். தூய்மையான இதயத்துடன் செய்யபடும் ஒரு சிறிய செயலும் கூட நற்பயன் பெரும்.

– தெய்வீக உரை, 19 நவம்பர், 2002

Sai Inspires (Tamil Translation): 21st November 2012

Your fortune or misfortune depends on your actions. Without realising this truth, you are indulging in evil deeds. You feel sorry when the consequences of your sins haunt you. What is the use? You have to be careful right from beginning not to commit sin. Truth is the ornament for your neck (Sathyam kantasya bhushanam), Charity is the true ornament of the hand (Hasthasya bhushanam daanam). Your hands are useless if they do not perform acts of charity. You have to sanctify each limb of your body by engaging in sacred activities. Let your eyes ever look only at sacred things. These teachings are simple to practise in your daily life. But do not take them lightly. Though they appear to be simple, they lead you to liberation. You may not be able to see the results of your meritorious deeds. But they confer on you all the happiness and comforts in due course of time.

– Divine Discourse, 19 November, 2002

உங்கள் அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் உங்கள் செயல்களைச் சார்ந்தே உள்ளது. இந்த உண்மையை அறியாமல், நீங்கள் தீய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுள்ளீர்கள். உங்கள் பாவங்களின் விளைவுகள் உங்களை வாட்டும் பொழுது நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். இதன் பயன் என்ன? முதலில் இருந்தே பாவம் செய்யாதிருக்க நீங்கள் கவனமாக கொள்ள வேண்டும். உண்மையே உங்கள் கழுத்தின் ஆபரணம் ஆகும் (சத்யம் கண்டஸ்ய பூஷணம்). அறமே கரங்களின் உண்மையான ஆபரணம் ஆகும் (ஹஸ்தஸ்ய பூஷணம் தானம்). அறச் செயல்கள் செய்யாவிடில் உங்கள் கைகள் இருந்து எந்த பயனும் இல்லை. புனிதச் செயல்களில் ஈடுபட்டு உங்கள் ஒவ்வொரு உறுப்பையும் புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கண்கள் புனிதமானவற்றையே எப்பொழுதும் காணட்டும். உங்கள் தினசரி வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு இந்த உபதேசங்கள் எளிதானவை. ஆனால் அவற்றை சாதாரணமாகக் கருதாதீர்கள். அவை எளிதாகத் தோன்றினாலும், அவை உங்களை மோக்ஷத்திற்கு இட்டுச் செல்லும். உங்கள் நற்செயல்களின் பலன்கள் உங்களுக்குப் புலப்படாமல் இருக்கலாம். ஆனால், அவை காலப்போக்கில் உங்களுக்கு சந்தோஷத்தையும் சௌகரியங்களையும் நல்கும்.

– தெய்வீக உரை, 19 நவம்பர், 2002