Monthly Archives: December, 2012

Sai Inspires (Tamil Translation): 31st December 2012

A mother fetching water from the well, will have a pot on her head, another on her hip and a third in her hand, and will be hurrying her way home, as she is always conscious of the infant in the cradle. If she forgets the infant, her gait slows down and she wanders around, chatting with all her friends. Similarly, if God, the Goal, is not cherished in the memory, one has to wander through many births and arrive home late. Hence keep the memory of the Lord and His glory, always with you. That will quicken your steps and you will arrive soon at the goal.

– Divine Discourse, February 18, 1964

கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருக்கும் தாய், தன் தலையில் ஒரு குடத்தையும், மற்றொன்றைத் தன் இடுப்பிலும், மூன்றாவதைத் தன் கையிலும் வைத்துக் கொண்டு, வீட்டில் தொட்டிலில் உள்ள தன் கைக்குழந்தையை எப்பொழுது நினைவில் கொண்டு வீட்டை நோக்கி விரைகிறாள். தன் கைக்குழந்தையை அவள் மறந்துவிட்டால், அவளுடைய நடை மெதுவாக மாறி, அவர்கள் இங்குமங்கும் சுற்றித் திரிந்து, தன் தோழிகள் அனைவரிடமும் பேசிக் கொண்டிருப்பாள். அதே போல, கடவுள் எனும் குறிக்கோள் நம் நினைவில் இல்லையெனில், ஒருவர் பற்பல பிறப்புகளில் சுற்றித் திரிந்து வீட்டிற்குத் தாமதமாகத் தான் வந்தடைய முடியும். ஆகையால், கடவுளையும் அவருடைய மகிமையையும் எக்கணமும் உங்கள் நினைவிலேயே வைத்திருங்கள். அது உங்கள் நடையை விரைவாக்கி உங்களை அந்தக் குறிக்கோளை விரைவில் எட்டச் செய்யும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 18, 1964

Sai Inspires (Tamil Translation): 30th December 2012

The lotus in your heart pines for the Sun, the splendour of the Loving Lord. To attain Him requires effort. Withdrawal of all attachment towards the world and cultivation of Divine Love alone can win it. God is the nearest and dearest entity, but ignorance hides Him away from the eye. The stars appear as dots of light, for they are at great distances from us. Just as the stars, God appears insignificant or ineffective to many, because they are keeping themselves too far away from Him. If some believe that God is not present or visible, it only means that they are at a too great a distance to be aware of Him. The love that God bears for each and every one is unequalled.

– Divine Discourse, Oct 17, 1966

உங்கள் இதயத்திலுள்ள தாமரை மலர், அன்புமிகு ஆண்டவனின் ப்ரகாசம் எனும் சூரியனுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. அவரை அடைவதற்கு முயற்சி தேவைப்படுகிறது. உலகின் மேலுள்ள அனைத்துப் பற்றுதல்களையும் விலக்கி, தெய்வீக அன்பை வளர்த்துக் கொண்டால் மட்டுமே நீங்கள் இதனை அடைய முடியும். கடவுள் மிக அருகாமையிலும், ப்ரியமானவராகவும் திகழ்கிறார். ஆனால் அறியாமை இதனை நம் கண்களிடமிருந்து மறைக்கின்றது. நம்மிடமிருந்து தொலைதூரத்தில் இருப்பதானால், நக்ஷத்திரங்கள் ஒளிரும் புள்ளிகளாக நமக்குத் தோன்றுகின்றன. நக்ஷத்திரங்களைப் போலவே பலருக்கு, அவர்கள் தம்மைக் கடவுளிடமிருந்து தொலைதூரத்தில் தள்ளி வைத்துக்கொண்டதனால், அவர் அற்பமாகவும் செயலற்றும் இருப்பதாகத் தோன்றுகிறார். சிலர் கடவுள் இல்லை அல்லது கண்ணுக்குப் புலன்படுவதில்லை என்று நம்பினால், அது அவர்கள் தம்மை அவரை அறியமுடியாத அளவிற்குத் மிகவும் தொலைவில் வைத்துக் கொண்டிருப்பது தான் காரணம். கடவுள் ஒவ்வொருவரின் மேலும் கொண்டுள்ள அன்பு ஒப்பில்லாததாகும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 17, 1966

Sai Inspires (Tamil Translation): 29th December 2012

Practice is the real thing that matters in spirituality. Scholarship is a burden, many times a handicap even. So long as God is believed to be far away, in temples and holy places, one will feel religion a burden and a hurdle. But install Him in your heart and you feel light, burdenless and even strong. It is like the food basket – when carried on a shoulder, it feels heavy. You are too weak, even to carry it. But sit near a stream and eat your food from the basket – though the food weight has not decreased, you feel stronger and joyful. That is the consequence of taking the food in. Do likewise, with the idea of God. Do not carry it on the shoulder, take it ‘in’! The scriptures teach, “God is verily the Life-breath, of every soul.” So practise to live in His Glory, in His Memory, in His contemplation, every single moment of your life.

– Divine Discourse, February 18, 1964

ஆன்மீக விஷயங்களில் நீடித்தப் பயிற்சியே உண்மையில் தேவைப்படுகிறது. பாண்டித்தியம் ஒரு சுமையே, பல சமயங்களில் அது ஒரு ஊனமாகக் கூட உள்ளது. கடவுள் எங்கோ தொலைவில், ஆலயங்களிலும், புனிதத் தலங்களிலும் மட்டுமே உள்ளார் என்ற நம்பிக்கை உள்ள வரையில், மதம் என்பது ஒரு சுமையாகவும், தடங்கலாகவும் தான் தோன்றும். அவரை உங்கள் இதயத்தில் பிரதிஷ்டை செய்து கொண்டால், சுமை குறைந்து, ஏன் மேலும் பலமாகவும் ஆகிவிடுவீர்கள். அது ஒரு உணவுக் கூடையை தோள்களில் சுமந்து செல்வது போல் பளுவாக இருக்கும். நீங்கள் அதனை சுமக்கக்கூடத் தெம்பில்லாமல் இருக்கிறீர்கள். ஆனால் ஒரு ஓடையில் கரையில் அமர்ந்து அந்த உணவுக் கூடையில் உள்ள உங்கள் உணவை நீங்கள் உண்டால், உணவின் எடை குறையாவிடினும், நீங்கள் பலமாகவும், மகிழ்ச்சியாகவும் ஆகிவிடுவீர்கள். உணவை உட்கொள்வதின் பலன் அதுவே. அவ்வாறே கடவுள் விஷயங்களிலும் செயல்படுங்கள். அதனை தோள்களில் சுமக்காதீர்கள், உட்கொள்ளுங்கள்! புனித நூல்கள், “ஒவ்வொரு ஆன்மாவின் உயிர் மூச்சே கடவுள்” என்று உபதேசிக்கின்றன. ஆகையால், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் அவரது மகிமையிலும், அவர் நினைவிலும், அவரைப் பற்றியச் சிந்தனையிலும் வாழ்ந்திடுங்கள்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 18, 1964

Sai Inspires (Tamil Translation): 28th December 2012

The body is a house, given to you for rent. The owner is God. Live there, so long as He wills, thanking Him for it, and paying Him the rent of Faith and Devotion. A strong will is the best tonic you can intake; the will becomes strong when you know that you are a child of immortality or a person who has earned the Grace of the Lord. In the epic Mahabharatha, the Pandavas are wonderful shining examples of faith and devotion. They won the Grace of the Lord and successfully defeated every single one of the wily strategy of their foes. The reinforcement of Grace from the Lord is the most reliable means of support. When you win the Grace of Lord, dishonour, defeat and despair fade away like fog evaporates before the Sun. Even disease cannot touch you. Hence, I advise you to face life by strengthening your spiritual urges and invoking the Grace of the Lord.

– Divine Discourse, October 15, 1966

இவ்வுடல் உங்களுக்கு வாடகைக்கு அளிக்கப்பட்ட ஒரு வீடாகும். இறைவனே அதன் சொந்தக்காரர் ஆவார். அவர் விரும்பும் வரை, நன்றியுடன், நம்பிக்கை மற்றும் பக்தி ஆகிய வாடகையைச் செலுத்தி நீங்கள் அதனுள் வசிக்கலாம். திட சங்கல்பமே தலை சிறந்த சத்து மருந்து (டானிக்) ஆகும். நீங்கள் இறவாமையின் குழந்தைகள் என்பதனையும், கடவுளின் அருளிற்குப் பாத்திரமானவர்கள் என்பதனையும் உணர்ந்தால் அந்த சங்கல்பம் மேலும் உறுதியடையும். மஹாபாரதத்தில், பாண்டவர்கள் நம்பிக்கை மற்றும் பக்திக்கு அருமையான உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் கடவுளின் அருளைப் பெற்று, அவர்களுடைய பகைவர்களின் ஒவ்வொரு சூழ்ச்சியானத் தந்திரத்தையும் வெற்றிகரமாகத் தோற்கடித்தார்கள். வலிமைப்படுத்தும் கடவுளின் அருள் தான் மிகவும் நம்பகமான, ஆதரவளிக்கும் உறுதுணையாகும். எவ்வாறு சூரியனின் முன் மூடுபனி ஆவியாகிவிடுமோ, அவ்வாறு கடவுளின் அருளை நீங்கள் பெற்றால், அவமரியாதை, தோல்வி மற்றும் துயரம் ஆகியவை வலுவிழந்துவிடும். நோய் கூட உங்களைத் தீண்ட முடியாது. ஆகையால், உங்கள் ஆன்மீக நாட்டங்களை பலப்படுத்திக் கொண்டு, கடவுளின் அருளை வேண்டிப் பெற்று, வாழ்கையை எதிர்கொள்ளவேண்டும் என நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966

Sai Inspires (Tamil Translation): 27th December 2012

There are learned scholars who spend a good deal of time in arguing that this form of God is superior to the other. This delusion has caused great harm. The truth is that each reveals a certain phase of Divinity. The comparison itself diminishes the integrity of any scholar! Anyone who has reverence for God, would not attempt at intellectually estimating the power of the Lord, they would, in fact, earnestly try to get an intuitive experience of the Divine! Harmony is the test of any religious outlook; if it breeds hate or faction or pride, the outlook is definitely evil. Keep away from these, if you are interested in your spiritual practice.

– Divine Discourse, February 3, 1964

மெத்தப் படித்த பல பண்டிதர்கள், கடவுளின் இந்தத் திருவுருவம் தான் மற்றதை உயர்ந்தது என்று வாதிடுவதில் பெரும்பாலும் தம் நேரத்தைச் செலவழிக்கின்றனர். இந்த மாயை பெரும் தீங்கை உருவாக்கியுள்ளது. ஒவ்வொன்றும் தெய்வீகத்தின் ஒரு அம்சத்தை வெளிப்படுத்துகின்றது என்பது தான் உண்மை. இப்படிப்பட்ட ஒப்பிடுதலே ஒரு பண்டிதரின் தகுதியைக் குலைக்கின்றது! கடவுளிடம் பக்தி கொண்டுள்ள யாரும், அவருடைய சக்தி இத்தகையது, அத்தகையது என புத்தியைக் கொண்டு அளவிட முயலமாட்டார்கள். மாறாக, மிகுந்த உள்ளர்வத்துடன் தெய்வத்தின் அனுபவத்தைத் தம் உள்ளுணர்வால் பெறுவதற்கு முயல்வார்கள்! இசைவே எவ்வித மதக் கொள்கைக்கும் சோதனையாக உள்ளது; அது வெறுப்பையோ, உட்கலகத்தையோ, அஹங்காரத்தையோ உருவாக்கினால் அது கண்டிப்பாக தீயது தான். உங்கள் ஆன்மீகப் பயிற்சியின் மேல் உங்களுக்கு நாட்டமிருந்தால் இவற்றைவிட்டு விலகியிருங்கள்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 3, 1964

Sai Inspires (Tamil Translation): 26th December 2012

Repetition of God’s Name is the process by which the dedicatory attitude can be cultivated and grown. When confronted by a calamity, you must attach yourself to this spiritual practice, even more firmly, instead of losing faith in it and getting slack. Do not give up the medicine, when you need it the most! The pity is that when most people face the first disappointment, they lose courage and confidence, and give up their Lord! There are also others, who call out the Names of the Lord, when they are displeased with some happenings, or when they are depressed, in a tone indicative of disgust, uttering it with a sigh or a groan. This is very incorrect. The Name of the Lord must always be pronounced with joy, gratitude, exultation and remembering Him in all splendour. Call Him with Love, call Him with a heart full of sincere yearning.

– Divine Discourse, October 15, 1966

கடவுளின் திருநாமத்தை ஜபிப்பதன் மூலம் தான் அர்ப்பணிப்பு மனப்பான்மையை வளர்க்க முடியும். உங்களை ஒரு பேரிடர் எதிர்கொள்ளும் பொழுது, நம்பிக்கையற்று தளர்ந்து விடாமல், மேலும் உறுதியுடன் இந்த ஆன்மீகப் பயிற்சியைப் பற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மிகவும் தேவையான பொழுது, மருந்து உட்கொள்வதை விட்டுவிடாதீர்கள்! பரிதாபகரமாக மக்கள் தமக்கு ஏற்படும் முதன் ஏமாற்றத்திலேயே, தைரியத்தையும் நம்பிக்கையையும் இழந்து தம் கடவுளை விட்டுவிடுகின்றனர்! மேலும் சிலர், சில சம்பவங்கள் நடக்கும் பொழுதோ, தாம் உளச்சோர்வடையும் பொழுதோ, பெருமூச்சுடனோ, முனகலுடனோ வெறுப்பு கொண்டது போல் கடவுளின் திருநாமங்களை உச்சரிக்கின்றனர். இது மிகவும் தவறானதாகும். எப்பொழுதும் மகிழ்ச்சி, நன்றி மற்றும் களிப்புடன், அவரது முழு மகிமையையும் நினைவில் நிறுத்தி அவருடைய திருநாமத்தை உச்சரித்திட வேண்டும். அவரை அன்புடன் கூப்பிடுங்கள், இதயம் கனிந்த, உளமார்ந்த ஆவலுடன் அவரைக் கூப்பிடுங்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966

Sai Inspires (Tamil Translation): 25th December 2012

Embodiments of Love! In all religions and countries, birthdays of great personalities are celebrated, but the ideals for which they lived are not remembered and followed. This turns celebrations into artificial observances. Christ taught people to love all beings and serve all with compassion. It is only by practising these ideals that one can truly celebrate Jesus Christ’s birthday. The Divinity within should be reflected in your every action. The seat of Truth is in your heart. Worshipping God means loving others with your full heart. You must live in love and lead a life of selfless service based on love. This is the best way to celebrate the birth of Jesus Christ.

– Divine Discourse, December 25, 1992

அன்பின் வடிவங்களே! அனைத்து மதங்களிலும் நாடுகளிலும் பல பெரியோர்களின் பிறந்த நாட்களை அவர்கள் வாழ்ந்து காட்டிய கோட்பாடுகளை நினைவில் கொண்டு வராமல், அவற்றைப் பின்பற்றாமல் கொண்டாடுகிறார்கள். இவை கொண்டாட்டங்களை செயற்கையான சடங்குகளாக மாற்றிவிடுகின்றன. இயேசுபிரான் அனைத்து ஜீவராசிகளையும் நேசிக்கவும் அனைவருக்கும் சேவை புரியவும் கற்றுக் கொடுத்தார். இவற்றைப் பின்பற்றினால் மட்டுமே இயேசுபிரானின் பிறந்த நாளை கொண்டாடியதாக பொருள்படும். உங்கள் ஒவ்வொரு செயலிலும் தெய்வீகம் ப்ரதிபலிக்க வேண்டும். உங்கள் இதயமே சத்தியத்தின் பீடமாகும். கடவுளை வணங்குவதென்றால் பிறரை உங்கள் முழு இதயத்தைக் கொண்டும் நேசிக்கிறீர்கள் என்று பொருளாகும். நீங்கள் அன்பில் வாழ்ந்து, அன்பை அடிப்படையாகக் கொண்ட தன்னலமற்ற சேவையின் வாழ்க்கையை வாழுங்கள். இதுவே இயேசுநாதரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு மிக உன்னதமான வழியாகும்.

– தெய்வீக உரை, டிசம்பர் 25, 1992

Sai Inspires (Tamil Translation): 24th December 2012

In the world today all those who are held in high esteem as great personages, have earned their good name only by their character and conduct. To accomplish anything, one should have a firm determination. All religions and scriptures agree that helping fellow-beings in times of need and saving them from distress is the greatest virtue. Every human being has equal rights in the world, for Divinity is present in all. To enjoy peace of mind, it is essential to practice forbearance and equanimity. Good and bad, rich and poor, educated and uneducated exist in every country. Even though born in the same family, some are narrow minded and have crooked ideas and indulge in selfish deeds, while others are noble and selfless. To be friendly towards all beings and do good with love is the primary duty of all.

– Divine Discourse, December 25, 1992

இன்றைய உலகில் மாபெரும் மனிதர்களாகக் கருதப்படும் மக்கள், தம் குணத்தாலும் நடத்தையாலும் மட்டுமே அத்தகைய நிலையை எய்தியுள்ளார்கள். எதனை அடைய வேண்டுமானாலும் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்து மதங்களும், புனித நூல்களும் சக மனிதர்களுக்கு உதவி தேவைப்படும் பொழுது அவர்களுக்கு உதவி அவர்களைத் துயரத்திலிருந்து மீட்பதே மிக உயர்ந்த நற்குணம் என்பதை ஆமோதிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வுலகில் சம உரிமை இருக்கிறது. ஏனெனில் அனைவரிலும் கடவுள் உறைகிறார். மன அமைதியை அனுபவித்திட சகிப்புத்தன்மையும் சம மனப்பாங்கும் கொள்வது அத்தியாவசியமானதாகும். நல்லோரும் தீயோரும், ஏழையும் பணக்காரரும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிலர் குறுகிய மனப்பான்மை கொண்டு, தீய எண்ணங்களுடன், சுயநலமான செயல்களில் ஈடுபடுகிறார்கள், ஆனால் மற்றவர்களோ உயர்ந்த எண்ணத்துடன் தன்னலமற்றவர்களாகவும் இருக்கின்றனர். அனைத்து ஜீவராசிகளிடமும் தோழமை கொண்டு, அவர்கட்கு அன்புடன் நன்மை செய்வதே அனைவரின் தலையாய கடமையாகும்.

– தெய்வீக உரை, டிசம்பர் 25, 1992

Sai Inspires (Tamil Translation): 23rd December 2012

Live in truth, you will then experience Divine Bliss. Faith in God promotes love. Love leads to peace. Peace prepares the way for truth. Where there is faith there is Love, Where there is Love there is Peace, Where there is Peace there is Truth. Where there is Truth there is Bliss, Where there is Bliss there is God. The Divine manifests Himself in many forms and is worshipped as such, for the joy to be derived from it. Truth is one, regardless of nation or religion. The names and forms of human beings may vary, but the Supreme in them (Sath-chith-ananda) does not vary. It is eternal and changeless. Embodiments of Divine Love! Strike down the walls that separate man from man. Get rid of differences based on caste and creed. Develop firm faith in the oneness of Humanity. Cultivate love in your hearts. Then nations will be united, prosperous and happy.

– Divine Discourse, December 25, 1988

நீங்கள் உண்மையில் வாழ்ந்தால் தெய்வீக ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். கடவுளின் மேல் கொள்ளும் நம்பிக்கை அன்பை வளர்க்கிறது. அன்பு அமைதிக்கு இட்டுச் செல்கிறது. அமைதி சத்தியத்திற்கு வழிவகுக்கிறது. நம்பிக்கையிருக்கும் இடத்தில் அன்பிருக்கிறது. அன்பிருக்கும் இடத்தில் அமைதியிருக்கிறது. அமைதியிருக்கும் இடத்தில் சத்தியமிருக்கிறது. சத்தியமிருக்கும் இடத்தில் ஆனந்தமிருக்கிறது. ஆனந்தமிருக்கும் இடத்தில் கடவுள் இருக்கிறார். இறைவன் பல உருவங்களில் தோன்றுகிறார். அதன் மூலம் பெறப்படும் மகிழ்ச்சிக்காக அவர் அவ்வாறாகவே வணங்கப்படுகிறார். எந்த தேசமாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் சத்தியம் ஒன்றே. மனிதர்களின் பெயர்களும் தோற்றங்களும் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களுள் இருக்கும் பரம்பொருள் (சத் சித் ஆனந்தம்) வேறானதில்லை. அது முடிவில்லாத்தது, மாறாதது. ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து பிரிக்கும் சுவர்களைத் தகர்த்திடுங்கள். சாதி மத பேதங்களை விட்டொழியுங்கள். மனித சமுதாயத்தின் ஒற்றுமையில் திட நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் இதயங்களில் அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறானால் தேசங்கள் ஒற்றுமையாகவும், செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

– தெய்வீக உரை, டிசம்பர் 25, 1988

Sai Inspires (Tamil Translation): 22nd December 2012

Lord Jesus Christ gave the following example while teaching His fishermen disciples: ‘In a river the water is flowing in a swift current. But the tiny fishes are able to swim in it and move about merrily, despite the speed of the current. In the same river, a huge elephant caught in the rapids, is likely to get washed away or drowned in spite of its enormous size. The elephant just cannot survive there! The reason is: What you need for survival in a river is not being large, but the ability to swim. Likewise a person who is caught up in the ocean of worldly existence needs, not so much metaphysics, scholarship or wealth, as much as the grace of Divine love.’ Without any knowledge of Vedanta, one can still surmount all the problems of life if one is blessed with God’s love. Hence, remember the Lord with Love, worship Him with Love and sanctify your life with Love.

– Divine Discourse, December 25, 1988

இயேசுபிரான் தன் மீனவ சீடர்களுக்கு உபதேசிக்கும் பொழுது பின்வரும் உதாரணத்தைக் கூறினார்: “ஆற்றில் நீர் விரைவான ஓட்டத்துடன் பாய்கிறது. ஆனால் சிறு மீன்களால் அதனுள் நீந்தி, அந்த நீரோட்டம் வேகமாக உள்ள போதிலும் மிகவும் சந்தோஷமாகச் சுற்றிவர முடிகிறது. அதே ஆற்றில், ஒரு பெரிய யானை அப்படிப்பட்ட விரைவான நீரோட்டங்களில் மாட்டிக் கொண்டு, அதனால் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கிவிடும். யானையால் அச்சூழ்நிலையில் உயிர் வாழ முடியாது! காரணம் என்னவென்றால்: நீங்கள் நீரில் வாழ்வதற்கு உருவில் பெரிதாக இருந்தால் போதாது, ஆனால் நீந்தத் தெரிய வேண்டும். அதே போல, உலகியல் தேவைகளின் சமுத்திரத்தில் மாட்டிக் கொண்டுள்ளவர்களுக்கு, தத்துவ சாஸ்திரமோ, பாண்டித்தியமோ, செல்வமோ, தெய்வீக அன்பின் அருளின் அளவிற்கு உதவாது.” வேதாந்தத்தின் ஞானம் இல்லாமலேயே ஒருவரால் கடவுளுடைய அன்பின் அருள் கொண்டே வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளையும் சமாளிக்க இயலும். ஆகையால், கடவுளை அன்புடன் நினைவில் கொள்ளுங்கள், அவரை அன்புடன் வணங்குங்கள், அன்பினால் உங்கள் வாழ்க்கையைப் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

– தெய்வீக உரை, டிசம்பர் 25, 1988