Sai Inspires (Tamil Translation): 4th December 2012

https://i0.wp.com/media.radiosai.org/sai_inspires/2012/uploadimages/SI_20121204.jpg

Lead your life such that, in posterity, people will remember you with gratitude and joy. To lead a good life, constant prompting from the Lord within you will be of great help. That inspiration can be got only by constantly reciting the Lord’s Name and calling on the inner springs of Divinity. The Lord’s Name is such a valuable instrument to win His Grace, to realize His Presence, to picture His Form and to remember His Glory. Repeating it from the depths of the heart, even once in the morning and once in the evening, will make your house, a home (griha) instead of a cave (guha). Senses are the windows, which when left open, make the lamp of the Name of God unsteady. Keep your senses away from the negative influences and concentrate on the Name of the Lord, its beauty and sweetness.

– Sathya Sai Speaks, Volume VI, Chapter 27

பிற்காலத்தில் உங்களை நன்றியுணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் மக்கள் நினைவில் கொள்ளும்படியாக உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு, உங்களுள் உறையும் ஆண்டவனின் இடையறாத உந்துதல் உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். கடவுளின் திருநாமத்தை இடைவிடாது உச்சரிப்பதன் மூலமும், உள்ளிருக்கும் தெய்வீக ஊற்றினை வெளிக்கொணர்வதன் மூலமும் மட்டுமே அந்த அருட்கிளர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும். கடவுளின் அருளை வெல்வதற்கும், அவர் அண்மையைப் பெறுவதற்கும், அவருடையத் திருவுருவைக் காண்பதற்கும், அவர் மகிமையை நினைவில் கொள்வதற்கும் அவருடையத் திருநாமம் அப்படிப்பட்ட ஓர் அரிய சாதனமாகும். உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு முறை காலையிலும், ஒரு முறை மாலையிலும் மட்டுமே கூட நீங்கள் உச்சரித்தாலும், உங்கள் வீட்டினை, ஒரு குகையாக மாற்றாமல், ஒரு நல்ல இல்லமாக மாற்றிவிடும். புலன்களே அந்த இல்லத்தின் ஜன்னல்கள்; அவற்றைத் திறந்து வைத்தால், கடவுளின் திருநாமம் எனும் விளக்கு அலைபாயும். உங்கள் புலன்களை தீய தாக்கங்களில் இருந்து விலக்கி வைத்து, கடவுளின் திருநாமத்தின் மேலும், அதன் அழகு மற்றும் இனிமையின் மேலும் ஒரு முகப்படுத்துங்கள்.

– சாயி அருளமுதம், பாகம் 6, அத்தியாயம் 27

Leave a comment