Sai Inspires (Tamil Translation): 3rd January 2013

So long as the consequence of Karma persists, you are bound to be born again and again to finish the consumption thereof. The slate of Karma has to be wiped clean so that your account of birth and death can be settled and closed with no balance. The Name of the Lord can light the spark of love within you to ignite the fire of Spiritual Wisdom, which will guide your mind towards this goal. Just as two branches of a tree, when grated one against another for some time generates enough heat to set the tree on fire, so too, continuous and sincere repetition of the names of the Lord will light the spark of wisdom within you. The holy Bhagavad Geetha says, Jnanagni dagdha karmanam – ‘The flames of wisdom reduce to ashes the effects of all activities’; they do not affect one anymore just like a rope that has been reduced to ash can bind no more.

– Divine Discourse, October 17, 1966

உங்கள் கர்மா இருக்கும் வரை, அது முழுதாகச் செலவழிக்கப்படும் வரை நீங்கள் மீண்டும் மீண்டும் பிறந்தே தீர வேண்டும். உங்கள் பிறப்பு மற்றும் இறப்பின் கணக்கு மீதமில்லாமல் தீர்க்கப்பட்டு கர்மா எனும் பலகை சுத்தமாக துடைக்கப்பட வேண்டும். உங்கள் மனதை இந்தக் குறிக்கோளை நோக்கி இட்டுச் செல்வதற்குத் துணையாக கடவுளின் திருநாமம், உங்களுள் அன்பின் பொறியை ஏற்றி அது ஆன்மீக ஞானம் எனும் தீயை மூட்டிவிடும். எவ்வாறு இரண்டு மரக்கிளைகள் சிறிது நேரத்திற்கு ஒன்றோடொன்று தேய்க்கப்பட்டால் அந்த மரத்தையே எரித்துவிடும் அளவிற்கு வெப்பத்தை ஏற்படுத்துமோ அவ்வாறே, விடாது, உளமார கடவுளுடைய திருநாமத்தை ஜபித்தால் உங்களுள் ஞானத்தை பொறியை அது ஏற்றிவிடும். புனிதமான பகவத் கீதை, “ஞானாக்னி தக்த கர்மணாம்” – “அனைத்து செயல்களின் பலனையும் ஞானத்தின் கொழுந்துகள் சாம்பலாக்கிவிடும்” – என்று கூறுகிறது. எவ்வாறு சாம்பலான கயிறு அதனையும் கட்டி வைக்காதோ அவ்வாறே அவையும் செயலிழந்துவிடும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 17, 1966

Leave a comment