Monthly Archives: February, 2013

Sai Inspires (Tamil Translation): 13th February 2013

The Lord has declared in the Geetha, “Mama maaya” or “My illusion”. This implies that the world is His handiwork, His Divine sport & glory (leela & mahima). It is devised as a training ground, an inspiration for those who desire to see Him, Who is its Source, Director, & Master. Once you see the world as the stage for His play, then you will no longer be misled, nor distracted, nor deceived by any tricks or stage effects. From illusion, you must get interested in the Author, the Master. The play is real only as long as it lasts, when you are in the theatre. So too, the world is just a mirage! A mirage does not originate from rain. It will not reach any lake or sea. It was not there before the sunrise, nor will it be there after the sunset. It is just an intervening phenomenon, it is best left alone! So too, God truly is more real than the world, this is the essence of Indian scriptures.

– Divine Discourse, Vol I, February 24, 1964

கீதையில் பகவான், “மம மாயா” அல்லது “என் மாயை”, என்று பிரகடனம் செய்தார். இவ்வுலமே அவரது கைவேலைப்பாடு, அவருடைய தெய்வீக விளையாட்டு மற்றும் அவரது லீலை மற்றும் மகிமை என்று இதன் மூலம் விளங்குகிறது. இதனுடைய தோற்றுவாய் மற்றும் இயக்குனர் மற்றும் எஜமானனாக விளங்குபவருக்காக ஆசைப்படுபவற்கெல்லாம் இதுவொரு பயிற்சி மைதானமாகவும் உள்ளுயிர்ப்பாகவும் விளங்குகிறது. இவ்வுலகை அவருடைய நாடக மேடையாக நீங்கள் பார்க்கத் துவங்கினால், மேடைத் தந்திரங்களால் நீங்கள் வழிதவறவோ, திசை திரும்பவோ, ஏமாற்றப்படவோ மாட்டீர்கள். மாயையிலிருந்து, நீங்கள் இயற்றியவரின், எஜமானனின் மேல் ஆர்வம் கொள்ளவேண்டும். நீங்கள் நாடக சபாவில் இருக்கும் வரை, அந்த நாடகம் முற்று பெரும் வரை தான் உண்மையாகத் தோன்றும். அதே போல, இவ்வுலகமும் ஒரு கானல் நீர் தான்! கானல் நீர் மழையிலிருந்து உருவாவதில்லை. அது எந்த ஏரியையோ அல்லது கடலையோ சென்றடையாது. அது சூரியோதத்திற்கு முன்னரும், சூரியாஸ்தமனத்திற்குப் பின்னரும் இருப்பதில்லை. அது நடுவே தோன்றும் ஒரு காட்சியே. அதனை அவ்வாறே விட்டுவிடுவது நல்லதே! அதே போல, கடவுள் இவ்வுலகை விட மிகவும் உண்மையானவர். இதுவே பாரதத்தின் புனித நூல்களின் சாரமாகும்.

– தெய்வீக உரை, அத்தியாயம் 1, பிப்ரவரி 24, 1964

Sai Inspires (Tamil Translation): 12th February 2013

Detachment (vairagya) is a result of the Lord’s Grace; it needs years of yearning and struggle. Meanwhile begin today with the first step, which is cleansing of your mind and cultivation of virtues. Even if you are unable to start or follow these, at least do not laugh at those who do and discourage them. Do not depend upon others for doing your work or have someone attend to your personal wants. Do them yourself – that is the mark of being truly self-reliant and free! Never accept anything free from anyone. You must pay it back, in service or work. Thus, you will make yourselves self-respecting individuals. Receiving a favour means getting bound to the giver. Grow in self-respect and dignity. That is the best service you can do to yourself.

– Sathya Sai Speaks, Vol I, MahaShivarathri, 1955

கடவுளின் அருளினால் வைராக்கியம் பெறப்படுகிறது; வருடக்கணக்கான விழைதலும் போராட்டமும் அதற்குத் தேவைப்படுகிறது. மனதைத் தூய்மைப்படுத்தி, நற்குணங்களை வளர்ப்பது  எனும் முதல் அடியினை இன்றே எடுத்து வையுங்கள். உங்களால் இதனைத் துவங்க முடியவில்லையென்றாலும் இதனைச் செய்யும் பிறரை ஏளனப்படுத்தாமலும் அதைரியப்படுத்தாமலுமாவது இருங்கள். உங்கள் வேலையைச் செய்வதற்கும், உங்களுக்குக்காக வேலை செய்வதற்கும் பிறரைச் சார்ந்திருக்காதீர்கள். அவற்றை நீங்களே செய்யுங்கள் – அதுவே உண்மையில் தற்சார்புடன் இருப்பதற்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் உண்மையான அடையாளமாகும்! யாரிடமிருந்தும் எதனையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளாதீர்கள். ஒரு சேவையாலோ அல்லது ஏதோவொரு செயலாலோ நீங்கள் அவர்களுக்குத் திருப்பித் தாருங்கள். இவ்வாறு, உங்களை நீங்கள் சுயமரியாதை கொண்டவர்களாக ஆக்கிக்கொள்வீர்கள். ஒருவரிடமிருந்து ஒரு உபகாரத்தை நீங்கள் பெற்றுக்கொள்வது கொடுத்தவருடன் உங்களை கட்டுண்டிருக்கச் செய்கிறது. சுயமரியாதையையும், கண்ணியத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளும் மிகவுயர்ந்த சேவையாகும்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி, 1955

Sai Inspires (Tamil Translation): 11th February 2013

All of you are under the sentence of imprisonment in the world of birth and death (samsara). When a prisoner is taken from one place to another, he is accompanied by two constables. So too, when you move from one prison (body) to another, the constables, egoism (ahamkaram) and attachment (mamakaram) accompany you. In the prison, you have to do the work you are ordered to, and do it well. You cannot argue that rewards are not distributed justly, and also you are not entitled to desist from your allotted task. If you do, your sentence will be extended or you will be transferred to another jail. On the other hand, if you quietly accept the sentence and go about your work without clamour or murmur, your term will be reduced, you may be released! Become aware of your sentence, adopt good attitude and earnestly practise the means to set yourself free!

– Divine Discourse, 20 February 1964

பிறப்பு மற்றும் இறப்பால் ஆன இவ்வுலகம் (சம்சாரம்) எனும் சிறைவாசம் எனும் தண்டனையை நீங்கள் அனைவரும் அனுபவித்துக் கொண்டுள்ளீர்கள். ஒரு கைதி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இட்டுச் செல்லப்படும் பொழுது அவனுடன் இரண்டு காவலர்கள் செல்வார்கள். அதே போல, நீங்கள் ஒரு சிறையிலிருந்து (உடல்) மற்றொரு சிறைக்குச் செல்லும் பொழுது, காவலர்களான அஹங்காரமும், மமகாரமும் உங்களுடன் செல்கின்றன. சிறைச்சாலையில் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை சரியாகச் செய்ய வேண்டும். நியாயமான முறையில் சன்மானம் அளிக்கப்படுவதில்லை என்று நீங்கள் வாதாட முடியாது. மேலும் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை விட்டு விலகியிருக்க முடியாது. நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் தண்டனை மேலும் நீடிக்கப்படலாம் அல்லது நீங்கள் வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றப்படலாம். அனால், உங்களுக்கு அளிக்கப்பட தண்டனையை நீங்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டு, அமளியோ முணுமுணுப்போ இல்லாமல் உங்களுக்கு இடப்பட்ட பணியை நீங்கள் மேற்கொண்டால், உங்கள் தண்டனை குறையும், உங்களை விடுதலை செய்யவும் கூடும்! உங்கள் தண்டனையை உணர்ந்து, நல்ல மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, உங்களை விடுவித்துக் கொள்வதற்கான முயற்சியை முனைப்புடன் மேற்கொள்ளுங்கள்!

– தெய்வீக உரை, 20 பிப்ரவரி 1964

Sai Inspires (Tamil Translation): 10th February 2013

A person once told Dr. Johnson, the famous English thinker, that he could seldom get time to recite the Name of God, what with the hundreds of things he had to do from morning till nightfall and even far into the night. Dr. Johnson replied with another question. He asked how millions of people found space to live upon the face of the earth, which is two-thirds water and the rest is too full of mountains, deserts, forests, icy regions, river beds, marshes and similar impossible areas. The questioner said that man somehow struggled to find living space. So too, said Dr. Johnson, man must somehow find a few minutes a day for prayer to the Lord. Keep the Name and Form of your choice ever in your consciousness. The Name must be as constant as breathing. And for this, practice is essential.

– Sathya Sai Speaks, Vol 1, MahaShivarathri, 1955

பிரசித்தமான சிந்தனையாளரான டாக்டர் ஜான்சனிடம் ஒருமுறை ஒருவர், தான் காலையிலிருந்து இரவு வரையும் அதனையும் தாண்டி இரவு வேளையிலும் செய்ய வேண்டிய நூற்றுக்கணக்கான வேலைகளின் நடுவே கடவுளின் பெயரை உச்சரிப்பதற்காகத் தனக்கு நேரம் கிடைப்பதில்லை என்று கூறினார். அதற்கு டாக்டர் ஜான்சன் மற்றொரு கேள்வியை பதிலாக அளித்தார். மூன்று பங்கு நீரினாலும், மற்ற இடங்கள் மலைகள், பாலைவனங்கள், காடுகள், பனிப்பிரதேசங்கள், ஆற்றுப் படுகைகள், சகதி மண்டலங்கள், அண்ட முடியாத இடங்கள் ஆகியவற்றால் ஆன இவ்வுலகில் எவ்வாறு கோடிக்கணக்கான மக்கள் தாம் வாழ்வதற்கான இடத்தை தேடித்பிடித்தனர் என்று அவர் கேட்டார். மனிதன் கஷ்டப்பட்டு எப்படியோ தான் வாழ்வதற்கு இடத்தைத் தேடித் பிடித்துள்ளான் என்று கேள்வி கேட்ட நபர் கூறினார். அதற்கு, அவ்வாறே மனிதன் ஒரு நாளில் சில மணித்துளிகளையாவது கடவுளுக்குப் பிரார்த்தனை செய்வதற்காக எப்படியோ தேடிப்பிடிக்க வேண்டும் என்று டாக்டர் ஜான்சன் கூறினார். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நாமத்தையும் உருவத்தையும் உங்கள் நினைவில் எப்பொழுதும் வைத்திருங்கள். நீங்கள் சுவாசிப்பதைப் போன்று நாமமும் இருக்க வேண்டும். இதனை நிலையைப் பெறுவதற்கு பயிற்சி மிகவும் அவசியமாகும்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி, 1955

Sai Inspires (Tamil Translation): 9th February 2013

You are as distant from the Lord, as you think you are; as near Him, as you feel you are. The distance from Me to you is the same as the distance from you to Me, is it not? You complain that I am far from you, though you are approaching nearer and nearer. How can that be? I am as near you, as you are near to Me! Nearness to the Lord is won by Devotion, which cannot be steady until you get rid of the feelings of ‘I’ and ‘Mine’. Look upon joy and grief as teachers of hard-work and balance. Grief is a friendly reminder, a good taskmaster, even a better teacher than joy. The Lord grants both protection and punishment – for, how can He be the Lord, if He does not insist on strict accounting and strict obedience?

– Divine Discourse, 20 Feb 1964

நீ இறைவனிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருப்பதாகக் கருதுகிறாயோ, அவ்வளவு தொலைவில் இருக்கிறாய்; எவ்வளவு அண்மையில் இருப்பதாகக் கருதுகிறாயோ, அவ்வளவு அண்மையில் இருக்கிறாய். உன்னிடமிருந்து நான் எந்த தூரத்தில் உள்ளேனோ, அதே அளவு தூரத்தில் தான் நீயும் என்னிடமிருந்து இருக்கிறாயல்லவா? நீ என்னருகில் வந்து கொண்டிருந்தும் நான் உன்னிடமிருந்து வெகு தொலைவிலுள்ளதாக நீ முறையிடுகிறாய். எவ்வாறு அப்படியிருக்க முடியும்? நீ எனக்கு எவ்வளவு அருகில் உள்ளாயோ அந்த அளவில் தான் நானும் உனக்கருகில் உள்ளேன்! “நான்” மற்றும் “எனது” எனும் எண்ணங்களை ஒழித்தால் மட்டுமே தடுமாறாது இருக்கும் பக்தியின் மூலம் தான் இறைவனுடனான அண்மை கிட்டும். கடும் உழைப்பு மற்றும் நிதானத்தை போதிக்கும் ஆசிரியர்களாக மகிழ்ச்சியையும் துயரத்தையும் கருதுங்கள். துயரம் ஒரு நேசமான நினைவூட்டுபவராகவும், ஒரு நல்ல பணி ஏவுநராகவும், ஏன் மகிழ்ச்சியை விடவும் உயரிய ஆசிரியராகவும் உள்ளது. கடவுள் காப்பாற்றவும் செய்கிறார், தண்டிக்கவும் செய்கிறார். ஏனெனில் கண்டிப்பான கணக்கையும், கண்டிப்பான கீழ்ப்படிதலையும் வலியுருத்தாதிருந்தால் அவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்?

– தெய்வீக உரை, 20 பிப்ரவரி 1964

Sai Inspires (Tamil Translation): 8th February 2013

A renunciant couple were once proceeding through a thick jungle on a pilgrimage to an inaccessible shrine. The husband saw on the footpath a precious stone, shining brilliantly when the Sun’s rays fell upon it from between the leaves. He hastily threw some sand over it with the movement of his foot, so that his wife may not be tempted to pick it up and become a slave to the tinsel. The wife saw the gesture and chided the husband for still retaining in his mind, a distinction between sand and gold. For her, both were the same. This habit of judging and labelling others is a prevalent practice today. What can you know of the inner working of another’s mind?

– Sathya Sai Speaks, Vol 1, MahaShivarathri 1955

துறவறம் பூண்ட தம்பதிகள் ஒருமுறை ஒரு அண்ட முடியாத கோயிலை நோக்கி ஒரு அடர்ந்த காட்டில் யாத்திரை மேற்கொண்டனர். கணவன் பாதையில் இலைகளின் நடுவே வந்த சூரியக் கதிர்களினால் பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு விலை மதிப்பான மனிக்கக்கல்லைக் கண்டான். தன் மனைவி அதனால் கவரப்பட்டு அதனை எடுத்துக் கொண்டு அந்த அல்பமான பொருளுக்கு அடிமையாகி விடக் கூடாது என்றெண்ணி, தன் காலால், அதன் மேல் அவசர அவசரமாக மணலைப் பரப்பினான். அவன் செயலைக் கண்ட அவன் மனைவி, அவன் மனதில் மண்ணிற்கும் பொன்னிற்கும் வித்தியாசம் கண்டதற்காகத் தன் கணவனைக் கடிந்து கொண்டாள். அவளுக்கு இரண்டுமே ஒன்றாகத்தான் இருந்தன. இந்நாளில் இவ்வாறாகப் பிறரை எடைபோடுவதும், அவர்கள் மேல் முத்திரைக் குத்துவதும் சகஜமாகிவிட்டன. மற்றவர்களின் மனதில் என்ன உள்ளது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி 1955

Sai Inspires (Tamil Translation): 7th February 2013

A lame man and a blind man became friends and they moved from one place to another, with the lame man riding on the shoulder of the blind. One day, the lame man saw a field of yellow cucumber and suggested to the blind man that they pick a few and eat their fill. The blind man asked, “Brother, have they fenced the crop?” The lame man said, “No!” The blind man said, “Then let us move on, you know there are sweet and bitter varieties – if these vegetables are left unguarded – they must be bitter!” The blind man, by his intellect, was able to discover that they were bitter even without tasting them. He used the intelligence to perceive the truth faster and clearer. Make the intellect the Master of your mind and you will not fail; you will fail only when the senses establish mastery over the mind. Clarify your intelligence through spiritual discipline.

– Divine Discourse, February 20, 1964

ஒரு முடவனும் குருடனும் நண்பர்களாகி, முடவன் குருடனின் தோள் மேல் ஏறி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு நாள், முடவன் ஒரு மஞ்சள் வெள்ளரி வளரும் வயலைக் கண்டு, சிலவற்றைப் பறித்து வயிறு நிறைய உண்ணலாம் என்று குருடனிடம் யோசனை அளித்தான். “சகோதரா, அந்தத் தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டுள்ளார்களா?”, என்று குருடன் வினவினான். “இல்லை”, என்றான் முடவன். “அவ்வாறானால், நாம் இதனை விடுத்துச் செல்லலாம். ஏனெனில், இனிப்பான, கசப்பான இருவகை வெள்ளரிகள் உள்ளான என்பதனை நீ அறிவாய் – இவை வேலியால் காப்பாற்றப்படாவிடில், அவை கசப்பானவையாக இருக்கும்!”, என்று குருடன் கூறினான். குருடன், தன் புத்திக்கூர்மையால் அவற்றை சுவைக்காமலே அவை கசப்பானவை என்பதை அறிந்தான். அவன் உண்மையை அறிவதற்குத் தன் புத்தியை விரைவாகவும் தெளிவாகவும் உபயோகித்தான். உங்கள் புத்தியை மனதின் எஜமானனாக ஆக்கினால் அது உங்களைத் தோற்றுப் போகாமல் காக்கும்; புலன்கள் உங்கள் மனதினை ஆண்டால் மட்டுமே நீங்கள் தோற்றுப் போய்விடுவீர்கள். ஆன்மீக கட்டுப்பாட்டால் உங்கள் புத்தியைத் தெளிவுபடுத்துங்கள்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 20, 1964

Sai Inspires (Tamil Translation): 6th February 2013

A child told its mother as it went to bed at night, “Mother, wake me up when I am hungry.” The mother answered, “There is no need, your hunger will itself wake you up.” So too, when the hunger for God arises, it will itself activate you to seek the fulfilment. God has endowed you with hunger and illness, and He provides the food and medicine. Your duty is to see that you get the right hunger and the right illness and use the appropriate food or drug! Man must be yoked to the world and broken; that is the training which will teach that the world is unreal. When you touch fire and get the sensation of burning, you withdraw your hand instantly. Unless you touch it, you will be aware only of its light. It is light and heat both; just as this world is both true and false, that is to say, unreal.

– Sathya Sai Speaks, Vol I, MahaShivarathri, 1955

படுக்கச் செல்லும் முன் ஒரு குழந்தை தன் தாயிடம், “அம்மா, நான் பசி கொள்ளும் பொழுது எண்ணெய் எழுப்பிவிடுங்கள்”, என்று கூறியது. “அதற்குத் தேவை இருக்காது. உன் பசியே உன்னை எழுப்பிவிடும்”, என்று தாய் பதிலளித்தாள். அதே போல, கடவுளுக்காக பசி ஏற்படும் பொழுது, அதுவே அந்த முழுமையை அடைய உங்களைத் தூண்டிவிடும். கடவுள் உங்களுக்கு பசியையும் நோயையும் அளித்து, உணவையும் மருந்தையும் கூட அளிக்கிறார். சரியான பசியையும், சரியான நோயையும், அவற்றிற்குத் தகுந்த உணவையும் மருந்தையும் உபயோகிப்பது உங்கள் கடமையாகும்! மனிதன் உலகத்துடன் பிணைக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்; உலகம் பொய்யானது என்பதை அந்தப் பயிற்சி கற்றுக் கொடுக்கும். தீயைத் தீண்டி, அது உங்களுக்கு எரிச்சல் அளித்தால் நீங்கள் உங்களை கையை உடனடியாக விலக்கிக் கொள்கிறீர்கள். அதனைத் தீண்டும் வரை அதன் ஒளி மட்டுமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது ஒளி மற்றும் வெப்பம் ஆகிய இரண்டுமாக உள்ளது. இவ்வுலகும் உண்மை பொய் ஆகிய இரண்டுமாக உள்ளாது.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி, 1955

Sai Inspires (Tamil Translation): 5th February 2013

There are three types of devotion: The Vihanga method, where like a bird swooping down upon the ripe fruit on the tree, the devotee is too impatient and by the very impatience one exhibits, loses the fruit, which falls from one’s hold. The Markata method is akin to a monkey which grabs one fruit and then chooses another and tugs at that, giving way to unsteadiness as it is unable to decide which fruit it wants. So too, the devotee of this type hesitates and changes the goal much too often and thus loses all chances of success. The third and ideal type is the Pipeelika method, where like the ant, which slowly but steadily proceeds towards the sweetness, the devotee also moves directly, with undivided attention towards the Lord and wins His Grace.

– Sathya Sai Speaks, Volume I, MahaShivarathri, 1955

பக்தி மூன்று வகைப்படும்: விஹங்க முறை – ஒரு பறவை எவ்வாறு ஒரு மரத்திலுள்ள பழுத்த பழத்திற்காக கீழ் நோக்கிப் பாய்கிறதோ, அவ்வாறே  பக்தனும் மிகவும் பொறுமையற்று, அந்தப் பொறுமையின்மையாலேயே அந்தப் பழத்தை நழுவவிடுகிறான். மர்கட முறை – எவ்வாறு ஒரு குரங்கானது ஒரு பழத்தை கையில் எடுத்ததும் மற்றொரு பழத்திற்காக இதனை விட்டுவிடுகிறதோ, அவ்வாறே நிதானமற்று, எந்தப் பழம் வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாமல் இருக்கிறதோ, அவ்வாறே இந்த விதமான பக்தனும் தயக்கத்துடன் தன் குறிக்கோளை மீண்டும் மீண்டும் மாற்றிக்கொண்டு வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளையும் இழக்கிறான். மூன்றாவதான, உயர்வான முறை பிப்பீலக முறையாகும். இம்முறையில், ஒரு எரும்பு எவ்வாறு மெதுவாக ஆனால் நிதானமாக இனிமையை நோக்கிச் செல்கிறதோ, அவ்வாறே பக்தனும் கடவுளை நோக்கி நேராக, கவனம் சிதறாமல் சென்று அவருடைய அருளைப் பெறுகிறான்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி 1955

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹா சிவராத்திரி 1955

Sai Inspires (Tamil Translation): 4th February 2013

Spiritual discipline is more arduous than physical discipline. Imagine the tremendous amount of effort undergone by the lady who runs along a wire stretched across the ring underneath a circus tent. The gain is just a few rupees after all. The same steadfastness and systematic effort aimed at a higher reward can endow you with mental balance and you can maintain your equilibrium under the most adverse or the most testing circumstances. But for such spiritual achievements the intellect and other instruments of perception are more important than the limbs. The intellect is the key. Make the intellect the master of your mind and you will not fail. You will fail only when the senses establish mastery over the mind.

– Sathya Sai Speaks, February 20, 1964

ஆன்மீகக் கட்டுப்பாடு  தேகக் கட்டுப்பாட்டை விட கடினமானது. சர்க்கஸ் கூடாரத்தின் கீழ், ஒரு வட்டத்தில்,  ஒரு கம்பியின் மேல் ஓடும் பெண்மணி செய்திருக்கும் உழைப்பு எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். சிறிதளவு பணத்திற்காக அவள் அவ்வாறு செய்கிறாள். மேலும் உயர்வான ஒன்றை அடைவதற்கு அதே உறுதி மற்றும் முறையான உழைப்பு இருந்தால், அது உங்களுக்கு மனச்சமநிலை அளித்து, மிகவும் கடினமான நேரங்களிலும் நீங்கள் நிதானமாக இருக்க உதவும். ஆனால், அப்படிப்பட்ட ஆன்மீக சாதனைகளுக்கு புத்தி மற்றும் அறிய வைக்கும் கருவிகளான புலன்கள் ஆகியவை மற்ற உறுப்புகளை விட மிகவும் முக்கியமானவை. புத்தியே மிகவும் முக்கியமானதாகும். புத்தியை உங்கள் மனதின் எஜமானனாக வைத்தால் நீங்கள் தோல்வியடைய மாட்டீர்கள். உங்கள் புலன்கள் உங்கள் மனதின் மேல் ஆளுமை கொண்டால் மட்டுமே நீங்கள் தோல்வியடைவீர்கள்.

– சாயி அருளமுதம், பிப்ரவரி 20, 1964