Monthly Archives: March, 2013

Sai Inspires (Tamil Translation): 1st March 2013

The letter ‘Gu’ in the word Guru signifies Gunatheetha – the one who has transcended the three qualities of Ignorance (Thamasik), Passion (Rajasik) and Virtuousness (Sathvik) and the letter ‘Ru’ signifies the one who is Roopa Varjitha (Beyond the Form). The Guru destroys illusion and sheds light, His Presence is ever cool and comforting. He comes to remind people that they have forgotten that they have lost the most precious part within themselves and yet are unaware of it! He is the Physician for curing the illness which brings about the repetitive suffering from birth to death. He is adept at the treatment needed for the cure. If you have not yet got such a Guru, Pray to the Lord Himself to show the way and He will most certainly come to your rescue!

– Divine Discourse, August 1, 1956

‘கு’ என்கிற சொல் குணாதீதன் – மூன்று குணங்களான அறியாமை (தாமசிகம்), தீவிர உணர்ச்சி (ராஜசிகம்) மற்றும் நற்குணம் (சாத்விகம்) ஆகியவற்றைக் கடந்தவர். ‘ரு’ என்கிற சொல் ரூப வர்ஜிதன் (உருவத்தைக் கடந்தவர்) என்பதை உணர்த்துகிறது. குரு, மாயையை அழித்து ஒளியேற்றுகிறார், அவருடைய அருகாமை என்றும் குளுமையாகவும் சுகமளிப்பதாகவும் உள்ளது. தம்முள் உள்ள மிக அரியதான பகுதியைத் தொலைத்துவிட்டு, அதனை அறியாமலிருக்கின்றனர் என்பதனை மக்களின் நினைவிற்குக் கொண்டுவருவதற்காகத் தோன்றுகிறார்! பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான மீண்டும் மீண்டும் பீடிக்கும் நோயைத் தீர்க்கும் மருத்துவர் அவர். இதனை குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் அவர் கைதேர்ந்தவர். அப்படிப்பட்ட குரு உங்களுக்கு இன்னும் கிட்டவில்லையெனில், கடவுளிடம் உங்களுக்கு வழிகாட்டுவதற்கு பிரார்த்தித்தால் அவர் நிச்சயமாக உங்களைக் காப்பாற்ற வருவார்!

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956

Sai Inspires (Tamil Translation): 28th February 2013

Everyone must make their exit someday – that moment should not be one of anguish; one must depart with a smile and a bow. In order to accomplish that, a lot of preparation is necessary. Leaving all that has been accomplished and accumulated during a long lifetime is a very hard task. So prepare for it from now, by discarding attachment to one thing after another. You see many things in your dreams, and you may even acquire power and position. When you awaken, you do not cry over the loss of those, even though they were very real and gave you real joy and satisfaction during your dream. You tell yourself, “It was just a dream” and move on with life! What prevents you from treating with similar nonchalance, all the possessions you gather during the waking state? Cultivate that attitude and depart with a smile, when the curtain is drawn!

– Divine Discourse, August 1, 1956

அனைவரும் என்றாவதொரு நாள் வெளியேறியாக வேண்டும் – அத்தருணம் வருத்தமானதாக இருக்கக் கூடாது; புன்முறுவலுடனும் பணிவுடனும் வெளியேற வேண்டும். அவ்வாறு இருப்பதற்கு, மிகவும் அதிகமான பயிற்சி தேவைப்படுகிறது. வாழ்நாள் முழுதும் பெற்றுத் சேமித்து வைத்தவற்றை விட்டுவிடுவதென்பது மிகக் கடினமான செயலாகும். ஆகையால், அதற்காக இப்பொழுதிருந்தே, பொருட்களின் மேலுமுள்ள பற்றை ஒவ்வொன்றாகத் துறந்து  ஆயத்தமாகுங்கள். உங்கள் கனவுகளில் நிறைய பொருட்களைக் காண்கிறீர்கள். அதிகாரமும் பதவியும் கூடப் பெறக் கூடும். ஆனால், உங்கள் உறக்கம் கலைந்ததும் இவை உங்களுக்கு கனவில் உண்மையாகத் தோன்றி, உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளித்திருந்தாலும் இவற்றை இழந்ததைப் பற்றி நீங்கள் அழுவதில்லை. “இது ஒரு கனவு தான்”, என்று நீங்களே உங்களிடம் சொல்லிக் கொண்டு, வாழ்கையை நடத்துகிறீர்கள்! நீங்கள் விழிப்பு நிலையில் இருந்த பொழுது சம்பாதித்த அனைத்தையும் அதே போன்று பற்றில்லாமல் இருக்க முடியாது? அந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, திரை மூடும் பொழுது புன்முறுவலுடன் வெளியேறுங்கள்!

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956

Sai Inspires (Tamil Translation): 27th February 2013

Do not be carried away by the cynicism of critics – that should serve only to encourage you. Examine the faults that may lie dormant in you and work sincerely to get rid of them. Do not merely give platform speeches on the excellence of qualities such as charity, service, sympathy, equality, secularism, etc. Descend from the platform and practise at least a few ideals sincerely. When your neighbour is in the throes of a serious illness, do not rest content with the idea that you are happily free. You are not free if even one is suffering or bound. Remember that the food you give to each living being reaches the Supreme Divine Himself, the service you do to any being, anywhere in the globe, fills the Lord with joy.

– Divine Discourse, 25 February 1964

விமர்சனம் செய்பவர்களின் ஏளனத்தைக் கண்டு வருத்தப்படாதீர்கள். அது உங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும். உங்களுள் ஆழப்பதிந்திருக்கும் குறைகளை ஆராய்ந்து, அவற்றை நீக்குவதற்காக நேர்மையாகப் பாடுபடுங்கள். தான-தர்மங்கள், சேவை, பரிவு, சமத்துவம், சமயசார்பின்மை ஆகிய நற்குணங்களின் உயர்வைப் பற்றி மேடைகளில் பேசிக்கொண்டு மட்டும் இருக்காதீர்கள். மேடையிலிருந்து இறங்கி சிலவற்றையாவது நேர்மையுடன் கடைப்பிடியுங்கள். உங்கள் அண்டைவீட்டுக்காரர் தீவிர நோயினால் அவதியுறும் பொழுது, நீங்கள் மட்டும் நிம்மதியாக இருப்பதாக திருப்தியடையாதீர்கள். பிறர் துயருற்றிருக்கும் பொழுது நீங்கள் நிம்மதியாக இருக்க முடியாது. ஒவ்வொரு ஜீவனுக்கும் நீங்கள் அளிக்கும் உணவு பரம்பொருளையே சென்றடைகிறது என்பதனையும், உலகில் எந்த இடத்திலும், எந்த ஜீவனுக்கும் நீங்கள் செய்யும் சேவை கடவுளை மகிழ்ச்சியால் நிறைக்கிறது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.

– தெய்வீக உரை, 25 பிப்ரவரி 1964

Sai Inspires (Tamil Translation): 26th February 2013

Keep your faith in the Lord undiminished. You can then safely move about in the world and no harm will come to you. When one loses one’s way and strays into the wilderness, believing in the world, then the Avatars come to warn and guide. Your attitude must be like the village women, who carry pots of water in their heads, one over the other and keeping their balances even when talking and walking along a winding lane. They do not forget or ignore the burden or their goal and destination. They are always vigilant, conscious of the hardships on the way – the stones and the pits. It is the inner concentration that will pay you rich dividends!

– Divine Discourse, August 1, 1956

கடவுளின் மேல் உங்கள் நம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறிருந்தால் உலகில் நீங்கள் பாதுகாப்பாக நடமாடலாம், உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. ஒருவர் உலகை நம்பி, தன் வழி தவறி இருண்ட காட்டினில் திரியும் பொது, அவதாரங்கள் எச்சரிப்பதற்காகவும், வழிகாட்டுவதற்காகவும் வருகின்றன. தலைகளின் மேல் ஒன்றின் மேல் ஒன்றாகத் தண்ணீர்ப் பானைகளை ஏந்திக் கொண்டு, அவற்றின் நிதானத்தின் மேல் கவனத்துடன், பேசிக் கொண்டே, வளைந்து வளைந்து செல்லும் சந்துகளின் வழியாக நடந்து செல்லும் கிராமப் பெண்களைப் போன்ற மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் தம் தலையில் உள்ள பாரத்தையும், குறிக்கோளையும் மறப்பதும் இல்லை, பொருட்படுத்தாமல் இருப்பதில்லை. அவர்கள் எப்பொழுதும் கவனமாகவும், பாதையிலுள்ள கற்கள் மற்றும் குழிகள் போன்ற கஷ்டங்களைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பார்கள. ஒருமுகமான கவனத்துடன் இருந்தால் அது உங்களுக்கு அதிகமான இலாபத்தைத் தரும்!

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956

Sai Inspires (Tamil Translation): 25th February 2013

What do people know of the motives that prompt the Lord and His actions? Some found fault with Sage Narada for repeating the name of the Lord, always, without intermission. But until Sayujyam (merging in the Absolute), the name has to be used; the idea of separation will end only with mergence, not before that. Do not waver or doubt when once you are convinced. Seek to understand and satisfy yourself. After that, do not be misled. When the Sun is over your head there will be no shadow; similarly when faith is steady in your head it should not cast any shadow of doubt

– Divine Discourse, Aug 1 1956

ஆண்டவனுக்கும் அவன் செயல்களுக்கும் பின்னால் இருக்கும் உந்துதல்களைப் பற்றி மக்களுக்கு என்ன தெரியும்? இடைவிடாது கடவுளின் திருநாமத்தை உச்சரித்ததால் நாரத முனியிடம் தவறைக் கண்டார்கள். ஆனால் சாயுஜ்யம் (பரம்பொருளிடம் கலத்தல்) அடையும் வரை அந்தத் திருநாமம் உபயோகப்படுத்த வேண்டும்; வேற்றுமை எண்ணம், கலத்தலின் மூலமாக மட்டுமே பெறப்படுகிறது. நீங்கள் உறுதியாக உணர்ந்த பின் சலனப்படாதீர்கள் சந்தேகப்படாதீர்கள். நீங்களே கண்டு உணர்ந்து நிறைவடையுங்கள். அதன் பின், தவறிவிடாதீர்கள். சூரியன் உங்கள் தலையின் மேல் இருக்கும் பொழுது நிழல் இருக்காது; அதே போல, உங்கள் தலைக்குள் நம்பிக்கை நிதானமாக இருக்கும் பொழுது, அது சந்தேகத்தின் நிழலை என்றும் பட வைக்காது.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956

Sai Inspires (Tamil Translation): 24th February 2013

Make four resolutions about your life hereafter and live in joy. 1. Practise Purity – Desist from wicked thoughts, bad habits and mean activities that weaken your self-respect. 2. Do Service – Serve others, for they are the reflections of the same entity of which you yourself are another reflection. No one of you has any authenticity on your own, except with reference to your Creator, the Lord. 3. See Mutuality – Feel always the kinship with all creation. See the same current flowing through all objects in the Universe. 4. Live in Truth – Do not deceive yourself or others by distorting your experience.

– Divine Discourse, February 25, 1964

உங்கள் வாழ்க்கையில் இன்று முறை நான்கு சங்கல்பங்கள் கொண்டு, சந்தோஷத்தில் வாழுங்கள். 1. தூய்மையைக் கடைப்பிடியுங்கள் – தீய எண்ணங்கள், தீய பழக்கங்கள் மற்றும் உங்கள் சுயமரியாதையைக் குலைக்கும் கேவலமான செயல்களிலிருந்து விலகியிருங்கள். 2. சேவை செய்யுங்கள் – பிறருக்குச் சேவை செய்யுங்கள், ஏனெனில் அவர்களும் உங்களைப் போன்றே அதே வஸ்துவின் பிரதிபிம்பமே. உங்களில் யாருக்கும் படைத்தவராகிய ஆண்டவனைத் தவிர உங்களுடைய சொந்த அடையாளம் என்று எதுவும் கிடையாது. 3. பரஸ்பரத்தைக் காணுங்கள் – அனைத்து படைப்பின் பாலும் நெருக்கமான உறவு கொண்டிருங்கள். அதே ஓட்டமே பிரபஞ்சத்திலுள்ள அனைத்து பொருட்களினுள்ளும் பாய்கிறது என்பதைக் காணுங்கள். 4. உண்மையில் வாழுங்கள் – உங்களையோ, பிறரையோ உங்கள் அனுபவத்தினைக் கொண்டு ஏமாற்றாதீர்கள்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 25, 1964

Sai Inspires (Tamil Translation): 23rd February 2013

Have you not heard the story of the lion suffering from a wound in the foot? A slave who was fleeing through the forest saw it and when he approached it with sympathy, the lion put out its paw. He then slowly pulled out the thorn that had caused all that pain and left the place, only to be arrested later and taken to Rome. There, they decided to throw him into the amphitheatre and let loose upon him a lion that had been recently captured. It was, however, the same lion which the slave had saved and so, its gratitude did not allow it to harm its saviour. See, even animals exhibit gratitude, not only the pet animals, but even the wild ones like the lion. Express your gratitude to the Creator who has poured into you nectar that grants immortality! Be grateful to the Lord for endowing you with powers of discrimination, detachment and evaluation.

– Divine Discourse, February 25, 1964

காலில் பட்ட அடியினால் அவதிப்பட்ட சிங்கத்தின் கதையை நீங்கள் கேட்டதில்லையா? காட்டில் தப்பியோடிக்கொண்டிருந்த அடிமையொருவன் அதனை பார்த்ததும், அதனை பரிதாபத்துடன் அணுகியபோது அந்த சிங்கம் தன் காலைக் காண்பித்தது. வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்த முள்ளை அவன் மெதுவாக எடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி, சிறிது நேரம் கழித்து கைது செய்யப்பட்டு, ரோம் நகருக்கு இட்டுச் செல்லப்பட்டான். அங்கு, அவனை ஒரு கூடத்தில் அவனை தூக்கியெறிந்து, சில காலம் முன் பிடிபட்ட ஒரு சிங்கத்தை அவன் மீது ஏவினார்கள். அந்த சிங்கமோ, அந்த அடிமை காப்பாற்றிய அதே சிங்கம் என்பதால், அதன் நன்றியுணர்வு தன்னை காத்தவனுக்குத் தீங்கு செய்ய மறுத்தது. பாருங்கள், செல்லப்பிராணிகள் மட்டுமில்லை சிங்கம் போன்ற காட்டு விலங்குகளும் கூட நன்றியுணர்வுடன் இருக்கின்றன. அமரத்துவம் கொடுக்கவல்ல அமுதத்தை உங்களுள் ஊற்றியுள்ள படைத்தவன் பால் நன்றியுடன் இருங்கள்! உங்களுக்கு பகுத்தறிவு, பற்றின்மை மற்றும் மதிப்பிட்டும் திறன் ஆகியவற்றை அளித்துள்ளதற்காக இறைவனிடம் நன்றியுடன் இருங்கள்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 25, 1964

Sai Inspires (Tamil Translation): 22nd February 2013

The greatest obstacle in the path of surrender is egoism (ahamkaram) and Attachment or Possessiveness (mamakaram). This is ingrained in your personality since ages and its tentacles go deeper and deeper with the experience of every succeeding life. It can be removed only by the twin detergents of discrimination and renunciation. Devotion is the water to wash away this dirt of ages, and the soap of japam, dhyaanam and yoga (repetition of God’s name, meditation and communion) will help to remove it quicker and more effectively. Slow and steady progress will surely win the race in this one; quicker means of travel can spell disaster. Proceed step by step in your spiritual practices – placing one steady step before you take the next. Do not waver or slide back two paces with one step forward. Cultivate deep faith – that will make your progress steady!

– Divine Discourse, August 1, 1956

சரணாகதியின் பாதையில் அஹங்காரமும் மமகாரமும் மிகப் பெரிய தடைகளாகும். காலம் காலமாக இது உங்களில் ஆழப்பதிந்துள்ளது. அவற்றின் பற்றிழைகள் ஒவ்வொரு வெற்றியான வாழ்க்கையின் அனுபவத்தின் மூலமும் மேலும் ஆழமாகச் செல்கின்றன. பகுத்தறிவு மற்றும் துறவு ஆகிய இரண்டு சலவைத் தூள்களால் கொண்டு மட்டுமே இதனை நீக்க முடியும். இந்த காலாந்திர அழுக்கை நீக்குவதற்கு பக்தி தான் தண்ணீர், ஜபம், தியானம் மற்றும் யோகம் ஆகியவை சோப்புகள் அதனை சீக்கிரமாகவும், நன்றாகவும் நீக்குவதற்குப் பயன்படும். மெதுவாகவும், நிதானமாகவும் முன்னேறுவது இந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றியை ஈட்டுத் தரும். சீக்கிரமாகப் பயணித்தால் பேராபத்தில் முடியலாம். உங்கள் ஆன்மீக சாதனைகளில் ஒவ்வொரு அடியாக முன்னேறுங்கள் – நீங்கள் ஒரு அடியையும் நிதானமாக எடுத்து வையுங்கள். ஒரு அடி முன்னே எடுத்து வைத்து இரண்டடிகள் பின்னே எடுத்து வைக்காதீர்கள். ஆழ்ந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் – அது உங்கள் முன்னேற்றத்தை நிதானமாக்கும்!

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956

Sai Inspires (Tamil Translation): 21st February 2013

In the present, practice of devotion, worship and rituals are for the sake of better comforts and more luxury for the individuals themselves. Devotion has degenerated into a business deal. Often one prays, “Please give me this, I shall give You so much.” If they feel one shrine promises more, the current shrine is given up. If even in the new shrine, one does not get quick returns, then they quickly look elsewhere to some ‘other’ God who gives more profit! Many people wander in this manner. Some also think, “If I stand amongst many others, God will not notice me. I must stand in a unique position and shout to attract His attention!” Do not behave foolishly! Hold fast to noble ideals. Do not try to bring down the Almighty to your limited vision. Rise up, strengthen your detachment and establish yourself in discrimination, then your goal is brought nearer.

– Divine Discourse, February 25, 1964

இக்காலத்தில், பக்தி, வழிபாடு மற்றும் சடங்குகள் ஆகிய அனைத்தும் தமக்கு நல்ல சௌகரியத்திற்காகவும், மேலும் சொகுசு அடைவதற்கும் தான் உள்ளன. பக்தி ஒரு வெறும் வாணிபமாக நிலை குலைந்துவிட்டது. பெரும்பாலும், “எனக்கு இதனைக் கொடு, நான் உனக்கு இவ்வளவு கொடுக்கிறேன்”, என்று பிரார்த்திக்கிறார்கள். ஒரு ஆலயம் இன்னும் அதிகமாகக் கொடுக்கும் என்று தோன்றும் பொழுது, இப்பொழுதிருக்கும் ஆலயம் கைவிடப்படுகிறது. புதிய ஆலயத்திலும் ஒருவருக்கு உடனடிப் பலன் கிடைக்கவில்லையெனில், அதிக இலாபம் கொடுக்கும் ‘மற்றொரு’ தெய்வத்தைத் தேடுகிறார்கள்! பலர் இவ்வாறாகத் திரிந்து கொண்டிருக்கின்றனர். “நான் பிறருடன் சேர்ந்து நின்றால், கடவும் என்னைப் கவனிக்காமல் இருக்கக் கூடும். நான் வித்தியாசமான ஒரு இடத்தின் நின்று, அவரது கவனத்தைத் திருப்புவதற்காகக் கத்த வேண்டும்”, என்று பலர் நினைக்கிறார்கள். முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்! உயரிய எண்ணங்களை நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் அற்பப் பார்வையில் பரம்பொருளைக் கேவலப்படுத்தாதீர்கள். எழும்புங்கள், உங்கள் பற்றின்மையை பலப்படுத்திக் கொண்டு, பகுத்தறிவவுடன் நடந்து கொண்டால், உங்கள் குறிக்கோள் உங்கள் அருகில் கொண்டுவரப்படும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 25, 1964

Sai Inspires (Tamil Translation): 20th February 2013

You must be convinced that ‘you’ are but the shadow of the Absolute. Of course, it is only at the end of a long and systematic process of Sadhana (spiritual efforts) that you will reach and stay fixed in the state of that Truth; until then, you are likely to identify yourself with this body and forget that the body which casts a shadow is itself a shadow. The first step in that Sadhana is the adherence to Dharma (righteousness) in every individual and social act. The Dharma which is followed in relation to the objective world will automatically lead on to Dharma in the spiritual field also; only you must stick to it through thick and thin. Steadfastness is needed in the path of Righteousness. That alone is the sign of true surrender.

– Divine Discourse, August 1, 1956

‘நீ’ பரம்பொருளின் நிழல் தான் என்பதில் உறுதி கொள்ள வேண்டும். நீண்ட, முறையான செயல்பாட்டின் முடிவில் மட்டுமே நீ அவ்வுண்மையின் நிலையை அடைந்து அதன் மேல் நிலை கொண்டிருக்க முடியும். அது வரை நீ உன்னை இந்த உடலுடன் அடையாளம் கண்டு கொண்டு, நிழலாடும் இவ்வுடலும் ஒரு நிழல் தான் என்பதை மறந்தும் இருக்கக் கூடும். ஒவ்வொரு தனிச் செயலிலும், சமுதாயம் சார்ந்த செயலிலும் தர்மத்தைக் கடைப்பிடிப்பது இந்த சாதனையில் முதல் படி ஆகும். இந்த பௌதிகமான உலகில் பின்பற்றப்படும் தர்மமானது முடிவில் ஆன்மீகக் காலத்திலும் தர்மத்தின் பால் இட்டுச் செல்லும்; நீ தான் எவ்விதக் கஷ்டம் வந்தாலும் அதனைப் பின்பற்ற வேண்டும். தர்மத்தின் பாதையில் உறுதி தேவைப்படுகிறது. அது மட்டுமே உண்மையான சரணாகதியின் அடையாளமாகும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956