Sai Inspires (Tamil Translation): 13th July 2013

The last day of a Saptaha (seven-day discourse) is called Samaapthi. That word means, according to most people, the final function; but it has a more profound meaning too. Samaapthi means the attainment (Aapthi) of the Samam (Divine or Brahman). That is the final fruit of Shravana, Manana and Nidhidhyasana (Listening, Recapitulation and Assimilation) of key spiritual truths and lessons from discourses. In the worldly sense, it means the conclusion of a period of time. In the spiritual sense, it means transcending time! The lesson that all spiritual discourses wish to convey is that you must give up your pursuit of sensory objects, if you seek lasting peace and joy. Material wealth brings along with it, not only joy but grief as well. Accumulation of riches, multiplication of wants will lead only to alternation between joy and grief. Attachment is the root of both joy and grief. Detachment is the saviour.

– Divine Discourse, August 19, 1964

ஓரு ஸப்தாஹத்தின் கடைசி தினம் ஸமாப்தி என்றழைக்கப்படுகிறது. பலருடைய கருத்தின்படி, அதன் பொருள் முடிவுறும் பண்டிகை என்பதாகும். ஆனால் அதற்கு அதனை விட மிகவும் ஆழ்ந்த பொருள் உண்டு. ஸமாப்தி என்றால் ஸமம் எனும் தெய்வீகத்தை (ப்ரஹ்மத்தை) அடைதல் (ஆப்தி) என்று பொருள்படுகிறது. அதுவே சொற்பொழிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய ஆன்மீக உண்மைகள் மற்றும் பாடங்களின் ஷ்ரவணம், மனனம் மற்றும் நிதித்யாஸனம் (கேட்டல், அசைபோடுதல் மற்றும் ஜீரணித்தல்) ஆகியவற்றின் கடைசிப் பலன் ஆகும். உலக நோக்குடன் பார்த்தால் ஒரு குறிப்பிட்ட காலத்தின் முடிவு என்று அது பொருள்படுகிறது. ஆன்மீக நோக்குடன் பார்த்தால், அது காலத்தைக் கடத்தல் எனும் பொருள் கொள்கிறது! அனைத்து ஆன்மீகச் சொற்பொழிவுகள் உரைப்பதும், நீங்கள் நீங்காத அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற விழைந்தால் புலன் சார்ந்தவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பது தான். பொருட்செல்வம் தன்னுடன் மகிழ்ச்சியை மட்டும் கொண்டு வருவதில்லை, துயரத்தையும் சேர்த்துத் தான் கொண்டு வருகிறது. செல்வம் சேர்த்தல் மற்றும் ஆசைகளைப் பெருக்கிக் கொள்ளுதல் ஆகியவை மகிழ்ச்சி மற்றும் துயரத்தை ஒன்றுவிட்டு ஒன்றாக மாறி மாறி ஏற்படும் நிலையைத் தான் உருவாக்குகின்றன. பற்றுதல் தான் மகிழ்ச்சி மற்றும் துயரத்தின் வேர் ஆகும். பற்றின்மையே உங்களைக் காப்பாற்றும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 19, 1964

Leave a comment