Monthly Archives: September, 2013

Sai Inspires (Tamil Translation): 25th September 2013

Bhagavan Sri Sathya Sai Baba

We must have the awareness of the relative value of things; the discrimination between the real and relatively real. The gifts of reason and conscience must not be wasted through neglect. Your story should not be a repetition of that of the woodcutter, who was given a huge sandalwood forest as a reward, but, who out of sheer ignorance of the value of the trees, burnt the trees and sold them as charcoal at so much per bag! You ignore the Divinity that you really are and waste the opportunity to unfold it. Ignorance (ajnana) is imported from outside; what is native to you, what is within is wisdom (Jnana).

– Divine Discourse, October 14, 1964

பொருட்களின், பிற பொருட்களுடனான ஒப்பீடு பற்றிய விழிப்புணர்வு, அதாவது நிலையானவற்றிற்கும் நிலையில்லாதவற்றிற்கும் இடையேயான பகுத்தறிவு நமக்குத் தேவை. பகுத்தறிவு மற்றும் மனசாட்சி ஆகிய ஆற்றல்கள் உதாசீனத்தினால் வீனாக்கப்படக் கூடாது. ஒரு மாபெரும் சந்தனக் காட்டினை பரிசாகப் பெற்ற ஒரு விறகு வெட்டி, எவ்வாறு தன் அறியாமையால், அம்மரங்களின் மதிப்பை உணராமல், அவையனைத்தையும் எரித்து, கரியாக்கி, ஒவ்வொரு மூட்டைக்கும் விலை பேசினானோ, அவ்வாறு உங்கள் கதையும் இருந்து விடக் கூடாது! உங்கள் உண்மை இயல்பான தெய்வீகத்தை மறந்து, அதனை வெளிப்படுத்தாமல் வீணாக்குகிறீர்கள். அஞ்ஞானம் வெளியிலிருந்து உள்ளேற்றப்படுகிறது. உங்கள் உண்மை நிலையான ஞானம் உங்களுள் உள்ளது.

– தெய்வீக உரை, அக்டோபர் 14, 1964

Sai Inspires (Tamil Translation): 24th September 2013

Bhagavan Sri Sathya Sai Baba

People seek frantically for peace and happiness in a thousand ways along a thousand roads. Real peace is to be got only in the depths of the spirit, in the discipline of the mind, in faith in the One base of all this seeming multiplicity. And the joy of that experience, the profound exhilaration which accompanies it cannot be communicated in words. All shravanam and kirthanam (hearing and singing God’s names) is to take you nearer that experience. Shravanam is the medicine that you take internally and kirthanam is the balm you apply externally. Both are needed. Develop devotion to the Lord using as many means as possible. Your mind and the intellect must be trained and controlled, that is the sole aim.

– Divine Discourse, July 10, 1959

மக்கள், ஆயிரக்கணக்கான வழிகளில், ஆயிரக்கணக்கான பாதைகளில் அமைதிக்காகவும், சுகத்திற்காகவும் மக்கள் போராடுகிறார்கள். உண்மையான அமைதி ஆன்மாவின் ஆழத்தின் மூலமும், மனக்கட்டுப்பாட்டின் மூலமும், பல விதமாகத் தெரியும் ஒன்றின் மேலுள்ள நம்பிக்கையின் மூலம் தான் கிடைக்கும். அந்த அனுபவத்தின் மகிழ்ச்சி, அதனுடன் கிடைக்கும் மகத்தான உற்சாகம் ஆகியவற்றை சொற்களினால் தெரிவிக்க முடியாது. ச்ரவணம் மற்றும் கீர்த்தனம் (கடவுளின் திருப்பெயர்களை கேட்டல் மற்றும் பாடுதல்) ஆகியவை உங்களை அந்த அனுபவத்தின் பால் எடுத்துச் செல்வதற்காகத்தான் உள்ளன. ச்ரவணம் நீங்கள் உள்ளே உட்கொள்ளும் மருந்து. கீர்த்தனம் நீங்கள் வெளியும் தடவும் களிம்பு. இரண்டும் தேவையே. எவ்வளவு வழிகள் மூலம் முடியுமோ அவ்வளவு வழிகள் மூலம் கடவுளின் மேல் பக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனம் மற்றும் புத்தி பழக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதுவே இதன் ஒரே குறிக்கோள் ஆகும்.

– தெய்வீக உரை, ஜூலை 10, 1959

Sai Inspires (Tamil Translation): 23rd September 2013

Bhagavan Sri Sathya Sai Baba

Every one of you has in possession a ticket for liberation from the cycle of birth and death. But most do not know the train that has to be boarded; many get down at intermediate stations, imagining them to be the terminus and wander helplessly in the wilderness, or are carried away by sights and scenes. Until the wound heals, and the new skin is formed and hardens, the bandage is essential. So too, until Reality is realized, the balm of faith, holy company and holy thoughts must be applied to the ego-affected mind. It is dedication to the Lord that sanctifies all activities. He is the Prompter, the Executor, the Giver of the required strength and skill, and the Enjoyer of the fruit thereof. So dedication must come naturally to you, for all is His, and nothing is yours. Your duty is to believe that He is the impeller of your activities and draw strength from that belief.

– Divine Discourse, October 14, 1964

நீங்கள் ஒவ்வொருவரும் பிறப்பு மற்றும் இறப்புச் சுழலில் இருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு பயணச்சீட்டை உங்களிடத்தில் கொண்டுள்ளீர்கள். ஆனால், பெரும்பாலானோருக்கு இரயிலில் ஏறவேண்டும் என்பது தெரியாது; பலர் கடைசி நிறுத்தம் என்றெண்ணி வழியிலுள்ள நிறுத்தங்களில் இறங்கி, திக்கற்று அலைகிறார்கள், அல்லது சில காட்சிகளைக் கண்டு தன்னிலை மறந்து போகிறார்கள். காயம் ஆறியவுடன், புதிய தோல் தோன்றி, அது தடிக்கும் வரை, கட்டு அவசியம். அதே போன்று, உண்மை இயல்பு உணரப்படும் வரை, நம்பிக்கை, சத்சங்கம் மற்றும் நற்சிந்தனைகள் ஆகியவற்றால் ஆன வலி நிவாரணி, அகங்காரத்தால் பாதிக்கப்பட்ட மனதின் மேல் தடவப்பட்ட வேண்டும். கடவுளிடம் அர்ப்பணிப்பதே அனைத்து செயல்களையும் புனிதப்படுத்தும். அவரே உந்துதல் அளிப்பவர், அவரே செயல்படுத்துபவர், அவரே அதற்குத் தேவையான சக்தியையும், யுக்தியையும் அளிப்பவர், அவரே அதன் பலன்களையும் அனுபவிப்பவர் ஆவார். ஆகையால், உங்களுக்கு அர்ப்பணிப்பு குணம் இயல்பாகவே தோன்ற வேண்டும். ஏனெனில், அனைத்தும் அவருடையதே, உங்களுடையது என்பது எதுவும் இல்லை. உங்கள் அனைத்துச் செயல்களுக்கும் அவரே உந்துதல் அளிப்பவர் என்பதை நம்பி, அந்த நம்பிக்கையிலிருந்து பலம் பெறுவதே உங்கள் கடமை ஆகும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 14, 1964

Sai Inspires (Tamil Translation): 22nd September 2013

Bhagavan Sri Sathya Sai Baba

The jeevi (individual soul) has come to this birth in order to reveal the splendour of the spark of Godhead which It is. A rat is attracted by strong smelling cheap little stuff inside the trap; it neglects all other articles of food in the granary, and thus falls a prey to its own foolishness. Similarly people disregard and waste their life in the pursuit of mortal riches. Be aware and alert. Live in the world but develop the skills to wonder and discriminate between the eternal and temporary. Learn to see through this drama and discover the Director behind the scenes, who is none else than God. You can easily develop these skills through devotion (Bhakthi), based on performing duty without any expectation of results (Nishkama Karma).

– Divine Discourse, July 10, 1959

ஜீவி இந்தப் பிறவி எடுத்ததன் காரணம், தன் உண்மை இயல்பான கடவுளின் பொறியின் பிரகாசத்தைப் புலப்படுத்துவதற்கே. ஒரு எலி இழிவான சிறிய ஒரு பொருளைக் கண்டு அதனைப் பிடிக்க வைக்கப்பட்டுள்ள பொறியினுள் ஈர்க்கப்படுகிறது; தானியக் கிடங்கிலுள்ள பிற பொருட்களை அது உதாசீனப்படுத்தி, அதன் முட்டாள்தனத்தாலேயே மாட்டிக் கொள்கிறது. அதே போல, மக்களும் அழியக் கூடிய செல்வங்களை அடைவதற்காகத் தம் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். கவனமாகவும், விழிப்பாகவும் இருங்கள். இவ்வுலகில் வாழுங்கள். அனால் நிலையானதற்கும், நிலையில்லாததற்கும் இடையேயான வித்தியாசத்தை அறிவதற்கானத் திறனை வளர்த்துக் கொள்ளுங்க. இந்த நாடகத்தைக் கண்டு, திரைக்குப் பின்னால் உள்ள இயக்குனராக இயங்கும் தெய்வத்தை அறிந்து கொள்ளுங்கள். பக்தியின் மூலம், நிஷ்காம கர்மம், அதாவது பலனை எதிர்பார்க்காமல் கடமையாற்றுவதன் மூலம் இந்தத் திறன்களை நீங்கள் எளிதாக வளர்த்துக் கொள்ளலாம்.

– தெய்வீக உரை, ஜூலை 10, 1959

Sai Inspires (Tamil Translation): 21st September 2013

Bhagavan Sri Sathya Sai Baba

Repentance saves even sinners from perdition. No ceremony of expiation is as effective as sincere repentance. The shopkeeper may give short measure at times, but he will never accept less money; the bill always has to be settled in full. Pay it through repentance. You cannot deceive the Lord with insincerity. Unless you correct yourself through detachment and sacrifice, you cannot reach God. The Lord can be understood, only if you approach Him, develop attachment to Him, have unswerving loyalty to Him and have full faith in Him. You will easily understand Him when you feel that you are but the instrument and He wills every little movement, everywhere. Give up egoism in full, and develop faith. Then you can most certainly see Him.

– Divine Discourse, October 12, 1964

கழிவிரக்கம், பாவிகளையும் நரகத்திலிருந்து காப்பாற்றும். நேர்மையான கழிவிரக்கத்தை விடவும் ஆற்றல் வாய்ந்த பிராயச்சித்தம் எதுவும் கிடையாது. கடைக்காரர் உங்களுக்குச் சில சமயம் பண்டங்களைக் குறைந்த அளவில் அளிப்பதுண்டு, ஆனால் அவர் என்றைக்கும் குறைந்த அளவில் பணம் பெற்றுக் கொள்வதில்லை; விலைவிவரத்தின் படி கண்டிப்பாக முழுப் பணமும் செலுத்தப்பட வேண்டும். அதனைக் கழிவிரக்கத்தின் முலம் செலுத்துங்கள். கடவுளை உங்கள் வஞ்சகத்தால் ஏமாற்ற முடியாது. பற்றின்மை மற்றும் தியாகத்தால் உங்களைத் திருத்திக் கொள்ளும் வரை நீங்கள் கடவுளை அடைய முடியாது. நீங்கள் அவரை அணுகி, அவரின் மேல் பற்றுதலைப் பேணி, அவரிடம் அசையாத விசுவாசம் கொண்டு, அவர் மேல் பூரண நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் கடவுளை புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அவருடைய கருவி மட்டுமே என்பதையும், எவ்விடத்திலும், அவருடைய சங்கல்பத்தினாலேயே ஒவ்வொரு சிறிய அசைவும் நிகழ்கிறது என்பதையும் நீங்கள் உணர்ந்தால், அவரை எளிதில் புரிந்து கொள்ளலாம். அஹங்காரத்தை முழுமையாகத் தொலைத்துவிட்டு, நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பின்பு, அவரை நீங்கள் நிச்சயமாகக் காணலாம்.

– தெய்வீக உரை, அக்டோபர் 12, 1964