Tag Archives: anger

Sai Inspires (Tamil Translation): 9th July 2013

Set right your habits, purify your conduct and cleanse your behavior. Even one bad habit can destroy all health, happiness, charm and joy. Control yourself and do not yield to the temptations of friends or social conventions and become prey to bad habits. The body is the temple of the Lord. Keep it in good and strong condition. Also be aware that it can be damaged from qualities such as anger, hatred and greed, or from sloth, sleep and inactivity. When you get angry and/or violent with anyone, quietly repeat the Name of the Lord to save you from your anger. Drink a glass of cold water, or lie down in a bed until the fit of fury passes through. When you are angry, you abuse another and the other person does the same, so tempers rise and heat is generated which causes lasting injury. Five minutes of anger can damage five generations of relationship, so be careful.

– Divine Discourse, September 2, 1958

உங்கள் பழக்கவழக்கங்களைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் ஒழுக்கத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் நடத்தையைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு கெட்டப்பழக்கம் இருந்தால் கூட, உங்கள் ஆரோக்கியம், சந்தோஷம், வனப்பு மற்றும் மகிழ்ச்சி ஆகிய அனைத்தையும் அழித்துவிடும். உங்களை கட்டுக்குள் வைத்திருங்கள். நண்பர்கள் அல்லது விருந்துகள் ஆகியவற்றின் தூண்டுதலால் நீங்கள் கெட்டப் பழக்கங்களுக்கு இரையாகிவிடாதீர்கள். உடல், கடவுளின் ஆலயம் ஆகும். அதனை நல்ல, திடமான நிலையில் வைத்திருங்கள். கோபம், வெறுப்பு மற்றும் பேராசை ஆகிய குணங்களாலோ, அல்லது சோம்பேறித்தனம், தூக்கம் மற்றும் செயலின்மை ஆகியவற்றினாலோ அது பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்திருங்கள். நீங்கள் யாரையாவது பார்த்து கோபப்பட்டாலோ அல்லது கடுமையாக நடக்க முற்பட்டாலோ, அமைதியாக கடவுளின் திருநாமத்தை ஜபித்திடுங்கள். ஒரு கோப்பை குளிர்ந்த நீரைப் பருகுங்கள், அல்லது உங்கள் கோபம் தணியும் வரை ஒரு படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கோபம் கொள்ளும் பொழுது, உங்கள் எதிரில் உள்ளவரைக் கடிந்து கொள்வீர்கள், அவரும் உங்களைக் கடிந்து கொள்வார். ஆகையால் கோபம் மேலும் பெருகி, சூடாகி, நீங்கா காயத்தை ஏற்படுத்தும். ஐந்து நிமிடக் கோபம், ஐந்து தலைமுறைகளின் உறவைச் சிதைத்துவிடும்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 2, 1958

Sai Inspires (Tamil Translation): 14th January 2013

Spend your time in the contemplation of the bounty and beauty of Nature spread out before you on earth and sky – green expanses of the crops, cool breezes that waft contentment and joy, the panorama of coloured clouds, the music of the birds and so on. Sing the glory of the Lord as you walk along the path, amidst the fields, the banks and the waterways. Do not talk hatefully in the midst of all this evidence of love; do not get angry, in these placid surroundings; do not disturb the sky with your shouts and curses. Do not pollute the air with vengeful boasts. A seedling needs water and manure to grow and yield rich harvest. The tiny sapling of spiritual yearning for liberation also needs you to do these – set right your habits, purify your conduct and cleanse your behaviour.

– Divine Discourse, September 2, 1958

பூமியின் மேலும், ஆகாயத்திலும் படர்ந்துள்ள இயற்கையின் செழிப்பு மற்றும் அழகினை, வயல்வெளியின் பசுமையையும், திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கும் குளிர்காற்றினையும், பல வர்ண மேகங்களின் பரந்த தோற்றத்தையும், பறவைகளின் இசையையும் இரசிப்பதற்கு உங்கள் நேரத்தைச் செலவு செய்யுங்கள். வயல்களின் மத்தியிலும், ஆற்றங்கரைகளிலும், நீர் நிலைகளின் மேல் பயணிக்கும் போதும் கடவுளின் புகழைப் பாடுங்கள். அன்பின் சாட்சியாக விளங்கும் இவ்வனைத்தின் மத்தியின் வெறுப்பு வளர்க்கும் விதமாக,ப் பேசாதீர்கள்; இந்த அமைதியான சூழல்களில் கோபப்படாதீர்கள்; உங்கள் கூச்சல்களிலும், கத்தல்களிலும் ஆகாயத்தைத் தொந்தரவு செய்யாதீர்கள். உங்கள் அஹங்கார பேச்சுகளினால் காற்றைத் தூய்மைப்படுத்தாதீர்கள். இளம் செடி நன்றாக வளர்ந்து, நல்ல விளைச்சல் அளிக்க வேண்டுமானால் அதற்கு தண்ணீரும், உரமும் தேவைப்படுகிறது. இதைப் போல மோக்ஷத்தை அடைவதற்கு ஆழ்ந்த ஆன்மீக ஆர்வம் கொண்ட இளம் செடிக்கு இவை தேவை – உங்கள் பழக்கவழக்கங்களை செம்மைப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் ஒழுக்கத்தைத் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள், உங்கள் நடத்தையையத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 2, 1958

Sai Inspires (Tamil Translation): 29th September 2012

The Government, the administration and the people (prabhuthwam, adhikaaris and praja) are like the three blades of an electric fan; when all three rotate together in the same direction and at the same speed, they conduce to comfort. Anger, malice, greed, envy – all these are obstacles in the path of love and cooperation. They lower man from the Divine to the animal level. Bear with others with patience and understanding; practise forbearance and sympathy. Try to discover points of contact rather than that of conflict. Spread brotherliness and deepen kindness through knowledge. Then without fail, life shall become worthwhile.

– Divine Discourse, August 3, 1966

அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் மக்கள் ஒரு மின்விசிறியின் மூன்று தகடுகளைப் போன்றவர்கள். இம்மூன்றும் ஒரே திசையில் ஒரே வேகத்தில் சுற்றும்பொழுது அவை சுகமளிக்கும். கோபம், காழ்ப்புணர்ச்சி, பேராசை மற்றும் பொறாமை ஆகிய அனைத்தும் அன்பு மற்றும் ஒத்துழைப்பின் பாதையில் தடைகளாக இருக்கின்றன. மனிதனை தெய்வீக நிலையிலிருந்து மிருக நிலைக்குத் தள்ளுகின்றன. பிறரைப் பொறுமை மற்றும் ஒத்திசைவுடன் பொறுத்துக் கொள்ளுங்கள். பொறுமையையும் பரிவையும் பின்பற்றுங்கள். முரண்பாட்டிற்கு பதிலாக ஒத்திசைவிற்கான குறிப்புகளைக் கண்டுபிடிக்க முயலுங்கள். சகோதரத்துவத்தை பரப்பி, அறிவின் மூலம் இரக்கத்தை ஆழமாக்குங்கள். அவ்வாறானால், தவறாமல் வாழ்க்கை பயனுடையதாக அமையும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 3, 1966

Sai Inspires (Tamil Translation): 18th April 2012

The ear fills the head. The head directs the arm and the arm acts. So hear good things; do good things and share good things. That gives joy and contentment. Speak softly, kindly and lovingly; that is Dharma (righteousness). Give generously and wisely. Wipe the tear and assuage the sigh and the groan. Do not simply throw money at the needy – give with grace and humility, respect and reverence. Try to live with others harmoniously. Do not judge others by their dress or exterior. Nurturing anger and hatred in your heart is like carrying a pot with many holes for bringing water. Discard anger, hatred, envy and greed. To achieve this, dwell on the Name of the Lord; it will certainly help you.

– Divine Discourse, March 30, 1965

காது தலையை நிறைக்கிறது. தலை கையை இயக்கி, கை செயல்புரிகிறது. அதனால், நல்ல விஷயங்களைக் கேளுங்கள்; நற்செயல்களைச் செய்யுங்கள், நல்லவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு சந்தோஷமும் நிறைவும் அளிக்கிறது. மெதுவாகவும், தயையுடனும், அன்பாகவும் பேசுங்கள். அதுவே தர்மம் (அறம்). தாராளமாகவும் அறிவுப்பூர்வமாகவும் கொடையளியுங்கள். கண்ணீரைத் துடைத்து ஏக்கத்தையும், கடுந்துயரத்தையும் தணியுங்கள். வேண்டுபவருக்குப் பணத்தை வெறுமென வீசாதீர்கள், அதனை கருணையுடனும், பணிவுடனும், மரியாதையுடனும், வணக்கத்துடனும் கொடுங்கள். பிறருடன் இணக்கத்துடன் வாழ முயற்சி செய்யுங்கள். பிறரை அவர்களுடைய உடையையும் வெளிப்புறத் தோற்றத்தையும் கண்டு எடைபோடாதீர்கள். உங்கள் இதயத்தில் கோபமும் வெறுப்பும் வளர்ப்பது பல துளைகள் கொண்ட பானையில் நீர் கொண்டுவருவது போன்றதாகும். கோபம், வெறுப்பு, பொறாமை மற்றும் பேராசையை புறக்கணியுங்கள். இதனைப் பெற கடவுளின் நாமத்தில் நிறைந்திருங்கள். அது நிச்சயமாக உங்களுக்கு உதவும்.

– தெய்வீக உரை, மார்ச் 30, 1965

Sai Inspires (Tamil Translation): 31st March 2012

Every human being has the evil tendencies of lust (kama), anger (krodha) and greed (lobha) in them. The great epics, Ramayana, Bhagavata, and Mahabharata, teach good lessons to control these enemies. Ravana, who had mastered all the sixty-four branches of knowledge and was a great scholar and a mighty warrior, lost his life and caused the ruination of his entire clan because of lust. It is not enough if you merely read Ramayana; you should grasp its real significance. In the Mahabharata, Duryodhana personified greed. He refused to share the kingdom with the Pandavas and denied them their rightful share. Due to this quality, he perished along with his entire clan. These illustrations echo the need for the eradication of the feelings of lust, anger and greed. Pandavas emerged victorious because they practiced all the human values of Truth, Love, Right Conduct, Non-Violence and Peace. If you follow these values, success will follow automatically.

– Divine Discourse, Mar 18, 1999

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தீய போக்குகளான ஆசை (காமம்), கோபம் (க்ரோதம்) மற்றும் பேராசை (லோபம்) உள்ளன. பெரும் இதிகாசங்களான இராமாயணம், பாகவதம் மற்றும் மஹாபாரதம் இந்த எதிரிகளை அடக்குவதற்கு நல்ல அறிவுரைகளைக் கற்பிக்கின்றன. அறுபத்துநான்கு அறிவுத்தொகுதிகளிலும் தேர்ச்சி பெற்ற, மாபெரும் கல்விமானான, பராக்கிரமம் பொருந்திய வீரனான இராவணன், தன் காமத்தினால் தன் உயிரையும் இழந்து, தன் முழுக் குலமும் அழிவதற்குக் காரணாமாகவும் இருந்தான். இராமாயணத்தைப் படித்தால் மட்டும் போதாது, அதன் உண்மைக் கருத்தை அறிந்துகொள்ளவேண்டும். மஹாபாரதத்தில், துரியோதனன் பேராசையின் ஸ்வரூபமாக விளங்கினான். பாண்டவர்களுடன் தன் இராஜ்ஜியத்தை பகிர்ந்து கொள்ள மறுத்தான். அவர்களது உரிமைப் பங்கினையும் மறுத்துவிட்டான். இந்த இயல்பினால், அவன் தன் குலத்துடன் அழிந்துவிட்டான். இந்த எடுத்துக்காட்டுகள், காம்ம், க்ரோதம் மற்றும் லோபம் ஆகிய உணர்வுகளை அறவே அழிப்பதின் தேவையை எதிரொலிக்கின்றன. பாண்டவர்கள் அனைவரும் சத்யம், தர்மம், சாந்தி, அஹிம்சை மற்றும் ப்ரேமையைக் கடைப்பிடித்ததால் தான் வெற்றிகண்டார்கள். நீங்கள் இந்த மதிப்பீடுகளைப் பின்பற்றினால், வெற்றி தானாகவே வந்தடையும்.

– தெய்வீக உரை, மார்ச் 18, 1999