Tag Archives: Attachment

Sai Inspires (Tamil Translation): 11th April 2015

Bhagavan Sri Sathya Sai Baba

Becoming a prey to peacelessness, you seek Divine through various means. What is the cause of your sorrow? Is it due to unfulfilled desire or the failure of your efforts? Are you miserable because you have not got various possessions, or failed to win a lottery? Lamenting over trifles, you are forgetting your divinity. These are not real troubles at all. The real cause of sorrow is attachment to the body, identifying oneself with the body. All sorrow arises from the feelings of ‘I’ and ‘Mine’. It is very essential to reduce deha-abhimaanam (attachment to the body). Desires are a source of pleasure, but they are also the cause of your grief. You must bring your mind under control. Even thousands of men cannot hold back a fast-moving train. But the train comes to a complete stop the moment brake is applied. The vagaries of your mind are just like that. When you control your mind, all sorrows will cease.

– Divine Discourse, 3 Sep 1988

நீங்கள் அமைதியின்மைக்கு இரையாகி, தெய்வீகத்தை அடைந்திட பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகிறீர்கள். துக்கத்தின் காரணம் என்ன? நிறைவேறாத ஆசையினாலா அல்லது உங்கள் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதனாலா? பல்வேறு உடைமைகள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்பதனாலோ உங்களுக்கு லாட்டரி சீட்டில் பரிசு விழவில்லை என்பதனாலோ நீங்கள் துயரம் அடைந்துள்ளீர்களா? அற்பமான விஷயங்களுக்காக புலம்பிப் புலம்பி, உங்கள் தெய்வத்துவத்தை மறந்து கொண்டிருக்கிறீர்கள். இவை உண்மையான தொந்தரவுகளளே அல்ல. நீங்கள் உங்கள் உடலின் மேல் கொண்டுள்ள பற்று, உங்களை உடல் என்று அடையாளம் கண்டுகொள்வது தான் உண்மையான காரணம் ஆகும். “நான்” மற்றும் “எனது” எனும் எண்ணங்களிலிருந்து தான் துயரம் எழுகிறது. தேகாபிமானத்தை (உடல் மேலான பற்றினை) குறைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். ஆசைகள் இன்பத்தின் மூலம் ஆகும். ஆனால் அவை துயரத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றன. உங்கள் மனதை உங்கள் வசத்திற்கு எடுத்து வர வேண்டும். ஆயிரக்கணக்கான மனிதர்களால் கூட வேகமாக ஓடும் ஒரு இரயில் வண்டியை நிறுத்த முடியாது. தடுப்பான் அதாவது பிரேக்கினை அழுத்திய உடனேயே அந்த இரயில் வண்டி மொத்தமாக நின்று விடும். மனதின் இயல்பும் இவ்வாறு தான் உள்ளது. உங்கள் மனத்தைக் கட்டுக்குள் வைத்தால், எல்லா துயரங்களும் நின்றுவிடும்.

– தெய்வீக உரை, 3 செப்டம்பர் 1988

Sai Inspires (Tamil Translation): 16th January 2013

Pure love alone can carry out successfully projects of service and welfare. Love creates sympathy; Love will show the way where hatred creates complexities. When a toddler is learning to walk, love will place no obstacles on the path. On the other hand, it will encourage, welcoming each forward step and overlooking each fall. Unfortunately, many a beneficial ventures are laid barren because of harsh criticism and wanton disparagements. Noble works must be executed with lots of love. True devotion alone can transform people’s hearts and lead them in the path of Truth and Right Conduct. Any trace of greed for gain degrades love. That is why a child is all love as it has no attachment to the goods of the world.

– Divine Discourse, October 19, 1966

தூய அன்பினால் மட்டுமே சேவைப் பணிகளையும், பொதுநலப்பணிகளையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும். அன்பு இரக்கத்தை உருவாக்குகிறது; வெறுப்பு சிக்கல்களை ஏற்படுத்துமிடத்தில் அன்பு வழி காட்டும். ஒரு சிறுகுழந்தை நடக்கப் பயிலும் பொழுது, அதன் பாதையில் அன்பு ஒரு போதும் தடங்கல்களை வைக்காது. ஆனால், முன்னால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் வரவேற்று, ஒவ்வொரு முறை கீழே விழும் போதும் கவனித்துக் கொண்டு அது ஊக்கமளிக்கும். துரதிர்ஷ்டவசமாக, கடுமையான விமர்சனத்தினாலும், வேண்டுமென்றே செய்யப்படும் மரியாதைக் குறைவான பேச்சுக்களாலும் பல பயனுள்ள பணிகள் நிலுவையில் வைக்கப்படுகின்றன. நற்பணிகள் பேரன்புடன் செயல்படுத்தப்பட வேண்டும். உண்மையான பக்தி மட்டுமே மக்களின் இதயங்களை உயர் மாற்றம் செய்து, அவர்களை சத்தியம் மற்றும் தர்மத்தின் பாதையில் வழி நடத்துகிறது. சிறிதளவே உள்ள பேராசை கூட அன்பை நிலை தாழ்த்துகிறது. ஆகையால் தான், உலகப் பொருட்கள் மீதான பற்றில்லாததால் ஒரு குழந்தை அன்பால் நிறைந்திருக்கிறது.

– தெய்வீக உரை, அக்டோபர் 19, 1966

Sai Inspires (Tamil Translation): 17th December 2012

The body is the chariot (ratha) of the individual (jeevi), who is the Master. Human birth is the glorious and precious opportunity amongst all living beings. The human body is the castle from which one can fight successfully against the foes of attachment and egoism. It is the boat by which one can cross the sea of change and chance. The realization of the reality within oneself, through relentless spiritual discipline is an arduous challenge – as fraught with dangers and calamity, like playing with fire or duelling with wild animals. Scriptures (Upanishads) have compared the spiritual aspirant’s path to that of a razor’s edge. One has to be alert, vigilant and fully trained to meet all emergencies. Use the precious opportunity of this human birth and leverage your intelligence, discrimination and detachment you are gifted with, to rise above all, and realize the Ultimate Reality.

– Divine Discourse, October 15, 1966

தேகம் என்பது ஜீவி எனும் எஜமானரின் தேர் ஆகும். மனிதப் பிறப்பானது அனைத்து ஜீவராசிகளுக்கும் மேலான ஓர் அரிய வாய்ப்பாகும். பற்றுதல் மற்றும் ஆணவம் ஆகிய எதிரிகளை எதிர்த்துப் வெற்றிகரமாகப் போரிடுவதற்கு மனிதவுடல் ஒரு கோட்டையாக விளங்குகிறது. மேலும், அது மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளைக் கொண்ட கடலைக் கடப்பதற்கு உதவும் படகாகவும் விளங்குகிறது. இடையறாத ஆன்மீக ஒழுங்கின் மூலம் ஒருவரினுள் உள்ள சத்தியத்தை,உணர்வது என்பது ஒரு நெருப்புடன் விளையாடுவதைப் போன்றும், காட்டு விலங்குகளுடன் விளையாடுவதைப் போன்றும், அபாயங்களும் பேரிடர்களும் கொண்ட ஒரு கடுமையான சவாலாகும். புனித நூல்களான உபநிஷத்துக்கள் ஒரு ஆன்மீக சாதகனின் பாதையை ஒரு கத்தியின் அலகிற்கு ஒப்பிடுகின்றன. அனைத்து அவசரங்களையும் எதிர் கொள்வதற்கு ஒருவர் விழிப்பாகவும், கவனமாகவும், நன்கு தேர்ச்சி பெற்றும் இருக்க வேண்டும். இம்மனிதப் பிறவியின் அரிய வாய்ப்பை உபயோகப்படுத்தி, உங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்டுள்ள புத்தி, பகுத்தறிவு மற்றும் பற்றின்மை ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, அனைவருக்கும் மேலாக உயர்ந்து, சத்தியத்தை உணருங்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966

Sai Inspires (Tamil Translation): 10th December 2012

“God resides in the heart of all beings” says Lord Krishna in the Gita. He is not to be found specially in cities like Amarnath, Kashi, Tirupati, Kedar or Gokarna alone. Just as every drop of the ocean has the salty taste, the composition and the name of the ocean, so too every single being has the divine taste, composition, and the name of the Lord. Only you do not realise it so clearly. The river realises itself by reaching the sea; man realises himself by merging in the Absolute. The space encased in the pot must become one with the space that traverses the entire Universe. This can be achieved by the negation of the attachment, which is just an artificial creation of the deluded mind. The inferior status of manhood that now satisfies you, must give place to the status of Reality of God which is the true status.

– Divine Discourse, February 11, 1964

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், “அனைத்து ஜீவராசிகளின் இதயங்களிலும் இறைவன் வசிக்கிறார்”, என்று கீதையில் கூறுகிறார். அமர்நாத், காசி, திருப்பதி, கேதார்நாத், கோகர்ணம் போன்ற தலங்களில் மட்டுமே அவர் ப்ரத்யேகமாக இருப்பதில்லை. எவ்வாறு சமுத்திரத்தின் ஒவ்வொரு துளியிலும் அதன் உப்புக் கரிப்பும், அதன் கலவையும், அதன் பெயரும் உள்ளதோ, அவ்வாறே ஒவ்வொரு ஜீவராசியிலும் தெய்வீக ருசியும், அதன் கலவையும், தெய்வத்தின் திருநாமமும் உள்ளது. நீங்கள் அதனைத் தெளிவாக உணர்வதில்லை. ஒரு ஆறு, கடலை அடையும் பொழுது தன் உண்மையை அறிகிறது. மனிதன் கடவுளிடம் இரண்டறக் கலக்கும் பொழுது தன் உண்மையை அறிகிறான். பானையில் இருக்கும் ஆகாயம், இப்பிரபஞ்சம் முழுவதும் பரவியிருக்கும் ஆகாயத்துடன் இரண்டறக் கலக்க வேண்டும். மாயையில் மூழ்கியுள்ள மனதின் செயற்கையான ஆக்கமாகியப் பற்றுதளைக் களைவதன் மூலமே இதனை அடைய முடியும். உங்களைத் தற்போதுத் திருப்திப்படுத்தும் மனிதத்தன்மையின் கீழான நிலை விலகி, உண்மையான நிலையாகிய தெய்வத்தை உணர்தல் என்கிற நிலைக்கு இடமளிக்க வேண்டும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 11, 1964

Sai Inspires (Tamil Translation): 24th July 2012

It is the mind that weaves a pattern called “I” – the process by which it establishes the ego and elaborates it into a multitude of shackles which is called delusion. The mind prompts the senses to project into the outer world of objects, for it builds up notions of pleasure and pain, of joy and grief and constructs a whole array of urges and impulses. It resists all attempts to escape into the Eternal, Universal, and the Absolute. It protests when the individual is eager to become conscious of one’s identity. But when it finds that the individual is determined to oppose its tactics, it surrenders and disappears without a trace! Diminish your desires – you will be free from delusion. Desire comes from attachment – deliverance comes from detachment!

– Divine Discourse, March 27, 1966

மனம் அகம்பாவத்தை ஏற்படுத்தி, அதனை மாயைத் தளைகளாக விரிவடையச் செய்வதன் மூலம், “நான்” என்கிற அமைப்பைத் தானே  நிறுவுகிறது. சுகம் – வலி மற்றும் மகிழ்ச்சி – வருத்தம் ஆகிய எண்ணங்களைத் தோற்றுவித்து, உந்துதல்கள் மற்றும் தூண்டுதல்களை உருவாக்குவதால், மனம் புலன்களை வெளியுலக பொருட்களின் மேல் சார்ந்திருக்கத் தூண்டுகிறது. என்றும் நிலைத்திருக்கும், பிரபஞ்சம் தழுவிய, முழுமையினுள் தப்பிப்பதற்கான முயற்சிகளை அது தடுக்கிறது. ஒருவர் தன் உண்மை அடையாளத்தை உணர முற்படும்போது அது எதிர்க்கிறது. தன் தந்திரங்களை எதிர்க்க ஒருவர் உறுதியாக இருக்கிறார் என்பதை அறிந்ததும், அது சரணடைந்து, சுவடே இல்லாமல் மறைந்துவிடுகிறது! உங்கள் ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் – நீங்கள் மாயையிலிருந்து விடுபடுவீர்கள். ஆசை பற்றுதலிலிருந்து வருகிறது – விமோசனம் பற்றுதலின்மையிலிருந்து வருகிறது.

– தெய்வீக உரை, மார்ச் 27, 1966

Sai Inspires (Tamil Translation): 22nd July 2012

You take great care to see that the house that you own and live in is charming, impressive and comfortable! You get angry even if a poster is pasted on its walls. Then one day, you sell it. It is no longer the object of your attachment. Even if lightning strikes it, you are not disturbed! With the money you got, you purchase some fields. Now your attachment moves to the fields. Over a period of time, you sell them and put the money in a bank. Now, your attachment grows towards the bank account. Now what exactly is yours and what are you attached to? It is not the house, fields, or money; it is prestige, comfort, show, greed – things that arose in your mind as desires! Truly it is your ego that you are attached to. Each of you must take up some spiritual effort in order to cleanse the mind of lust and greed, of envy and hate.

– Divine Discourse, March 27, 1966

உங்களுக்குச் சொந்தமான நீங்கள் தங்கியிருக்கும் வீடு அழகாகவும், மனதில் பதியத்தக்கவாறும், சௌகரியமாகவும் இருக்க வேண்டும் என்று பெரும் கவனம் கொள்கிறீர்கள்! அதன் சுவர்களில் ஒரு சுவரொட்டியை ஓட்டினால் கூட நீங்கள் கோபம் கொள்கிறீர்கள். பின்னர் ஒரு நாள் அதனை விற்றுவிடுகிறீர்கள். அதன் பிறகு உங்கள் பற்றுதலிற்கான பொருளாக அது இருப்பதில்லை. அதன் மேல் இடி விழுந்தால் கூட நீங்கள் வருத்தப்படுவதில்லை! இவ்வாறாகப் பெற்ற பணத்தைக் கொண்டு நீங்கள் சில நிலங்கள் வாங்குகிறீர்கள். இப்பொழுது உங்கள் பற்றுதல் நிலங்களின்பால் செல்கிறது. நாளடைவில், நீங்கள் அவற்றையும் விற்று, பணத்தை ஒரு வங்கியில் போடுகிறீர்கள். இப்பொழுது, உங்கள் பற்றுதல் வங்கிக் கணக்கின்பால் வளர்கிறது. இப்பொழுது உங்களுடையது என்பது எது? நீங்கள் எவற்றின் மீது பற்றுதல் கொண்டுள்ளீர்கள்? அவை வீடல்ல, நிலங்களல்ல அல்லது பணமும் அல்ல; அவை உங்கள் மனதில் ஆசைகளாகத் தோன்றிய விஷயங்களான  கௌரவம், சௌகரியம், ஆடம்பரம், மற்றும் பேராசை ஆகும்! உண்மையில் நீங்கள் உங்கள் அஹங்காரத்தின் மீது தான் பற்றுதல் கொண்டுள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதினை, காமம் மற்றும் பேராசை, பொறாமை மற்றும் வெறுப்பு ஆகியவற்றிலிருந்து சுத்தம் செய்து கொள்வதற்காக ஏதாவது ஆன்மீக முயற்சிகளைப் பின்பற்ற வேண்டும்.

– தெய்வீக உரை, மார்ச் 27, 1966