Tag Archives: Belief

Sai Inspires (Tamil Translation): 8th March 2018

Bhagawan Sri Sathya Sai Baba

People who wish to check the quality of gold, draw a line with it on a piece of stone and assess its quality by examining that streak. The test that will reveal the quality of your faith is whether you are practising sincerely the injunctions laid down by God. Your beliefs and actions must be expressions of faith. They must have holiness as their core. They must be so full of love and compassion that they attract to you the grace of God. Such karma (actions) is what is advocated through karma kanda of Vedic scriptures. It is the taproot of human progress, the very breath of happy human existence, the food that alone can allay the hunger of people and the life-sustaining water that can cure their thirst. Therefore the first and continuing duty is to engage oneself in activities that are taught or approved in the Vedas. Three types of activity reach God and earn His grace:

  1. Activity not prompted by personal desire
  2. Activity emanating from unselfish love and
  3. Prayer arising from pure hearts.

– Sathya Sai Vahini, Chapter 19

தங்கத்தின் தரத்தை சோதிக்க விரும்பும் மக்கள், அதன் மீது ஒரு கல்லைக் கொண்டு ஒரு கோட்டினை வரைந்து, அதன் தரத்தை அந்தக் கோட்டைப் பார்த்து மதிப்பிடுவார்கள். உங்கள் பக்தியின் தரத்தை வெளிப்படுத்தும் சோதனை, நீங்கள் கடவுள் அளித்துள்ள கட்டளைகளை நேர்மையாகக் கடைப்பிடிக்கிறீர்களா என்பதே ஆகும்! உங்கள் நம்பிக்கைகளும் செயல்களும் பக்தியின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். அவை புனிதத்தைத் தம் உட்கருவாகக் கொண்டிருக்க வேண்டும். கடவுளின் அருளை உங்கள்பால் ஈர்க்கும் அளவிற்கு அவை அன்புடனும் கருணையுடனும் ததும்ப வேண்டும். வேத நூல்கள் இவ்வாறான கர்மாக்களையே (செயல்களையே) கர்ம காண்டத்தின் மூலம் பரிந்துரைக்கின்றன. அதுவே மனித முன்னேற்றத்தின் ஆணிவேராகவும், மானிடம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான உயிர்மூச்சாகவும், மக்களின் பசியைப் போக்கிடும் உணவாகவும், அவர்களின் தாகத்தைத் தணித்திடும் ஜீவாதாரமான நீராகவும் உள்ளது. எனவே, ஒருவருடைய முதன்மையான தொடர்கடமை வேதங்கள் போதிக்கும் அல்லது அங்கீகரிக்கும் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதே ஆகும். மூன்று வகையான செயல்கள் கடவுளை அடைந்து உங்களுக்கு அவருடைய அருளைக் கொடுத்திடும்:

  1. தனிப்பட்ட சொந்த அன்பினால் உந்தப்படாத செயல்
  2. தன்னலமில்லாத அன்பினால் தோன்றும் செயல் மற்றும்
  3. புனிதமான இதயங்களில் தோன்றும் பிரார்த்தனைகள்.

– சத்ய சாயி வாஹினி, அத்தியாயம் 19

Sai Inspires (Tamil Translation): 23rd September 2013

Bhagavan Sri Sathya Sai Baba

Every one of you has in possession a ticket for liberation from the cycle of birth and death. But most do not know the train that has to be boarded; many get down at intermediate stations, imagining them to be the terminus and wander helplessly in the wilderness, or are carried away by sights and scenes. Until the wound heals, and the new skin is formed and hardens, the bandage is essential. So too, until Reality is realized, the balm of faith, holy company and holy thoughts must be applied to the ego-affected mind. It is dedication to the Lord that sanctifies all activities. He is the Prompter, the Executor, the Giver of the required strength and skill, and the Enjoyer of the fruit thereof. So dedication must come naturally to you, for all is His, and nothing is yours. Your duty is to believe that He is the impeller of your activities and draw strength from that belief.

– Divine Discourse, October 14, 1964

நீங்கள் ஒவ்வொருவரும் பிறப்பு மற்றும் இறப்புச் சுழலில் இருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு பயணச்சீட்டை உங்களிடத்தில் கொண்டுள்ளீர்கள். ஆனால், பெரும்பாலானோருக்கு இரயிலில் ஏறவேண்டும் என்பது தெரியாது; பலர் கடைசி நிறுத்தம் என்றெண்ணி வழியிலுள்ள நிறுத்தங்களில் இறங்கி, திக்கற்று அலைகிறார்கள், அல்லது சில காட்சிகளைக் கண்டு தன்னிலை மறந்து போகிறார்கள். காயம் ஆறியவுடன், புதிய தோல் தோன்றி, அது தடிக்கும் வரை, கட்டு அவசியம். அதே போன்று, உண்மை இயல்பு உணரப்படும் வரை, நம்பிக்கை, சத்சங்கம் மற்றும் நற்சிந்தனைகள் ஆகியவற்றால் ஆன வலி நிவாரணி, அகங்காரத்தால் பாதிக்கப்பட்ட மனதின் மேல் தடவப்பட்ட வேண்டும். கடவுளிடம் அர்ப்பணிப்பதே அனைத்து செயல்களையும் புனிதப்படுத்தும். அவரே உந்துதல் அளிப்பவர், அவரே செயல்படுத்துபவர், அவரே அதற்குத் தேவையான சக்தியையும், யுக்தியையும் அளிப்பவர், அவரே அதன் பலன்களையும் அனுபவிப்பவர் ஆவார். ஆகையால், உங்களுக்கு அர்ப்பணிப்பு குணம் இயல்பாகவே தோன்ற வேண்டும். ஏனெனில், அனைத்தும் அவருடையதே, உங்களுடையது என்பது எதுவும் இல்லை. உங்கள் அனைத்துச் செயல்களுக்கும் அவரே உந்துதல் அளிப்பவர் என்பதை நம்பி, அந்த நம்பிக்கையிலிருந்து பலம் பெறுவதே உங்கள் கடமை ஆகும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 14, 1964