Tag Archives: Body

Sai Inspires (Tamil Translation): 28th January 2013

You are the Formless (Niraakaaram) come in the form of Man (Naraakaaram), the Infinite, come in the role of the finite, the Formless Infinite appearing as the formful infinitesimal, the Absolute pretending to be the Relative, the Atma behaving as the body, the Metaphysical masquerading as the merely physical. The Universal Self is the basis of all being. The sky was there before houses were built under it; it penetrated and pervaded them for some time; then, the houses crumbled and became heaps and mounds; but, the sky was not affected at all. So too, the Atma pervades the body and subsists even when the body is reduced to dust.

– Divine Discourse, February 19, 1964

மனித உருவில் (நராகாரம்) வந்துள்ள உருவமில்லாத (நிராகாரம்), வரம்பிற்கு உட்பட்டப் பாத்திரத்தை ஏற்றுள்ள எல்லையற்றப்  பரம்பொருளான, சார்புடையதாக பாசாங்கு செய்யும் சார்பற்றதான, தேகமாக நடந்து கொள்ளும் ஆன்மாவான, பௌதிகமாக வேஷம் பூண்ட பௌதிகத்தைத் தாண்டிய ஒன்று தான் நீங்கள். பரமாத்மாவே அனைத்து ஜீவராசிகளுக்கும் அடிப்படையாக உள்ளது. தன் கீழ் வீடுகள் கட்டும் ஆகாயம் இருந்தது; சில காலம் அது அவற்றில் ஊடுருவிப் பரவி இருந்தது; பின்னர், அந்த வீடுகள் நொறுங்கிக் குவியலாகின; ஆனால், ஆகாயம் பாதிக்கப்படுவதே இல்லை. அதே போல, ஆன்மா உடலில் பரவி, உடல் மறைந்து தூசியாக மாறிய பின்னரும் அது நிலைபெற்றிருக்கிறது.

– தெய்வீக உரை, பிப்ரவரி 19, 1964

Sai Inspires (Tamil Translation): 28th December 2012

The body is a house, given to you for rent. The owner is God. Live there, so long as He wills, thanking Him for it, and paying Him the rent of Faith and Devotion. A strong will is the best tonic you can intake; the will becomes strong when you know that you are a child of immortality or a person who has earned the Grace of the Lord. In the epic Mahabharatha, the Pandavas are wonderful shining examples of faith and devotion. They won the Grace of the Lord and successfully defeated every single one of the wily strategy of their foes. The reinforcement of Grace from the Lord is the most reliable means of support. When you win the Grace of Lord, dishonour, defeat and despair fade away like fog evaporates before the Sun. Even disease cannot touch you. Hence, I advise you to face life by strengthening your spiritual urges and invoking the Grace of the Lord.

– Divine Discourse, October 15, 1966

இவ்வுடல் உங்களுக்கு வாடகைக்கு அளிக்கப்பட்ட ஒரு வீடாகும். இறைவனே அதன் சொந்தக்காரர் ஆவார். அவர் விரும்பும் வரை, நன்றியுடன், நம்பிக்கை மற்றும் பக்தி ஆகிய வாடகையைச் செலுத்தி நீங்கள் அதனுள் வசிக்கலாம். திட சங்கல்பமே தலை சிறந்த சத்து மருந்து (டானிக்) ஆகும். நீங்கள் இறவாமையின் குழந்தைகள் என்பதனையும், கடவுளின் அருளிற்குப் பாத்திரமானவர்கள் என்பதனையும் உணர்ந்தால் அந்த சங்கல்பம் மேலும் உறுதியடையும். மஹாபாரதத்தில், பாண்டவர்கள் நம்பிக்கை மற்றும் பக்திக்கு அருமையான உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் கடவுளின் அருளைப் பெற்று, அவர்களுடைய பகைவர்களின் ஒவ்வொரு சூழ்ச்சியானத் தந்திரத்தையும் வெற்றிகரமாகத் தோற்கடித்தார்கள். வலிமைப்படுத்தும் கடவுளின் அருள் தான் மிகவும் நம்பகமான, ஆதரவளிக்கும் உறுதுணையாகும். எவ்வாறு சூரியனின் முன் மூடுபனி ஆவியாகிவிடுமோ, அவ்வாறு கடவுளின் அருளை நீங்கள் பெற்றால், அவமரியாதை, தோல்வி மற்றும் துயரம் ஆகியவை வலுவிழந்துவிடும். நோய் கூட உங்களைத் தீண்ட முடியாது. ஆகையால், உங்கள் ஆன்மீக நாட்டங்களை பலப்படுத்திக் கொண்டு, கடவுளின் அருளை வேண்டிப் பெற்று, வாழ்கையை எதிர்கொள்ளவேண்டும் என நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966

Sai Inspires (Tamil Translation): 17th December 2012

The body is the chariot (ratha) of the individual (jeevi), who is the Master. Human birth is the glorious and precious opportunity amongst all living beings. The human body is the castle from which one can fight successfully against the foes of attachment and egoism. It is the boat by which one can cross the sea of change and chance. The realization of the reality within oneself, through relentless spiritual discipline is an arduous challenge – as fraught with dangers and calamity, like playing with fire or duelling with wild animals. Scriptures (Upanishads) have compared the spiritual aspirant’s path to that of a razor’s edge. One has to be alert, vigilant and fully trained to meet all emergencies. Use the precious opportunity of this human birth and leverage your intelligence, discrimination and detachment you are gifted with, to rise above all, and realize the Ultimate Reality.

– Divine Discourse, October 15, 1966

தேகம் என்பது ஜீவி எனும் எஜமானரின் தேர் ஆகும். மனிதப் பிறப்பானது அனைத்து ஜீவராசிகளுக்கும் மேலான ஓர் அரிய வாய்ப்பாகும். பற்றுதல் மற்றும் ஆணவம் ஆகிய எதிரிகளை எதிர்த்துப் வெற்றிகரமாகப் போரிடுவதற்கு மனிதவுடல் ஒரு கோட்டையாக விளங்குகிறது. மேலும், அது மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகளைக் கொண்ட கடலைக் கடப்பதற்கு உதவும் படகாகவும் விளங்குகிறது. இடையறாத ஆன்மீக ஒழுங்கின் மூலம் ஒருவரினுள் உள்ள சத்தியத்தை,உணர்வது என்பது ஒரு நெருப்புடன் விளையாடுவதைப் போன்றும், காட்டு விலங்குகளுடன் விளையாடுவதைப் போன்றும், அபாயங்களும் பேரிடர்களும் கொண்ட ஒரு கடுமையான சவாலாகும். புனித நூல்களான உபநிஷத்துக்கள் ஒரு ஆன்மீக சாதகனின் பாதையை ஒரு கத்தியின் அலகிற்கு ஒப்பிடுகின்றன. அனைத்து அவசரங்களையும் எதிர் கொள்வதற்கு ஒருவர் விழிப்பாகவும், கவனமாகவும், நன்கு தேர்ச்சி பெற்றும் இருக்க வேண்டும். இம்மனிதப் பிறவியின் அரிய வாய்ப்பை உபயோகப்படுத்தி, உங்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்டுள்ள புத்தி, பகுத்தறிவு மற்றும் பற்றின்மை ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, அனைவருக்கும் மேலாக உயர்ந்து, சத்தியத்தை உணருங்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966

Sai Inspires (Tamil Translation): 1st December 2012

https://i0.wp.com/media.radiosai.org/sai_inspires/2012/uploadimages/SI_20121201.jpg

Just as the body is the house you live in, the universe is the body of God. An ant biting the little finger of your foot draws your entire attention to the spot in a split second, and you react to the pain and make an effort to remove the tiny enemy immediately. So too, you must feel the pain, the misery of the people, in the society around you. Pause for a moment to calculate what good you have done to the society that is helping you live your life comfortably. Do not fritter away your talents in profitless channels. You should not be a burden on others, or an enemy to your own self. Expand your sympathies to serve others, who stand in need, to the extent of your skill and resources. Be kind to all your kith and kin.

– Divine Discourse, February 3, 1964

எவ்வாறு உங்கள் உடல் உங்களுக்கு வீடு போல் உள்ளதோ அவ்வாறே இந்தப் பிரபஞ்சம் கடவுளின் உடலாக உள்ளது. ஒரு எறும்பு உங்கள் கால் சுண்டு விரலைக் கடித்தால் உடனே ஒரு வினாடிக்குள் உங்கள் முழுக் கவனத்தையும் அது ஈர்த்து, நீங்கள் வலியால் உந்தப்பட்டு, அந்தச் சிறிய எதிரியை நீக்குவதற்கு நீங்கள் முயல்கிறீர்கள். அதே போல, உங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் துயரப்படும் பொழுது நீங்களும் வலியை உணர வேண்டும். ஒரு கண நேரம் நின்று, நீங்கள் சுகமாக வாழ்வதற்கு உதவும் சமுதாயத்திற்கு நீங்கள் என்ன நன்மை செய்துள்ளீர்கள் என்பதனை எண்ணிப் பாருங்கள். இலாபமற்ற போக்குகளில் உங்கள் திறமைகளைச் செலுத்தி வீணடிக்காதீர்கள். நீங்கள் பிறரின் மேல் பாரமாகவோ, உங்களின் எதிரியாகவோ இருக்கக் கூடாது. உதவி தேவைப்படும் பிறருக்குச் சேவை செய்வதற்காக, உங்கள் திறமைகள் மற்றும் வழிவகைகளின் எல்லைக்குள் உங்கள் பரிவை விரிவாக்குங்கள். உங்கள் அனைத்து உற்றார் உறவினரின் மேலும் பரிவுடன் இருங்கள்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 3, 1964

Sai Inspires (Tamil Translation): 21st November 2012

Your fortune or misfortune depends on your actions. Without realising this truth, you are indulging in evil deeds. You feel sorry when the consequences of your sins haunt you. What is the use? You have to be careful right from beginning not to commit sin. Truth is the ornament for your neck (Sathyam kantasya bhushanam), Charity is the true ornament of the hand (Hasthasya bhushanam daanam). Your hands are useless if they do not perform acts of charity. You have to sanctify each limb of your body by engaging in sacred activities. Let your eyes ever look only at sacred things. These teachings are simple to practise in your daily life. But do not take them lightly. Though they appear to be simple, they lead you to liberation. You may not be able to see the results of your meritorious deeds. But they confer on you all the happiness and comforts in due course of time.

– Divine Discourse, 19 November, 2002

உங்கள் அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் உங்கள் செயல்களைச் சார்ந்தே உள்ளது. இந்த உண்மையை அறியாமல், நீங்கள் தீய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டுள்ளீர்கள். உங்கள் பாவங்களின் விளைவுகள் உங்களை வாட்டும் பொழுது நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். இதன் பயன் என்ன? முதலில் இருந்தே பாவம் செய்யாதிருக்க நீங்கள் கவனமாக கொள்ள வேண்டும். உண்மையே உங்கள் கழுத்தின் ஆபரணம் ஆகும் (சத்யம் கண்டஸ்ய பூஷணம்). அறமே கரங்களின் உண்மையான ஆபரணம் ஆகும் (ஹஸ்தஸ்ய பூஷணம் தானம்). அறச் செயல்கள் செய்யாவிடில் உங்கள் கைகள் இருந்து எந்த பயனும் இல்லை. புனிதச் செயல்களில் ஈடுபட்டு உங்கள் ஒவ்வொரு உறுப்பையும் புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கண்கள் புனிதமானவற்றையே எப்பொழுதும் காணட்டும். உங்கள் தினசரி வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு இந்த உபதேசங்கள் எளிதானவை. ஆனால் அவற்றை சாதாரணமாகக் கருதாதீர்கள். அவை எளிதாகத் தோன்றினாலும், அவை உங்களை மோக்ஷத்திற்கு இட்டுச் செல்லும். உங்கள் நற்செயல்களின் பலன்கள் உங்களுக்குப் புலப்படாமல் இருக்கலாம். ஆனால், அவை காலப்போக்கில் உங்களுக்கு சந்தோஷத்தையும் சௌகரியங்களையும் நல்கும்.

– தெய்வீக உரை, 19 நவம்பர், 2002

Sai Inspires (Tamil Translation): 18th November 2012

Sensuous pleasures are momentary and leave a trail of pain behind. Yet most people, from the learned to the illiterate, seek only such fleeting and unreal pleasures (preyas). Hence, instead of seeking preyas, develop a desire for spiritual well-being (Shreyas). Surely there is a need for some concern about physical comforts. ‘Even the body is essential for the realisation of Dharma,’ says the scripture. The demands of the body have to be satisfied. Society has to be served. Family responsibilities have to be discharged. The body is the basis for all these. But this should not be the ultimate goal of life. Together with this, there should be the yearning for a higher Shreyas. All actions aimed at Spiritual bliss are related to Shreyas and it is when you yearn for Shreyas, that even preyas leads you to fulfilment.

– Divine Discourse, 5 March, 1995

புலனின்பங்கள் நிலையற்றவை. அவை வலியின் அடிச்சுவட்டை விட்டுச் செல்லும். ஆயினும் கற்றவர் முதல் கல்லாதவர் வரை பலர், ப்ரேயஸ் எனப்படும் இவ்வாறான நிலையற்ற பொய்யான இன்பங்களைத் தான் நாடுகின்றனர். ஆகையால், ப்ரேயஸ் எனப்படுவதை நாடாமல், ஸ்ரேயஸ் எனப்படும் ஆன்மீக ஆரோக்கியத்திற்கான நாட்டத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உடலளவிலான சௌகரியங்களைப் பற்றியச் சிந்தனை குறைந்த பட்சம் தேவை தான். புனித நூல்கள், “தர்மத்தை உணர்ந்திட உடலும் அவசியமானது தான்”, என்று கூறுகின்றன. உடலின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியவை தான். சமுதாயத்திற்கு சேவை செய்திட வேண்டும். குடும்பப் பொறுப்புகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றிற்கெல்லாம் உடல் ஆதாரமாக விளங்குகின்றது. ஆனால் இதுவே வாழ்கையின் உயர் நோக்கமாக இருந்துவிட முடியாது. இதனுடன், அதைவிட உயரிய ஸ்ரேயஸின் பால் நாட்டம் தேவை. ஆன்மீக ஆனந்தத்திற்காகச் செய்யப்படும் அனைத்து செயல்களும் ஸ்ரேயஸ் சம்பந்தப்பட்டவை தான். நீங்கள் ஸ்ரேயஸ்ஸிற்காக விழைந்தால், ப்ரேயஸ்ஸும் கூட உங்களை பூரணத்திற்கு இட்டுச் செல்லும்.

– தெய்வீக உரை, 5, மார்ச், 1995

Sai Inspires (Tamil Translation): 12th November 2012

If you want to light a lamp, you need four things – a container, oil, a wick and a match box. If any one of these is lacking, you cannot light the lamp. Similarly, to light the lamp of spiritual wisdom in your heart, you need – the container of detachment, wick of one-pointed concentration, matchstick of wisdom and the oil of devotion. Of these, the spirit of detachment (vairagya) is crucial. Detachment means absence of body attachment. The sense of possessiveness (mamakara) and the ego-feeling are the causes of this raga (disease). Eradicate this disease of attachment through the process of self-enquiry. When you realise the impermanence of the body and all the sensory experiences, you will naturally acquire detachment (vairagya). Discharge all your duties as an offering to God and treat your body solely as a God-given instrument for the purpose of serving others.

– Divine Discourse, 9 November 1988

நீங்கள் ஒரு விளக்கை ஏற்ற விரும்பினால் உங்களுக்கு நான்கு பொருட்கள் தேவைப்படுகின்றன – ஒரு கொள்கலன் (அகல்), எண்ணெய், ஒரு திரி மற்றும் ஒரு தீப்பெட்டி. இவற்றில் ஏதாவதொன்று இல்லையெனினும் உங்களால் விளக்கை ஏற்ற இயலாது. அது போல, ஆன்மீக ஞானம் எனும் விளக்கை உங்கள் இதயத்தில் ஏற்றுவதற்கு, பற்றின்மை எனும் கொள்கலனும், ஒருமுகச் சிந்தனை எனும் திரியும், ஞானம் எனும் தீக்குச்சியும், பக்தி எனும் எண்ணெய்யும் உங்களுக்குத் தேவைப்படுகின்றன. இவற்றில், பற்றின்மை எனும் உணர்வு (வைராக்கியம்) மிகவும் அத்தியாவசியமானதாகும். பற்றின்மை என்றால் உடல் மேல் பற்று கொள்ளாமல் இருப்பது என்று பொருள். மமகாரம் மற்றும் அஹங்காரம் தான் இராகம் எனப்படும் நோய்க்குக் காரணமாகின்றன.சுய விசாரணை மூலம் இந்த நோயினைப் போக்குங்கள். இவ்வுடல் மற்றும் அனைத்துப் புலன் சார்ந்த அனுபவங்கள் ஆகியவற்றின் நிலையற்ற தன்மையை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் இயல்பாகவே பற்றின்மை (வைராக்கியம்) பெறுவீர்கள். உங்கள் அனைத்துக் கடமைகளையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பாகச் செய்து, பிறருக்குச் சேவை செய்யும் பொருட்டு, ஒரு கருவியாக உங்கள் உடலைக் கடவுள் அளித்துள்ளார் என்று கருதுங்கள்.

– தெய்வீக உரை, 9 நவம்பர் 1988

Sai Inspires (Tamil Translation): 5th November 2012

You must take care of your body, which is the case for the Divine Spark, until its purpose of Self-Realization is fulfilled. But its nourishment and care should not overshadow the attention due to the mind, its purification and sublimation. Now the body is nourished with breakfast in the morning, lunch at noon, snack break at 4 PM and dinner at night. The body is the cart and the mind is the horse that drags it. Unfortunately no food is given to the horse, which is really the more valuable of the two. Give the mind and culturing of the mind, the importance it deserves, only then life is worth living. The mind has to be hale and hearty, joyous and peaceful, free from agitations and worries. You can keep it happy by recitation of holy names and doing noble acts that helps the wellbeing of all. This will confer you everlasting joy.

– Divine Discourse, January 14, 1964

நீங்கள் தெய்வீகப் பொறிக்கு ஒரு பெட்டகமாக விளங்கும் உங்கள் உடலை, அதன் பயனான சுயத்தெரிவு நிலையை அடைதல் என்பது நிறைவேறும் வரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதனைப் போஷிப்பதும் கவனிப்பதும், மனதிற்கும், அதன் தூய்மைக்கும், அதன் மேம்பாட்டிற்கும் தேவையான கவனத்தை விஞ்சக்கூடாது. இப்பொழுது உடல் காலை உணவு, மதிய உணவு, நான்கு மணிக்கு மாலைச் சிற்றுண்டி, இரவு உணவு ஆகியவற்றால் போஷிக்கப்படுகிறது. உடல் என்பது ஒரு குதிரை வண்டியாகும். மனமே அதனை இழுக்கும் குதிரையாகும். துரதிர்ஷ்டவசமாக, இவ்விரண்டில் உண்மையாகவே மதிப்பில் மேலான குதிரைக்கு எந்த உணவும் அளிக்கப்படுவதில்லை. மனதிற்கும், அதனை செம்மைப்படுத்துவதற்கும், அதற்குத் தேவையான முக்கியத்துவத்தை அளியுங்கள். அவ்வாறு செய்தால் தான் வாழ்க்கை வாழ்வதற்கு மதிப்பிருக்கும். மனம் ஆரோக்கியமாகவும், நிறைவுடனும், மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், குழப்பமின்றியும் கவலையின்றியும் இருக்க வேண்டும். திருப்பெயர்களை உச்சரிப்பதன் மூலமும், அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்கும் உதவும் நற்செயல்கள் செய்வதன் மூலமும் அதனை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். இது உங்களுக்கு நீங்காத இன்பமளிக்கும்.

– தெய்வீக உரை, ஜனவரி 14, 1964

Sai Inspires (Tamil Translation): 7th October 2012

The body is but a boat, an instrument for crossing the sea of births and deaths, that you have earned through the merits of many generations. Crossing the sea is to realise the Dweller, in the Dwelling. The purpose of the body (deha) is to realize the Indweller (Dehi). So even when the body is strong and skilled, the intellect is sharp and the mind alert, every effort must be made to seek the Indweller. So keep your body fit, strong and free from trouble. Just as the boat should be seaworthy, your body too should be fit for its purpose. You must take good care of it.

– Divine Discourse, August 3, 1966

தேஹம் என்பது பிறப்புகள் மற்றும் இறப்புகள் நிறைந்த கடலைக் கடக்க உதவும், சந்ததி சந்ததியாகப் செய்யப்பட்ட புண்ணியங்களின் வாயிலாகப் பெறப்பட்டக் கருவியான ஒரு படகு தான். கடலைக் கடப்பது என்பது தேஹத்தினுள் வசிக்கும் தேஹி எனப்படும் தெய்வத்தை உணர்வதே ஆகும். தேஹத்தின் பயன் தேஹியை உணர்வதே. ஆகையால், தேஹம் பலமாகவும், திறனுடனும் இருந்து, புத்தி கூர்மையாகவும் இருந்து, மனம் விழிப்பாகவும் இருந்து, செய்யப்படும் ஒவ்வொரு செயலும் உள்ளுறைபவரை நாட விழையவேண்டும். ஆகையால், உங்கள் தேஹத்தை ஆரோக்கியமாக, பலமாக, பிரச்சினைகளில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வாறு படகு கடலில் மிதப்பதற்குத் தகுந்தாற்போல் இருக்க வேண்டுமோ, உங்கள் தேஹமும் அதன் பயனுக்குத் ஏற்றாற்போல் இருக்க வேண்டும். நீங்கள் அதனைச் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 3, 1966

Sai Inspires (Tamil Translation): 5th October 2012

The tree of life can yield the fruit of bliss only when it is watered with virtue and fed on faith. Provision of food, clothing, and shelter will not ensure peace and joy; they can come only through virtue and faith. Virtue alone can endow love and sympathy. We are now putting the cart (the body) before the horse (mind) and providing for the safety and strength of the cart alone. The horse (mind) is allowed to grow wild or is starved. Harmony at home and in society can be brought about only through the recognition of the Oneness of All. Virtues alone can endow love and sympathy, peace and joy for one and all.

– Divine Discourse, August 3, 1966

நற்குணம் எனும் நீர் பாய்ச்சி, நம்பிக்கை எனும் உரம் இட்டால் தான் வாழ்க்கை எனும் மரம் ஆனந்தம் எனும் பழத்தை நல்கும். உண்ண உணவும், உடுத்த உடையும், தங்குவதற்கு இடமும் இருந்தால் மட்டும் உங்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் உறுதியாகாது; நற்குணம் மற்றும் நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவை உங்களுக்குக் கிடைக்கும். நற்குணம் மட்டுமே அன்பையும் பரிவையும் அளிக்கும். இன்று நாம் தேகமாகிய வண்டிக்கு மனமாகிய குதிரையைவிட, வண்டிக்கு மட்டுமே பாதுகாப்பும் பலமும் அளிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். மனம் எனும் குதிரையைக் காட்டுத்தனமாகவோ பசியால் வாடும்படியோ செய்கிறோம். இல்லத்திலும், சமுதாயத்திலும் நல்லிணக்கம் என்பது, அனைவரின் ஒற்றுமையை ஏற்றால் தான் தோன்றும். நற்குணங்கள் மட்டுமே அன்பையும், பரிவையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் அனைவருக்கும் நல்கும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 3, 1966