Tag Archives: body is the temple

Sai Inspires (Tamil Translation): 27th November 2012

“Deho Devalaya” – Body is the temple, scriptures teach us. Realize that the human body is not just a mass of flesh and bone. The human body is a sacred instrument equipped with reason and emotion, capable of being used for deliverance from grief and evil; you have earned it after long ages of struggle. Honour it as such, keep it in good condition, so that it might serve that high purpose. Maintain it even more carefully than your brick homes and never let go of the conviction that it is an instrument and nothing more. Use it justly, for the purpose for which it has been designed and given. Install the Lord in the altar of your heart and invite Him into it. God loves to reside in a pure and aspiring heart.

– Divine Discourse, February 3, 1964

“தேஹோ தேவாலய” – புனித நூல்கள் உடலே திருக்கோயில் என்று நமக்கு உபதேசிக்கின்றன. மனித உடல் வெறும் சதை மற்றும் எலும்பின் திரள் மட்டுமே கிடையாது என்பதை அறியுங்கள். மனித உடல், துயரத்திலிருந்தும், தீயவற்றிலிருந்தும் விடுபடுவதற்குப் பயன்படுத்தப்படத் தகுதியான, ஆராயும் திறனும், உணர்வும் கொண்ட ஒரு புனிதமான கருவியாகும்; நீங்கள் பல காலமாகப் போராடி இதனைப் பெற்றுள்ளீர்கள். அந்த உயர் குறிக்கோளிற்குப் பயன்படுமாறு அதற்கு மரியாதையளித்து, அதனை நல்ல நிலையில் பேணுங்கள். செங்கற்களாலான உங்கள் வீடுகளைவிட இதனை மேலும் கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது ஒரு கருவி மட்டுமே வேறெதுவும் இல்லை எனும் திடநம்பிக்கையை என்றும் இழக்காதீர்கள். அது உருவமைக்கப்பட்டு அளிக்கப்பட்டதற்கான குறிக்கோளிற்காக அதனைச் சரியாகப் பயன்படுத்துங்கள். உங்கள் இதயம் எனும் பீடத்தில் கடவுளை அமர்த்துவதற்கு நீங்கள் அவரை வரவேற்க வேண்டும். தூய்மையான, ஆர்வம் கொண்ட இதயத்தில் வசிப்பதை அவர் விரும்புகிறார்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 3, 1964

Sai Inspires (Tamil Translation): 25th September 2012

The body is the temple of God, He is the resident of the heart, and intelligence (Buddhi) is the lamp that is lit in its altar. Protect the lamp and its glow from the wind that blows through the windows of the senses and threatens to put them out. Close the windows, do not keep them open for dire attraction from objects. Keep your intellect sharp, so that it may cut the mind into a diamond and convert it into a blaze of light, instead of being a dull pebble. Discrimination is an important instrument of spiritual progress. Attachment, affection, and interests – these create prejudice, partiality, and illusion. They hide the truth and dull the intelligence. The reasoning faculty must be employed to distinguish between the limited and the unlimited, the temporary and the Eternal.

– Divine Discourse, October 2, 1965

தேகம் தெய்வத்தின் ஆலயம். அவர் இதயத்தில் வசிப்பவர். புத்தி என்பது அவர் சந்நிதியில் ஏற்றப்பட்ட திருவிளக்காகும். அந்த திருவிளக்கையும் அதன் ஒளியையும், புலன்கள் எனும் ஜன்னல்கள் வழியாக வீசி அதனை அணைக்க அச்சுறுத்தும்  காற்றிலிருந்து நீங்கள் பாதுகாக்க வேண்டும். ஜன்னல்களை மூடுங்கள், அவற்றை பொருட்களின் கவர்ச்சி ஈர்க்கப்படும்படி திறந்து வைக்காதீர்கள். உங்கள் புத்தி மனதை ஒரு ஒளியில்லாத கூழாங்கல்லாக இருக்க விடாமல் வைரமாக மாற்றி அதனை ஒரு ஒளிக்கீற்றாக மாற்றுமாறு கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள். பகுத்தறிவு என்பது ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கிய கருவியாகும். பற்றுதல், பாசம் மற்றும் விருப்பங்கள் பாரபட்சம், ஓரவஞ்சனை மற்றும் மாயையை உருவாக்குகின்றன. அவை உண்மையை மறைத்து புத்தியை மழுங்கச் செய்கின்றன. எல்லைக்குட்பட்டதற்கும், எல்லைகுட்படாததற்கும், தற்காலிகமானதற்கும் நிரந்தரமானதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிவதற்கு ஆராயும் திறனை உபயோகிக்க வேண்டும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 2, 1965