Tag Archives: Cattle tied to pole

Sai Inspires (Tamil Translation): 8th March 2013

The most important reason for bondage is giving too much freedom to the mind. For example, when an animal is tethered to a post, it will not be able to go to another place. It will not be able to show anger or violence or do harm to any person. But if it is let loose, then it can roam over various fields, destroy the crops, and cause loss and harm to others. It may also get beaten up for the harm caused by it. So too, if you turn your mind towards worldly objects, it will descend to the animal or even demonic nature. The same mind also can make you rise from the level of the human to the highest level of Divinity. Hence regulate your mind by following certain rules of discipline. In doing so, you will not go astray and can maintain a good name and lead a happy and useful life.

– Divine Discourse, February 17, 1985

பற்றுதல் ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணம் மனதிற்கு அளவுக்கு அதிகமான சுதந்திரம் அளிப்பது தான். உதாரணத்திற்கு, ஒரு கம்பத்தில் ஒரு மிருகம் கட்டப்பட்டிருக்கும் போது, அது மற்றோர் இடத்திற்குச் செல்ல இயலாது. அதனால் யாரையும் கோபித்துக் கொள்ளவோ, இம்சைபடுத்தவோ, அல்லது யாருக்கும் தீங்கு விளைவிக்கவோ முடியாது. ஆனால், அதனை அவிழ்த்துவிட்டால், அது வயல் அனைத்திலும் சுற்றி, பயிர்களை நாசம் செய்து, மற்றவர்களுக்கு நஷ்டமும் தீங்கும் அளிக்கும். அது விளைவித்தத் தீங்கினால் தானும் அடி வாங்கிக் கொள்ள நேரிடும். அதே போல, உங்கள் மனதை உலக விஷயங்களின் பால் நீங்கள் திருப்பினால், அது மிருக இயல்பிற்கு, ஏன் இராக்ஷஸ இயல்பிற்குக் கூட கீழிறங்க நேரிடும். அதே மனம் உங்களை மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்தவும் முடியும். ஆகையால், உங்கள் மனதைச் சில கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொண்டு சீர்படுத்துங்கள். அவ்வாறு செய்வதனால், நீங்கள் அங்குமிங்கும் திரியாமல், நற்பெயரை விலகாமல் பார்த்துக் கொண்டு, சந்தோஷமான, உபயோகமான வாழ்க்கை வாழ முடியும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 17, 1985