Tag Archives: child

Sai Inspires (Tamil Translation): 15th February 2013

The mother spends more time tending the sick child; she asks the older children to look after themselves but feeds the infant with her own hands. That does not mean that she has no love towards the grown-ups. So too, do not think that because God does not ostensibly shower attention on a person, that he or she is not receiving God’s Love and Grace. In God’s view, there is no one senior or junior amongst devotees. Note this also – in this Avatar (Divine Incarnation), the wicked will not be destroyed; they will be corrected, reformed, educated and led back to the path from which they have strayed. The white-ant infested tree will not be cut; it will be saved.

– Sathya Sai Speaks, Vol I, MahaShivarathri, 1955

அன்னை நோய்வாய்ப்பட்ட குழந்தையை கவனிப்பதில் தான்  அதிக நேரம் செலவழிப்பாள்; மூத்த குழந்தைகளைத் தம்மைத் தாமே பார்த்துக் கொள்ளும்படி கூறுவாள். ஆனால் சிறு குழந்தைக்குத் தன் கையாலேயே உணவளிப்பாள். அது வளர்ந்தவர்களிடம் அவளுக்கு அன்பில்லை என்பதனால் இல்லை. அதே போல, ஒரு மனிதரின் பால் கடவுளின் கவனம் அதிகமாக இல்லாததால் அவருக்குக் கடவுளின் அன்போ அருளோ இல்லை என்று எண்ணாதீர்கள். கடவுளின் பார்வையில், பக்தர்களில் யாரும் மூத்தவரோ இளையவரோ அல்ல. இதனையும் கவனியுங்கள் – இந்த அவதாரத்தில் தீயவர்கள் அழிக்கப்படமாட்டார்கள்; அவர்கள் திருத்தப்படுவார்கள், மறுமலர்ச்சியூட்டப்படுவார்கள், கற்பிக்கப்பட்டு, அவர்கள் விலகி வந்த பாதையில் மீண்டும் இட்டுச் செல்லப்படுவார்கள். கறையானால் பாதிக்கப்பட்ட மரம் வெட்டப்படாது; காப்பாற்றப்படும்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி, 1955

Sai Inspires (Tamil Translation): 6th February 2013

A child told its mother as it went to bed at night, “Mother, wake me up when I am hungry.” The mother answered, “There is no need, your hunger will itself wake you up.” So too, when the hunger for God arises, it will itself activate you to seek the fulfilment. God has endowed you with hunger and illness, and He provides the food and medicine. Your duty is to see that you get the right hunger and the right illness and use the appropriate food or drug! Man must be yoked to the world and broken; that is the training which will teach that the world is unreal. When you touch fire and get the sensation of burning, you withdraw your hand instantly. Unless you touch it, you will be aware only of its light. It is light and heat both; just as this world is both true and false, that is to say, unreal.

– Sathya Sai Speaks, Vol I, MahaShivarathri, 1955

படுக்கச் செல்லும் முன் ஒரு குழந்தை தன் தாயிடம், “அம்மா, நான் பசி கொள்ளும் பொழுது எண்ணெய் எழுப்பிவிடுங்கள்”, என்று கூறியது. “அதற்குத் தேவை இருக்காது. உன் பசியே உன்னை எழுப்பிவிடும்”, என்று தாய் பதிலளித்தாள். அதே போல, கடவுளுக்காக பசி ஏற்படும் பொழுது, அதுவே அந்த முழுமையை அடைய உங்களைத் தூண்டிவிடும். கடவுள் உங்களுக்கு பசியையும் நோயையும் அளித்து, உணவையும் மருந்தையும் கூட அளிக்கிறார். சரியான பசியையும், சரியான நோயையும், அவற்றிற்குத் தகுந்த உணவையும் மருந்தையும் உபயோகிப்பது உங்கள் கடமையாகும்! மனிதன் உலகத்துடன் பிணைக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும்; உலகம் பொய்யானது என்பதை அந்தப் பயிற்சி கற்றுக் கொடுக்கும். தீயைத் தீண்டி, அது உங்களுக்கு எரிச்சல் அளித்தால் நீங்கள் உங்களை கையை உடனடியாக விலக்கிக் கொள்கிறீர்கள். அதனைத் தீண்டும் வரை அதன் ஒளி மட்டுமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது ஒளி மற்றும் வெப்பம் ஆகிய இரண்டுமாக உள்ளது. இவ்வுலகும் உண்மை பொய் ஆகிய இரண்டுமாக உள்ளாது.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி, 1955

Sai Inspires (Tamil Translation): 31st December 2012

A mother fetching water from the well, will have a pot on her head, another on her hip and a third in her hand, and will be hurrying her way home, as she is always conscious of the infant in the cradle. If she forgets the infant, her gait slows down and she wanders around, chatting with all her friends. Similarly, if God, the Goal, is not cherished in the memory, one has to wander through many births and arrive home late. Hence keep the memory of the Lord and His glory, always with you. That will quicken your steps and you will arrive soon at the goal.

– Divine Discourse, February 18, 1964

கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டிருக்கும் தாய், தன் தலையில் ஒரு குடத்தையும், மற்றொன்றைத் தன் இடுப்பிலும், மூன்றாவதைத் தன் கையிலும் வைத்துக் கொண்டு, வீட்டில் தொட்டிலில் உள்ள தன் கைக்குழந்தையை எப்பொழுது நினைவில் கொண்டு வீட்டை நோக்கி விரைகிறாள். தன் கைக்குழந்தையை அவள் மறந்துவிட்டால், அவளுடைய நடை மெதுவாக மாறி, அவர்கள் இங்குமங்கும் சுற்றித் திரிந்து, தன் தோழிகள் அனைவரிடமும் பேசிக் கொண்டிருப்பாள். அதே போல, கடவுள் எனும் குறிக்கோள் நம் நினைவில் இல்லையெனில், ஒருவர் பற்பல பிறப்புகளில் சுற்றித் திரிந்து வீட்டிற்குத் தாமதமாகத் தான் வந்தடைய முடியும். ஆகையால், கடவுளையும் அவருடைய மகிமையையும் எக்கணமும் உங்கள் நினைவிலேயே வைத்திருங்கள். அது உங்கள் நடையை விரைவாக்கி உங்களை அந்தக் குறிக்கோளை விரைவில் எட்டச் செய்யும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 18, 1964

Sai Inspires (Tamil Translation): 13th April 2012

Right from a young age, children should be taught the greatness of our ancient culture. They should develop humility, love, and reverence toward elders and respect everyone. Children and youth should be moulded into ideal citizens. One can earn the respect of others only when one first respects others. Respect does not mean merely greeting by saying ‘hello’. One should offer their respects (namaskara) to the others with humility and reverence. Na-maskara means offering your respects without a trace of ego and attachment (ahamkara and mamakara). For anything, practise is very important. The responsibility lies with the parents and teachers to make the children and youth adhere to our ancient tradition. Then society will certainly progress and enjoy peace and prosperity. If we practise our ancient values, society will attain kshemam (welfare), otherwise it will be afflicted with kshamam (famine). Practising one’s sacred culture is the true sign of education.

– Divine Discourse, April 15, 2003

இளம் வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நம் புராதன கலாசாரம் பற்றிக் கற்பிக்க வேண்டும். அவர்கள் பணிவு, அன்பு மற்றும் பெரியோர்களை மதித்து, அனைவரையும் மரியாதையுடன் நடத்த அறிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளும் இளைஞர்களும் நல்லதொரு குடிமகன்களாக உருவேற்றப்பட வேண்டும். பிறரை முதலில் மதித்தால் தான், பிறரின் மரியாதையைப் பெற முடியும். மரியாதை என்பது வெறும் ‘ஹலோ’ என சொல்லுவதில்லை. ஒவ்வொருவரும் பணிவு மற்றும் மரியாதையுடன் பிறருக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும்.நம-ஸ்காரம் என்றால் அஹம்பாவமும் பற்றுதலும் இல்லாமல் மரியாதை தருவது என்று பொருள். எதற்கும் பயிற்சி மிகவும் முக்கியம். நமது புராதன கலாச்சாரத்தை குழந்தைகளும் இளைஞர்களும் பின்பற்றச் செய்விக்கும் கடமை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடையது ஆகும். பின்னர், சமுதாயம் நிச்சயமாக முன்னேறி அமைதியையும் வளத்தையும் அனுபவிக்கும். நாம் நமது புராதன மதிப்பீடுகளைப் பின்பற்றினால், சமுதாயம் க்ஷேமம் (அதாவது நன்மை) பெரும். இல்லையெனில் அது க்ஷமத்தினால் (பஞ்சத்தினால்) பீடிக்கப்படும். ஒருவரின் புனிதக் கலாசாரத்தைப் பின்பற்றுவதே கல்வியின் உண்மையான அறிகுறியாகும்.

– தெய்வீக உரை, ஏப்ரல் 15, 2003