Tag Archives: Chinna Katha

Sai Inspires (Tamil Translation): 25th September 2013

Bhagavan Sri Sathya Sai Baba

We must have the awareness of the relative value of things; the discrimination between the real and relatively real. The gifts of reason and conscience must not be wasted through neglect. Your story should not be a repetition of that of the woodcutter, who was given a huge sandalwood forest as a reward, but, who out of sheer ignorance of the value of the trees, burnt the trees and sold them as charcoal at so much per bag! You ignore the Divinity that you really are and waste the opportunity to unfold it. Ignorance (ajnana) is imported from outside; what is native to you, what is within is wisdom (Jnana).

– Divine Discourse, October 14, 1964

பொருட்களின், பிற பொருட்களுடனான ஒப்பீடு பற்றிய விழிப்புணர்வு, அதாவது நிலையானவற்றிற்கும் நிலையில்லாதவற்றிற்கும் இடையேயான பகுத்தறிவு நமக்குத் தேவை. பகுத்தறிவு மற்றும் மனசாட்சி ஆகிய ஆற்றல்கள் உதாசீனத்தினால் வீனாக்கப்படக் கூடாது. ஒரு மாபெரும் சந்தனக் காட்டினை பரிசாகப் பெற்ற ஒரு விறகு வெட்டி, எவ்வாறு தன் அறியாமையால், அம்மரங்களின் மதிப்பை உணராமல், அவையனைத்தையும் எரித்து, கரியாக்கி, ஒவ்வொரு மூட்டைக்கும் விலை பேசினானோ, அவ்வாறு உங்கள் கதையும் இருந்து விடக் கூடாது! உங்கள் உண்மை இயல்பான தெய்வீகத்தை மறந்து, அதனை வெளிப்படுத்தாமல் வீணாக்குகிறீர்கள். அஞ்ஞானம் வெளியிலிருந்து உள்ளேற்றப்படுகிறது. உங்கள் உண்மை நிலையான ஞானம் உங்களுள் உள்ளது.

– தெய்வீக உரை, அக்டோபர் 14, 1964

Sai Inspires (Tamil Translation): 15th July 2013

A thirsty passenger asked the water carrier at an up-country railway station in India whether the leather bag in which they were serving water was clean. The reply the passenger received was, “As regards cleanliness, all I can say is that the bag which contains the water is cleaner than the bag which takes it in!” This statement conveys an important lesson. You must care more for the cleanliness of your mind and intellect than that of the external body. Instead of criticising others and finding fault with the actions of others, subject yourself to vigilant scrutiny. Understand your motives and actions in a deep manner and invest time in correcting your own faults. Do not be like the dancer who blamed the drummer for the wrong steps.

– Divine Discourse, August 19, 1964

இந்தியாவில் ஒரு இரயில் நிலையத்தில் ஒரு தாகம் அடைந்த பயணி ஒரு தோல்பையிலிருந்து குடிநீர் வழங்கிக் கொண்டிருந்தவரிடம் அந்தப் பை சுத்தமானதா என்று கேட்டார். “குடிநீரைக் கொண்டுள்ள பை அதனைப் பெற்றுக்கொள்ளும் பையைவிட தூய்மையானது”, என்ற பதில் அவருக்குக் கிடைத்தது. இந்த வாசகம் ஒரு முக்கியமான பாடத்தை அளிக்கிறது. புறவுடல் தூய்மையைவிட உங்கள் மனம் மற்றும் புத்தியின் தூய்மைக்கு நீங்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். பிறரை விமர்சிப்பதிலும் பிறர் செயல்களில் குறை காண்பதிலும் ஈடுபடாமல் உங்களை நீங்கள் நன்றாக ஆராய்ந்து பாருங்கள். உங்கள் உந்துதல்கள் மற்றும் செயல்களை ஆழமாகப் புரிந்து கொண்டு, உங்கள் குறைபாடுகளைக் காண்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். தன் தவறான ஆட்டத்திற்கு மத்தளம் வாசிப்பவனைச் சாடிய நாட்டியக்காரரைப் போல் இருக்காதீர்கள்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 19, 1964

Sai Inspires (Tamil Translation): 23rd February 2013

Have you not heard the story of the lion suffering from a wound in the foot? A slave who was fleeing through the forest saw it and when he approached it with sympathy, the lion put out its paw. He then slowly pulled out the thorn that had caused all that pain and left the place, only to be arrested later and taken to Rome. There, they decided to throw him into the amphitheatre and let loose upon him a lion that had been recently captured. It was, however, the same lion which the slave had saved and so, its gratitude did not allow it to harm its saviour. See, even animals exhibit gratitude, not only the pet animals, but even the wild ones like the lion. Express your gratitude to the Creator who has poured into you nectar that grants immortality! Be grateful to the Lord for endowing you with powers of discrimination, detachment and evaluation.

– Divine Discourse, February 25, 1964

காலில் பட்ட அடியினால் அவதிப்பட்ட சிங்கத்தின் கதையை நீங்கள் கேட்டதில்லையா? காட்டில் தப்பியோடிக்கொண்டிருந்த அடிமையொருவன் அதனை பார்த்ததும், அதனை பரிதாபத்துடன் அணுகியபோது அந்த சிங்கம் தன் காலைக் காண்பித்தது. வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்த முள்ளை அவன் மெதுவாக எடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி, சிறிது நேரம் கழித்து கைது செய்யப்பட்டு, ரோம் நகருக்கு இட்டுச் செல்லப்பட்டான். அங்கு, அவனை ஒரு கூடத்தில் அவனை தூக்கியெறிந்து, சில காலம் முன் பிடிபட்ட ஒரு சிங்கத்தை அவன் மீது ஏவினார்கள். அந்த சிங்கமோ, அந்த அடிமை காப்பாற்றிய அதே சிங்கம் என்பதால், அதன் நன்றியுணர்வு தன்னை காத்தவனுக்குத் தீங்கு செய்ய மறுத்தது. பாருங்கள், செல்லப்பிராணிகள் மட்டுமில்லை சிங்கம் போன்ற காட்டு விலங்குகளும் கூட நன்றியுணர்வுடன் இருக்கின்றன. அமரத்துவம் கொடுக்கவல்ல அமுதத்தை உங்களுள் ஊற்றியுள்ள படைத்தவன் பால் நன்றியுடன் இருங்கள்! உங்களுக்கு பகுத்தறிவு, பற்றின்மை மற்றும் மதிப்பிட்டும் திறன் ஆகியவற்றை அளித்துள்ளதற்காக இறைவனிடம் நன்றியுடன் இருங்கள்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 25, 1964

Sai Inspires (Tamil Translation): 10th February 2013

A person once told Dr. Johnson, the famous English thinker, that he could seldom get time to recite the Name of God, what with the hundreds of things he had to do from morning till nightfall and even far into the night. Dr. Johnson replied with another question. He asked how millions of people found space to live upon the face of the earth, which is two-thirds water and the rest is too full of mountains, deserts, forests, icy regions, river beds, marshes and similar impossible areas. The questioner said that man somehow struggled to find living space. So too, said Dr. Johnson, man must somehow find a few minutes a day for prayer to the Lord. Keep the Name and Form of your choice ever in your consciousness. The Name must be as constant as breathing. And for this, practice is essential.

– Sathya Sai Speaks, Vol 1, MahaShivarathri, 1955

பிரசித்தமான சிந்தனையாளரான டாக்டர் ஜான்சனிடம் ஒருமுறை ஒருவர், தான் காலையிலிருந்து இரவு வரையும் அதனையும் தாண்டி இரவு வேளையிலும் செய்ய வேண்டிய நூற்றுக்கணக்கான வேலைகளின் நடுவே கடவுளின் பெயரை உச்சரிப்பதற்காகத் தனக்கு நேரம் கிடைப்பதில்லை என்று கூறினார். அதற்கு டாக்டர் ஜான்சன் மற்றொரு கேள்வியை பதிலாக அளித்தார். மூன்று பங்கு நீரினாலும், மற்ற இடங்கள் மலைகள், பாலைவனங்கள், காடுகள், பனிப்பிரதேசங்கள், ஆற்றுப் படுகைகள், சகதி மண்டலங்கள், அண்ட முடியாத இடங்கள் ஆகியவற்றால் ஆன இவ்வுலகில் எவ்வாறு கோடிக்கணக்கான மக்கள் தாம் வாழ்வதற்கான இடத்தை தேடித்பிடித்தனர் என்று அவர் கேட்டார். மனிதன் கஷ்டப்பட்டு எப்படியோ தான் வாழ்வதற்கு இடத்தைத் தேடித் பிடித்துள்ளான் என்று கேள்வி கேட்ட நபர் கூறினார். அதற்கு, அவ்வாறே மனிதன் ஒரு நாளில் சில மணித்துளிகளையாவது கடவுளுக்குப் பிரார்த்தனை செய்வதற்காக எப்படியோ தேடிப்பிடிக்க வேண்டும் என்று டாக்டர் ஜான்சன் கூறினார். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நாமத்தையும் உருவத்தையும் உங்கள் நினைவில் எப்பொழுதும் வைத்திருங்கள். நீங்கள் சுவாசிப்பதைப் போன்று நாமமும் இருக்க வேண்டும். இதனை நிலையைப் பெறுவதற்கு பயிற்சி மிகவும் அவசியமாகும்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி, 1955

Sai Inspires (Tamil Translation): 8th February 2013

A renunciant couple were once proceeding through a thick jungle on a pilgrimage to an inaccessible shrine. The husband saw on the footpath a precious stone, shining brilliantly when the Sun’s rays fell upon it from between the leaves. He hastily threw some sand over it with the movement of his foot, so that his wife may not be tempted to pick it up and become a slave to the tinsel. The wife saw the gesture and chided the husband for still retaining in his mind, a distinction between sand and gold. For her, both were the same. This habit of judging and labelling others is a prevalent practice today. What can you know of the inner working of another’s mind?

– Sathya Sai Speaks, Vol 1, MahaShivarathri 1955

துறவறம் பூண்ட தம்பதிகள் ஒருமுறை ஒரு அண்ட முடியாத கோயிலை நோக்கி ஒரு அடர்ந்த காட்டில் யாத்திரை மேற்கொண்டனர். கணவன் பாதையில் இலைகளின் நடுவே வந்த சூரியக் கதிர்களினால் பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு விலை மதிப்பான மனிக்கக்கல்லைக் கண்டான். தன் மனைவி அதனால் கவரப்பட்டு அதனை எடுத்துக் கொண்டு அந்த அல்பமான பொருளுக்கு அடிமையாகி விடக் கூடாது என்றெண்ணி, தன் காலால், அதன் மேல் அவசர அவசரமாக மணலைப் பரப்பினான். அவன் செயலைக் கண்ட அவன் மனைவி, அவன் மனதில் மண்ணிற்கும் பொன்னிற்கும் வித்தியாசம் கண்டதற்காகத் தன் கணவனைக் கடிந்து கொண்டாள். அவளுக்கு இரண்டுமே ஒன்றாகத்தான் இருந்தன. இந்நாளில் இவ்வாறாகப் பிறரை எடைபோடுவதும், அவர்கள் மேல் முத்திரைக் குத்துவதும் சகஜமாகிவிட்டன. மற்றவர்களின் மனதில் என்ன உள்ளது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி 1955

Sai Inspires (Tamil Translation): 7th February 2013

A lame man and a blind man became friends and they moved from one place to another, with the lame man riding on the shoulder of the blind. One day, the lame man saw a field of yellow cucumber and suggested to the blind man that they pick a few and eat their fill. The blind man asked, “Brother, have they fenced the crop?” The lame man said, “No!” The blind man said, “Then let us move on, you know there are sweet and bitter varieties – if these vegetables are left unguarded – they must be bitter!” The blind man, by his intellect, was able to discover that they were bitter even without tasting them. He used the intelligence to perceive the truth faster and clearer. Make the intellect the Master of your mind and you will not fail; you will fail only when the senses establish mastery over the mind. Clarify your intelligence through spiritual discipline.

– Divine Discourse, February 20, 1964

ஒரு முடவனும் குருடனும் நண்பர்களாகி, முடவன் குருடனின் தோள் மேல் ஏறி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு நாள், முடவன் ஒரு மஞ்சள் வெள்ளரி வளரும் வயலைக் கண்டு, சிலவற்றைப் பறித்து வயிறு நிறைய உண்ணலாம் என்று குருடனிடம் யோசனை அளித்தான். “சகோதரா, அந்தத் தோட்டத்தைச் சுற்றி வேலி போட்டுள்ளார்களா?”, என்று குருடன் வினவினான். “இல்லை”, என்றான் முடவன். “அவ்வாறானால், நாம் இதனை விடுத்துச் செல்லலாம். ஏனெனில், இனிப்பான, கசப்பான இருவகை வெள்ளரிகள் உள்ளான என்பதனை நீ அறிவாய் – இவை வேலியால் காப்பாற்றப்படாவிடில், அவை கசப்பானவையாக இருக்கும்!”, என்று குருடன் கூறினான். குருடன், தன் புத்திக்கூர்மையால் அவற்றை சுவைக்காமலே அவை கசப்பானவை என்பதை அறிந்தான். அவன் உண்மையை அறிவதற்குத் தன் புத்தியை விரைவாகவும் தெளிவாகவும் உபயோகித்தான். உங்கள் புத்தியை மனதின் எஜமானனாக ஆக்கினால் அது உங்களைத் தோற்றுப் போகாமல் காக்கும்; புலன்கள் உங்கள் மனதினை ஆண்டால் மட்டுமே நீங்கள் தோற்றுப் போய்விடுவீர்கள். ஆன்மீக கட்டுப்பாட்டால் உங்கள் புத்தியைத் தெளிவுபடுத்துங்கள்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 20, 1964

Sai Inspires (Tamil Translation): 3rd February 2013

A brahmin was once crossing a river bed, and some men were washing clothes. Finding a nice new silk shawl on his shoulder, they fell upon him in a group, shouting that it belonged to the palace and had been given to them to be washed, but had been stolen and not been traced. The poor brahmin screamed “Narayana, Narayana” when they rained blows on him. Immediately Lord Narayana rose from His seat, walked forward, stopped and returned to His seat! His surprised consort asked Him the reason for His strange behaviour. Lord Narayana said, “I wanted to help that poor brahmin who has fallen into a den of scoundrels, but he has started beating them blow for blow – My help is no longer needed!” Leaving everything to His will is truly the highest form of devotion and the easiest way to win His Grace.

– Sathya Sai Speaks, Volume I, Maha Shivarathri, 1955

ஒரு பிராமணர் ஒரு முறை ஒரு ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். அப்போது சில மனிதர்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அவர் தோள் மேல் இருந்த ஒரு பட்டுச் சால்வையைப் பார்த்து, அது அரண்மனைக்குச் சொந்தமானது என்றும், தம்மிடம் அதனை துவைப்பதற்காகக் கொடுக்கப்பட்டது என்றும், அது திருடுபோய் எங்கும் காணாது போய்விட்டது என்றும் கத்திக் கொண்டே அவர் மீது பாய்ந்தனர். அந்த ஏழை பிராமணர் தன் மேல் அடி விழும்போது, “நாராயணா, நாராயணா” என்று அலறினார். உடனே, பகவான் நாராயணன் தன் இருக்கையிலிருந்து எழுந்து, முன் சென்று, நின்று மீண்டும் இருக்கைக்கே வந்து சேர்ந்தார்! ஆச்சரியப்பட்ட தாயார் அவருடைய இந்த வினோதமான செயலுக்கான காரணத்தை வினவினார். பகவான் நாராயணர், “அந்த துஷ்டர்களின் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட அந்த ஏழை பிராமணரைக் காப்பாற்றுவதற்காகச் சென்றேன். ஆனால், தன் மேல் விழும் ஒவ்வொரு அடிக்கும் அவரே பதிலடி கொடுக்கத் துவங்கினார் – என் உதவி அவருக்குத் தேவைப்படவில்லை!” என்று கூறினார். அனைத்தையும் அவரது சங்கல்பத்திற்கு விட்டுவிடுவதே மிகவுயர்ந்த பக்தியும், அவருடைய அருளைப் பெறுவதற்கான எளிய வழியாகும்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹா சிவராத்திரி, 1955

Sai Inspires (Tamil Translation): 14th December 2012

Three fishes lived in a pond. One told the other two that the water was drying up and they should leave before it was too late. The first fish decided to leave the pond immediately, the second said it could save itself when the contingency arose and the third fish ignored it. In due course, the second and third fish were caught by a fisherman. The second fish managed to break through the net and escape, the third one resigned its fate to destiny. God of Death, Yama is the fisherman; unless early notice is taken of the process of drying to which the tank of one’s lifespan is subject, one gets caught. Migrate into the sea of Grace, which will not dry; or learn the art of breaking through the net of death. Discard sloth and slumber, denounce fanaticism and make yourself a dedicated servant of the Lord. Then all strength, joy and Grace will be showered on you.

– Divine Discourse, October 15, 1966

மூன்று மீன்கள் ஒரு குளத்தில் வாழ்ந்து வந்தன, அவற்றில் ஒன்று மற்ற இரண்டிடமும் நீர் வற்றிக் கொண்டிருப்பதாகவும், தாமதமாகும் முன்னர் அங்கிருந்து கிளம்ப வேண்டும் கூறியது. முதல் மீன் உடனேயே கிளம்ப முடிவு செய்தது. பிரச்சினை வரும் பொழுது தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதாகக் கூறி இரண்டாம் மீன் கூறிற்று. மூன்றாம் மீன் இதனை உதாசீனப்படுத்தியது. காலப் போக்கில், இரண்டாம் மற்றும் மூன்றாம் மீன்கள் ஒரு மீனவனால் பிடிக்கப்பட்டன. இரண்டாம் மீன் வலையைக் கிழித்துக் கொண்டுத் தப்பியது. மூன்றாவதோ தன் முடிவை விதி வசம் விட்டுவிட்டது. எமன் தான் மீனவன். தன் ஆயுட்காலம் எனும் குளத்தின் நீர் வற்றுவது எனும் செயலைப் பற்றி எச்சரிக்கையாக முதலிலிருந்தே செயல் புரியாவிடில் ஒருவர் மாட்டிக் கொள்வார். அருள் எனும் வற்றாத கடலில் குடியேறுங்கள். இல்லையெனில் மரணம் எனும் வலையை கிழித்து வெளிவரும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். சோம்பலைத் தவிர்த்து, வீம்பை விட்டுவிட்டு, உங்களைக் கடவுளிடம் அர்ப்பணித்துக் கொண்ட சேவகனாக மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வாறானால், அனைத்து பலமும், மகிழ்ச்சியும், அருளும் உங்கள் மீது பொழியப்படும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966