Tag Archives: Cinema of Life

Sai Inspires (Tamil Translation): 7th March 2013

Consider the example of a cinema; on the screen we see rivers in flood, engulfing all the surrounding land. Even though the scene is filled with flood waters the screen does not get wet by even a drop of water. At another time, on the same screen we see volcanoes erupting with flame, but the screen is not burnt. The screen which provides the basis for all these pictures is not affected by any of them. Likewise in the life of man, good or bad, joy or sorrow, birth or death, will be coming and going, but they do not affect the Soul (Atma). In the cinema of life, the screen is the Soul (Atma). It is Shiva, it is Shankara, it is Divinity. When one understands this principle, one will be able to understand, enjoy and find fulfillment in life.

– Divine Discourse, February 17, 1985

திரைப்படத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்; திரையின் மேல் வெள்ளப் பெருக்கெடுத்தோடும் ஆறுகள், சுற்றியிருக்கும் நிலத்தையெல்லாம் சூழ்வதாக நாம் காண்கிறோம். அந்தக் காட்சி முழுதும் வெள்ள நீரால் நிரம்பியிருந்தாலும், திரை அதனில் ஒரு நீர்த்துளியாலும் நனைவதில்லை. வேறொரு நேரம், அதே திரையில் எரிமலைகள் தீப்பிழம்புகளுடன் எழுவதைக் காண்கிறோம். ஆனால், திரை எரிந்து போவதில்லை. இவ்வனைத்து காட்சிகளுக்கும் ஆதாரமாக விளங்கும் திரை, இவற்றில் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. அதே போல, மனித வாழ்வில், நன்மையோ தீமையோ, மகிழ்ச்சியோ துயரமோ, பிறப்போ இறப்போ, வந்து போய்க்கொண்டிருக்கும். ஆனால், அவை ஆன்மாவை பாதிப்பதில்லை. வாழ்க்கையெனும் திரைப்படத்தில், ஆன்மாவே திரையாகும். அது சிவன், அது சங்கரன், அது தெய்வீகம் ஆகும். இந்தத் தத்துவத்தை ஒருவர் புரிந்து கொண்டால், அவர் வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்து நிறைவடைய முடியும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 17, 1985