Tag Archives: Concretization of Divine Grace

Sai Inspires (Tamil Translation): 15th March 2013

Repetition of God’s Name (japam) and meditation (dhyana) are the means by which you can accelerate the concretisation of Divine Grace, in the Name and Form you yearn for. The Lord has to and will assume the Form you chose, the Name you fancy and the way you want Him to be. Therefore do not change the Name and Form you adore mid-way; but select and stick to the One that pleases you most, whatever the difficulty you encounter or however long it takes! All agitations must cease one day, is it not? The dhyana of the Form and the japam of the Name – that is the only means for this task.

– Divine Discourse, February 23, 1958

கடவுளின் திருப்பெயரை ஜபித்தால் மற்றும் தியானம் ஆகியவை, நீங்கள் அடைய விழையும் திருப்பெயர் மற்றும் திருவுருவத்தின் அருளை அடைவதை விரைவாக்கும் சாதனங்கள் ஆகும். கடவுள் நிச்சயமாக நீங்கள் தேர்ந்தெடுக்கும் திருவுருவத்தில், நீங்கள் விரும்பும் திருப்பெயரைக் கொண்டு, நீங்கள் விரும்புமாறு எழுந்தருள்வார். ஆகையால் நீங்கள் வழிபடும் திருபெயரையும், திருவுருவையும் பாதி வழியில் விட்டுவிடாதீர்கள். ஆனால் உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் எந்தக் கஷ்டத்தை நேரிட்டாலும், எவ்வளவு தாமதமானாலும் அதனை விட்டுவிடாதீர்கள்! அனைத்து கலக்கங்களும் ஒரு நாள் நீங்க வேண்டுமில்லையா? திருவுருவ தியானமும், திருப்பெயர் ஜபமும் இதனை அடைவதற்கான சாதனங்கள் மட்டுமே.

– தெய்வீக உரை, பிப்ரவரி 23, 1958