Tag Archives: Contentment

Sai Inspires (Tamil Translation): 7th November 2012

All worldly pleasures are transient and temporary. Very often they result in sorrow and disappointment. You often experience loss, depression and confusion and have no contentment. Know that lack of contentment is the real loss (Asantrupto nijo nashtah). There is no limit to desires. One feels hungry, another is thirsty. If the thirsty man is offered water, he is not satisfied, he wants a cool drink. When he is given a cool drink, next he wants ice cream, and so on. He is not satisfied with anything. Realize that there is no end to desires for material things in the world. To get rid of these desires, one must turn their mind towards God. The purpose of human birth is to realise the inherent Divinity. That is the way to achieve contentment and lasting bliss. God alone is the source of enduring bliss.

– Divine Discourse, April 16, 1988

அனைத்து உலக இன்பங்களும் நிலையில்லாதவை, நிரந்தரமற்றவை. வெகுவாக அவை துயரத்திலும் ஏமாற்றத்திலும் தான் முடிவடைகின்றன. நீங்கள் அடிக்கடி இழப்பும், மனச்சோர்வும், குழப்பமும் கொண்டு, திருப்தியடையாமல் இருக்கிறீர்கள். அதிருப்தி தான் உண்மையான இழப்பு (அஸந்த்ருப்தோ நிஜோ நஷ்ட:) என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆசைகளுக்கு எல்லையே இல்லை. ஒருவன் பசியடைகிறான், வேறொருவர் தாகம் கொள்கிறான். தாகம் கொண்ட மனிதனுக்குத் தண்ணீர் அளிக்கப்பட்டால், அவன் அதனால் திருப்தி கொள்வதில்லை. அவன் குளிர்பானத்தை கேட்கிறான். அவனுக்கு ஒரு குளிர்பானத்தை அளித்தால், அதன் பிறகு அவன் ஐஸ்க்ரீமைக் கேட்கிறான். அவன் எதனாலும் திருப்தியடைவதில்லை. உலகப் பொருட்களின் மேல் கொள்ளும் ஆசைகளுக்கு முடிவே இல்லை என்பதனை நீங்கள் உணருங்கள். இந்த ஆசைகளை நீக்குவதற்கு, ஒருவர் தன் மனத்தைக் கடவுள் பால் திருப்ப வேண்டும். மனிதப் பிறவியின் குறிக்கோள், உள்ளுறையும் தெய்வீகத்தை உணர்வதே ஆகும். அதுவே திருப்தி மற்றும் நீங்காத ஆனந்தத்தைப் பெறும் வழியாகும். கடவுள் மட்டுமே நிலையான ஆனந்தத்தின் ஊற்றாக உள்ளார்.

– தெய்வீக உரை, ஏப்ரல் 16, 1988

Sai Inspires (Tamil Translation): 27th August 2012

Bhagavan Sri Sathya Sai Baba

With a little reasoning you can know for yourself the path you need to take, thereafter, it can be trodden step by step until the goal is reached. Whatever be the path, retain this knowledge that attachment causes pain and detachment results in joy. But you cannot easily detach yourself from activity; the mind clings to something or other. Make it cling to God, let it do all things for God and leave the success or failure, the loss and the profit, the elation or the dejection, to God. Then you have the secret of peace and contentment. To get this attitude of surrender and dedication, you must have Faith in God. God, whose play this world is. This world is not an empty dream; it has a purpose and use. It is the means by which one can discover God. See Him in the beauty, the grandeur, the order and the majesty of Nature.

– Sathya Sai Speaks, March 28, 1965

சிறிதளவு விசாரம் செய்தாலே நீங்கள் நடக்க வேண்டிய பாதையை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதன் பின், குறிக்கோளை எட்டும் வரை அடி அடியாக அந்தப் பாதையில் நீங்கள் நடக்கலாம். பாதை எதுவாக இருந்தாலும், பற்றுதல் வலி அளிக்கும் மற்றும் பற்றின்மை மகிழ்ச்சி அளிக்கும் எனும் அறிவை நீங்கள் தக்க வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் உங்களைச் செயல்படுவதிலிருந்து விலக்கிக் கொள்ள முடியாது. மனம் எதன்மேலாவது சார்ந்தே இருக்கும். அதனை கடவுளின் மேல் சார்ந்திருக்கும் படிச் செய்யுங்கள். அது அனைத்துச் செயல்களையும் கடவுளுக்காகச் செய்யட்டும். வெற்றியோ தோல்வியோ, இலாபமோ நஷ்டமோ, மகிழ்ச்சியோ துக்கமோ அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிடட்டும். அவ்வாறானால் உங்களிடம் அமைதி மற்றும் மனநிறைவுக்கான இரகசியம் இருக்கும். சரணாகதி மற்றும் அர்ப்பணிப்பு உள்ள இந்த மனப்பாங்கை அடைவதற்கு உங்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும். கடவுளின் விளையாட்டே இவ்வுலகம். இந்த உலகம் ஒரு வெற்றுக் கனவல்ல. அதற்கு ஒரு நோக்கமும் பயனும் உள்ளது. ஒருவர் கடவுளை கண்டுகொள்வதற்கு அது ஒரு உபாயமாகும். இயற்கையின் அழகிலும், சிறப்பிலும், ஒழுங்கிலும், கம்பீரத்திலும் அவரைக் காணுங்கள்.

– சாயி அருளமுதம், மார்ச் 28, 1965