Tag Archives: Cordiality

Sai Inspires (Tamil Translation): 19th July 2013

Bhagavan Sri Sathya Sai Baba

For you to relish the dish (pappu) it must have enough salt (uppu). But if you add a little extra, it spoils the dish. So too, life becomes very difficult to bear, if you have too much of desire. Limit your desires to your capacity and even among them, have only those that will grant you lasting joy. Do not run after fashion and public approval and strain your resources beyond repair. Also stick to your own code of conduct (Dharma) that regulates your life or the stage you have reached. Do not place your needs and joy first. Consider the joy of others as more important than your own. Respect elders and cultivate cordiality between brothers and sisters, teachers and students, employers and employees. Respect the culture of your land and bring honour to the land you were born in and live in. Nourish your parents, revere them. If you do so, the Lord of the Universe will guard you against harm.

– Divine Discourse, August 19, 1964

உணவை (பருப்பை) சுவைக்க வேண்டுமெனில் தேவையான அளவு உப்பைச் சேர்க்க வேண்டும். சிறிதளவு அதிகமாக இருந்தாலும் அது உணவின் சுவையைக் குலைத்துவிடும். அதே போல, அளவுக்கதிகமான ஆசைகள் இருந்தால் வாழ்வது கஷ்டமாகிவிடும். உங்கள் தகுதியைப் பொறுத்து ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அவற்றிலும், உங்களுக்கு நிலையான சுகமளிப்பவற்றை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நவநாகரிகம் மற்றும் படாடோபம் ஆகியவற்றின் பின்னல் ஓடி உங்கள் வளங்களை சரி செய்து கொள்ள முடியாதவாறு சோர்வுற வைக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையையும், நீங்கள் தற்போது உள்ள நிலையையும் சீராக்கும் உங்கள் சுயதர்மம் எனும் சீலாசாரத்தைக் கெட்டியாகப் பின்பற்றுங்கள். உங்கள் தேவைகளுக்கும் மகிழ்ச்சிக்கும் முதலிடம் அளிக்காதீர்கள். உங்கள் மகிழ்ச்சியை விட பிறருடைய மகிழ்ச்சியை முக்கியமாகக் கருதுங்கள். பெரியோரை மதித்து, சகோதர சகோதரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், வேலை அமர்த்துனர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் மத்தியில் இணக்கத்தைப் பேணுங்கள். உங்கள் தேசத்தின் பண்பாட்டை மதித்து, நீங்கள் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டிற்கு பெருமை சேருங்கள். உங்கள் பெற்றோரைப் பேணி வணங்குங்கள். நீங்கள் அவ்வாறிருந்தால், பிரபஞ்சத்தின் தலைவரான கடவுள் உங்களைத் தீங்கிலிருந்து காப்பாற்றுவார்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 19, 1964