Tag Archives: Criticism should encourage

Sai Inspires (Tamil Translation): 27th February 2013

Do not be carried away by the cynicism of critics – that should serve only to encourage you. Examine the faults that may lie dormant in you and work sincerely to get rid of them. Do not merely give platform speeches on the excellence of qualities such as charity, service, sympathy, equality, secularism, etc. Descend from the platform and practise at least a few ideals sincerely. When your neighbour is in the throes of a serious illness, do not rest content with the idea that you are happily free. You are not free if even one is suffering or bound. Remember that the food you give to each living being reaches the Supreme Divine Himself, the service you do to any being, anywhere in the globe, fills the Lord with joy.

– Divine Discourse, 25 February 1964

விமர்சனம் செய்பவர்களின் ஏளனத்தைக் கண்டு வருத்தப்படாதீர்கள். அது உங்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும். உங்களுள் ஆழப்பதிந்திருக்கும் குறைகளை ஆராய்ந்து, அவற்றை நீக்குவதற்காக நேர்மையாகப் பாடுபடுங்கள். தான-தர்மங்கள், சேவை, பரிவு, சமத்துவம், சமயசார்பின்மை ஆகிய நற்குணங்களின் உயர்வைப் பற்றி மேடைகளில் பேசிக்கொண்டு மட்டும் இருக்காதீர்கள். மேடையிலிருந்து இறங்கி சிலவற்றையாவது நேர்மையுடன் கடைப்பிடியுங்கள். உங்கள் அண்டைவீட்டுக்காரர் தீவிர நோயினால் அவதியுறும் பொழுது, நீங்கள் மட்டும் நிம்மதியாக இருப்பதாக திருப்தியடையாதீர்கள். பிறர் துயருற்றிருக்கும் பொழுது நீங்கள் நிம்மதியாக இருக்க முடியாது. ஒவ்வொரு ஜீவனுக்கும் நீங்கள் அளிக்கும் உணவு பரம்பொருளையே சென்றடைகிறது என்பதனையும், உலகில் எந்த இடத்திலும், எந்த ஜீவனுக்கும் நீங்கள் செய்யும் சேவை கடவுளை மகிழ்ச்சியால் நிறைக்கிறது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.

– தெய்வீக உரை, 25 பிப்ரவரி 1964