Tag Archives: daily

Sai Inspires (Tamil Translation): 26th June 2012

There is no scar on the sky, though clouds, stars, the sun and the moon all appear to streak across it. So too let a thousand ideas streak across the mind, ensure that your mind remains unaffected and serene. Get firm in mind; then, your reason also will not deviate. Without that equanimity or shanthi, you can get no soukhyam (happiness). Saint Kabir had no food for three days – but he thanked God for giving him the coveted chance of observing a ritual fast. The great devotee of Rama, Saint Ramadas was confined in prison – and he thanked God that he got a place where he could meditate on Him without disturbances. Such is the attitude of the saintly, those who are the beloved of the Lord.

– Divine Discourse, May 23. 1965

மேகங்களும், சூரியனும், சந்திரனும் வானத்தின் மீதுள்ள கீற்றுகளாகத் தோன்றினாலும், வானில் எந்த வடுவும் இல்லை. அதே போல, ஓராயிரம் எண்ணங்கள் உங்கள் மனத்தில் கீற்றல்களாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் மனம் பாதிக்கப்படாமல் அமைதியாக இருக்கட்டும். உங்கள் மனதை திடமாக்குங்கள். அப்பொழுதுதான் உங்கள் எண்ணங்களும் பிறழாமல் இருக்கும். அந்த சமத்துவமும் அமைதியும் இல்லாவிடில் உங்களுக்கு சௌக்கியம் (மகிழ்ச்சி) கிடைக்காது. மகான் கபீர் மூன்று நாட்களுக்கு உணவருந்தாமல் இருந்தார் – ஆனால் ஆவலுடன் அடைய விரும்பும் உண்ணா நோன்பிற்கான வாய்ப்பை அளித்தமைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். இராமரின் மஹாபக்தரான மகான் இராமதாசர் சிறையில் அடைக்கப்பட்டார் – தொந்தரவுகளே இல்லாது அவர் மீது தியானம் செய்யத்தக்க இடத்தைப் பெற்றமைக்கு அவர் கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். கடவுளின் அன்பிற்குப் பாத்திரமான மகான்களின் மனப்பாங்கு அவ்வாறானது.

– தெய்வீக உரை, மே 23, 1965