Tag Archives: Deliverance

Sai Inspires (Tamil Translation): 3rd December 2012

https://i0.wp.com/media.radiosai.org/sai_inspires/2012/uploadimages/SI_20121203.jpg

Turn the key in the lock to the left, it locks. Turn it to the right, it opens. So too, turn your mind towards the objective world, it gets locked, caught and deeply entangled. Turn it to the right, steer it away from the objects of senses, and the lock opens up, you are free and deliverance is in your hands! How to turn your mind to the right? Begin with remembering the Lord’s Holy Name (Naamasmarana) as your first step. A big and long journey begins with the first step. The first step itself will take you through to the second and third, and ultimately to realizing your destination or goal.

– Divine Discourse, February 3, 1964

பூட்டின் சாவியை இடது பக்கம் திருப்பினால், அது பூட்டப்படும். அதனை வலப்பக்கம் திருப்பினால், அது திறந்துவிடும். அதே போல, உங்கள் மனதை பொருள் சார்ந்த உலகின் பக்கம் திருப்பினால், அது பூட்டப்பட்டு, ஆழமாக மாட்டிக் கொள்கிறது. அதனை வலப்பக்கம் திருப்பி, புலன் சார்ந்த பொருட்களிடமிருந்து திருப்பினால், பூட்டு திறக்கப்பட்டு நீங்கள் விடுவிக்கப்பட்டு, உங்கள் விடுதலை உங்கள் கைகளில் இருக்கும்! மனதை வலப்புறம் திருப்புவது எப்படி? கடவுளின் புனிதமான திருநாமத்தை நினைவில் கொள்வதை (நாமஸ்மரணம்) முதல் அடியாகக் கொண்டு துவங்குங்கள். நீண்ட பயணம் என்பது முதல் அடியிலிருந்து தான் துவங்குகிறது. முதல் அடியே உங்களை இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகளுக்கு இட்டுச் சென்று, முடிவாக நீங்கள் சேருமிடத்தையும் குறிக்கோளையும் அடையச் செய்யும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 3, 1964

Sai Inspires (Tamil Translation): 24th July 2012

It is the mind that weaves a pattern called “I” – the process by which it establishes the ego and elaborates it into a multitude of shackles which is called delusion. The mind prompts the senses to project into the outer world of objects, for it builds up notions of pleasure and pain, of joy and grief and constructs a whole array of urges and impulses. It resists all attempts to escape into the Eternal, Universal, and the Absolute. It protests when the individual is eager to become conscious of one’s identity. But when it finds that the individual is determined to oppose its tactics, it surrenders and disappears without a trace! Diminish your desires – you will be free from delusion. Desire comes from attachment – deliverance comes from detachment!

– Divine Discourse, March 27, 1966

மனம் அகம்பாவத்தை ஏற்படுத்தி, அதனை மாயைத் தளைகளாக விரிவடையச் செய்வதன் மூலம், “நான்” என்கிற அமைப்பைத் தானே  நிறுவுகிறது. சுகம் – வலி மற்றும் மகிழ்ச்சி – வருத்தம் ஆகிய எண்ணங்களைத் தோற்றுவித்து, உந்துதல்கள் மற்றும் தூண்டுதல்களை உருவாக்குவதால், மனம் புலன்களை வெளியுலக பொருட்களின் மேல் சார்ந்திருக்கத் தூண்டுகிறது. என்றும் நிலைத்திருக்கும், பிரபஞ்சம் தழுவிய, முழுமையினுள் தப்பிப்பதற்கான முயற்சிகளை அது தடுக்கிறது. ஒருவர் தன் உண்மை அடையாளத்தை உணர முற்படும்போது அது எதிர்க்கிறது. தன் தந்திரங்களை எதிர்க்க ஒருவர் உறுதியாக இருக்கிறார் என்பதை அறிந்ததும், அது சரணடைந்து, சுவடே இல்லாமல் மறைந்துவிடுகிறது! உங்கள் ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் – நீங்கள் மாயையிலிருந்து விடுபடுவீர்கள். ஆசை பற்றுதலிலிருந்து வருகிறது – விமோசனம் பற்றுதலின்மையிலிருந்து வருகிறது.

– தெய்வீக உரை, மார்ச் 27, 1966