Tag Archives: delusion

Sai Inspires (Tamil Translation): 16th July 2013

Bhagavan Sri Sathya Sai Baba

In the dark night, the Moon can be seen through its own light only. The Lord is all Love, so He can be seen only through Love. He is Sathyam and Nithyam (Truth and Eternal), and is beyond all falsehood (Mithya). When the dust settles upon the glass of the lantern, it dims its light. Attachment to sensual objects and to the pleasure they give (Vyamoha) is the soot that dims the light of love in your heart. Remove the delusion and the fact that you have become old or diseased, or that you are weak and debilitated. Do not count the years and grieve over advancing age and shudder like cowards afraid of death. Remember, despondency is hell, elation is heaven. Have always some work to do and do it so well that it grants you joy!

– Divine Discourse, September 3, 1958

நள்ளிரவில் நிலவை, அதன் ஒளியின் மூலம் தான் காண இயலும். கடவுள் முழுதும் அன்பால் நிறைந்துள்ளார். ஆகையால் அவரை அன்பின் மூலம் தான் காண முடியும். அவர் சத்யம் மற்றும் நித்யமானவர் (உண்மை மற்றும் சாஸ்வதமானவர்). அவர் பொய்மைக்கு (மித்யத்திற்கு) அப்பாற்பட்டவர். விளக்கின் கண்ணாடிக் கூட்டின் மேல் தூசி படியும் பொழுது, அது அதன் ஒளியைக் குறைக்கிறது. புலன் சார்ந்த பொருட்களின் மீதும், அவை அளிக்கும் சுகங்களின் (வ்யாமோஹத்தின்) மீதும் உள்ள பற்றுதல் தான் உங்கள் இதயத்திலுள்ள அன்பின் ஒளியைக் குறைக்கும் புகைக்கரிக்கறையாக உள்ளது. மாயையையும், வயோதிகம் அடைந்துள்ளோம், வியாதியால் பீடிக்கப்பட்டுள்ளோம், பலவீனமாக உள்ளோம் அல்லது தளர்ந்துள்ளோம் என்ற எண்ணத்தையும் விலக்குங்கள். வருடங்களைக் கணக்கிட்டு, வயது முதிர்வதைக் கண்டு துயருற்று, கோழைகளைப் போல் மரணத்தைக் கண்டு அஞ்சிடாதீர்கள். மனச்சோர்வு நரகம் என்பதனையும், குதூகலம் ஸ்வர்க்கம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். செய்வதற்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலையை வைத்துக் கொள்ளுங்கள். அதனை உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நன்றாகச் செய்யுங்கள்.

– தெய்வீக உரை, செப்டம்பர் 3, 1958

Sai Inspires (Tamil Translation): 15th November 2012

Step by step, you reach the end of the road. One act followed by another leads to a good habit. Listening over and over again, you get prodded into action. Resolve to act, to mix only in good company, to read only elevating books and to form the habit of remembering the Lord’s name (Naamasmarana), then ignorance will vanish automatically. The Divine Bliss that will well up within you by the contemplation of the lord who is Bliss Personified, will drive out all grief and worry. Move forward towards the Light and the shadow falls behind; move away from it and you have to follow your own shadow. Go every moment one step nearer to the Lord and then maya (illusion) which is the shadow will fall back and will not delude you at all.

– Divine Discourse, 11 February, 1964

ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நீங்கள் ஒரு சாலையின் முடிவினை அடைய முடியும். ஒரு செயலுக்குப் பின்னர் மற்றொரு செயல் தொடரும் பொழுது இவ்வாறாக அது ஒரு நல்ல பழக்கமாகவே மாறிவிடுகிறது. மீண்டும் மீண்டும் கேட்டுக் கேட்டு நீங்கள் செயல் புரியத் தூண்டப்படுவீர்கள். செயல் புரிவதற்கும், நல்லோரிடம் சேர்வதற்கும், உயர்த்தும்படியான புத்தகங்களைப் படிப்பதற்கும், கடவுளின் நாமத்தை எப்பொழுதும் நினைவில் கொள்வதற்கும் (நாமஸ்மரணை) நீங்கள் உறுதி பூண்டால், அஞ்ஞானம் தானாகவே விலகிவிடும். கடவுளின் மேல் நினைவை நிறுத்துவதன் மூலம் உங்களில் தோன்றும் தெய்வீக ஆனந்தமானது அனைத்துத் துயரங்களையும், கவலைகளையும் துரத்திவிடும். ஒளியை நோக்கி முன்னேறினால் நிழல் பின்புறம் தான் விழும். அதனிடமிருந்து விலகினால், நீங்கள் உங்களுடைய நிழலையே பின்பற்ற வேண்டியிருக்கும். நீங்கள் ஒவ்வொரு கணமும் கடவுளின் பால் முன்னேறினால், நிழலாகிய மாயை பின்புறம் விழுந்து, உங்களை ஏமாற்றாது.

– தெய்வீக உரை, 11 பிப்ரவரி, 1964

Sai Inspires (Tamil Translation): 9th August 2012

The Universe is saturated with Divinity; there is nothing here which is not Divine. Always remember that God is the Base as well as the Superstructure, the inner motive and the outer movement. The body is the temple of the Lord; the atmosphere of this temple is by its very nature filled with love for all beings. The scriptures clearly declare that this understanding can be achieved through performing one’s duty, and then worshipping the Lord by dedicating to Him this duty. One’s intelligence is cleared of the dust of doubt and delusion, through dutifulness and dedication.

– Sathya Sai Speaks, Volume 6, Chapter 13

பிரபஞ்சம் தெய்வீகத்தால் நிறைந்துள்ளது; இங்கு தெய்வீகமற்ற எதுவும் இல்லை. கடவுள் தான் அடித்தளமும், மேலுள்ள உயர்கட்டமைப்பும், உள்ளுந்துதலும், வெளி அசைவும் என்பதனை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். உடல் கடவுளின் ஆலயம்; இந்த ஆலயத்தின் சூழல் இயல்பாகவே அனைத்து உயிர்களின் மேலும் உள்ள அன்பினால் நிறைந்திருக்கிறது. கடமையைச் செய்து, கடவுளுக்கு இந்தக் கடமையை அர்ப்பணித்து அவரை வழிபடுதலின் மூலம் இந்த உணர்வினைப் பெறமுடியும் என்பதனைப் புனித நூல்கள் தெளிவாக பறைசாற்றுகின்றன. கடமையுணர்வு மூலமும், அர்ப்பணிப்பு மூலமும், சந்தேகம் மற்றும் மாயையின் தூசியிலிருந்து ஒருவரது அறிவாற்றல் தெளிவடைகிறது.

– சாயி அருளமுதம், பாகம் 6, அத்தியாயம் 13

27th February 2012

 

அனைத்து ஜீவாராசிகளும் தெய்வீகமே, கடவுள் அவர்களின் இதயத்தில் உள்ளார். ஆயினும் இவர்கள் பந்தப்பட்டு, மகிழ்ச்சியற்று, குறுகி, பலஹீனமாக, குழப்பத்தில் உழல்கிறார்கள். ஏன்? இவ்வாறாக கற்பனைசெய்துகொண்டு, அதனால் அவர்களின் கற்பனையின் ஊற்றாகிய மனதினால் வடிவேற்றப்படுகிறார்கள். தங்களது உண்மையை அறியாமல் இருக்கிறார்கள். இந்த மாயையிலிருந்து அவர்கள் எவ்வாறு விடுபடமுடியும்? ஒரு இரயில் வண்டியை நீங்கள் கடக்கவேண்டுமானால், ஒரு காரில் வேகமாகப் பயணிக்கவேண்டும் அல்லது ஒரு விமானத்தில் ஏறவேண்டும். இரயில் வண்டியைவிட மெதுவாக செல்லும் வண்டி அதற்கு உதவாது. அதேபோல, உங்கள் மனக்குழப்பத்தைக் கடப்பதற்கு, நீங்கள் உங்களை தெய்வத்துவத்துடன் சேர்த்து வைக்க வேண்டும். மனதினால் ஏற்பட்ட மானவ (மனித) சக்தியின் குழப்பம் தெய்வசக்தியினால் மட்டும்தான் கடக்கப்பட முடியும். தெய்வசக்தியை அடைவதற்கு வழிவகுக்கும் ஒரு பிரார்த்தனையே காயத்ரி மந்த்ரம் ஆகும்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 25, 1965