Tag Archives: detachment

Sai Inspires (Tamil Translation): 21st September 2013

Bhagavan Sri Sathya Sai Baba

Repentance saves even sinners from perdition. No ceremony of expiation is as effective as sincere repentance. The shopkeeper may give short measure at times, but he will never accept less money; the bill always has to be settled in full. Pay it through repentance. You cannot deceive the Lord with insincerity. Unless you correct yourself through detachment and sacrifice, you cannot reach God. The Lord can be understood, only if you approach Him, develop attachment to Him, have unswerving loyalty to Him and have full faith in Him. You will easily understand Him when you feel that you are but the instrument and He wills every little movement, everywhere. Give up egoism in full, and develop faith. Then you can most certainly see Him.

– Divine Discourse, October 12, 1964

கழிவிரக்கம், பாவிகளையும் நரகத்திலிருந்து காப்பாற்றும். நேர்மையான கழிவிரக்கத்தை விடவும் ஆற்றல் வாய்ந்த பிராயச்சித்தம் எதுவும் கிடையாது. கடைக்காரர் உங்களுக்குச் சில சமயம் பண்டங்களைக் குறைந்த அளவில் அளிப்பதுண்டு, ஆனால் அவர் என்றைக்கும் குறைந்த அளவில் பணம் பெற்றுக் கொள்வதில்லை; விலைவிவரத்தின் படி கண்டிப்பாக முழுப் பணமும் செலுத்தப்பட வேண்டும். அதனைக் கழிவிரக்கத்தின் முலம் செலுத்துங்கள். கடவுளை உங்கள் வஞ்சகத்தால் ஏமாற்ற முடியாது. பற்றின்மை மற்றும் தியாகத்தால் உங்களைத் திருத்திக் கொள்ளும் வரை நீங்கள் கடவுளை அடைய முடியாது. நீங்கள் அவரை அணுகி, அவரின் மேல் பற்றுதலைப் பேணி, அவரிடம் அசையாத விசுவாசம் கொண்டு, அவர் மேல் பூரண நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் கடவுளை புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அவருடைய கருவி மட்டுமே என்பதையும், எவ்விடத்திலும், அவருடைய சங்கல்பத்தினாலேயே ஒவ்வொரு சிறிய அசைவும் நிகழ்கிறது என்பதையும் நீங்கள் உணர்ந்தால், அவரை எளிதில் புரிந்து கொள்ளலாம். அஹங்காரத்தை முழுமையாகத் தொலைத்துவிட்டு, நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். பின்பு, அவரை நீங்கள் நிச்சயமாகக் காணலாம்.

– தெய்வீக உரை, அக்டோபர் 12, 1964

Sai Inspires (Tamil Translation): 11th July 2013

A millionaire pays income tax with tears in his eyes. A Headmaster joyfully gives up the furniture and laboratory appliances of the school when he is transferred to another place. Why? Because the headmaster knows and believes that he is only the caretaker, and is not the owner. They are not attached to these articles, for they know that these belong to the Government. So too, every one of you must feel that your family, your house, your fields, your car are all the Lord’s property. You are just a trustee and must be ready to give them up without murmur, at a moment’s notice. Sacrifice does not mean that you should not attach value to things. You must indeed care for everything. But remember, that all of them are transient and the joy they give is very trivial and temporary. Know their real worth, do not overestimate them and develop attachment to them.

– Divine Discourse, Aug 19, 1964

ஒரு கோடீஸ்வரன் கண்ணீருடன் வருமான வரி கட்டுகிறான். ஒரு பள்ளித் தலைமையாசிரியர், வேறொரு பள்ளிக்கு மாற்றலாகிப் போகும் பொழுது, பள்ளியின் மேஜை நாற்காலிகளையும் மற்றும் சோதனைச் சாலையிலுள்ள உபகரணங்களையும் மகிழ்ச்சியுடன் விடுத்துச் செல்கிறார். ஏன்? ஏனெனில், தலைமையாசிரியர் அவற்றிற்குத் தான் வெறும் காப்பாளர் சொந்தக்காரர் இல்லை என்று அறிவார். அவர்கள் இப்பொருட்களின் மேல் பற்றுதல் கொள்வதில்லை. ஏனெனில் அவை அரசாங்கத்திற்குச் சொந்தமானவை என்று அவர்கள் அறிவார்கள். அதே போல, நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் குடும்பம், உங்கள் வீடு, உங்கள் வயல்கள் மற்றும் உங்கள் வாகனம் ஆகியவையனைத்தும் கடவுளின் சொத்து என்றுணர வேண்டும். நீங்கள் வெறும் காப்பாளர் தான். அறிவிப்பு கிடைத்த அக்கணமே அவற்றை எவ்வித முணுமுணுப்பும் இல்லாமல் விடுத்து வர நீங்கள் தயாராக இருக்க வேண்டும். தியாகம் என்றால் நீங்கள் பொருட்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்று பொருளல்ல. நீங்கள் அனைத்தின் மேலும் அக்கறை கொள்ள வேண்டும். ஆனால், அவையனைத்தும் நிலையற்றவை என்பதையும், அவையளிக்கும் மகிழ்ச்சி அற்பமானது மற்றும் நிரந்தரமற்றது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அவற்றின் உண்மை மதிப்பைத் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றை அதிகமாக மதிப்பிட்டு அவற்றின் பால் பற்றுதல் கொள்ளாதீர்கள்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 19, 1964

Sai Inspires (Tamil Translation): 28th February 2013

Everyone must make their exit someday – that moment should not be one of anguish; one must depart with a smile and a bow. In order to accomplish that, a lot of preparation is necessary. Leaving all that has been accomplished and accumulated during a long lifetime is a very hard task. So prepare for it from now, by discarding attachment to one thing after another. You see many things in your dreams, and you may even acquire power and position. When you awaken, you do not cry over the loss of those, even though they were very real and gave you real joy and satisfaction during your dream. You tell yourself, “It was just a dream” and move on with life! What prevents you from treating with similar nonchalance, all the possessions you gather during the waking state? Cultivate that attitude and depart with a smile, when the curtain is drawn!

– Divine Discourse, August 1, 1956

அனைவரும் என்றாவதொரு நாள் வெளியேறியாக வேண்டும் – அத்தருணம் வருத்தமானதாக இருக்கக் கூடாது; புன்முறுவலுடனும் பணிவுடனும் வெளியேற வேண்டும். அவ்வாறு இருப்பதற்கு, மிகவும் அதிகமான பயிற்சி தேவைப்படுகிறது. வாழ்நாள் முழுதும் பெற்றுத் சேமித்து வைத்தவற்றை விட்டுவிடுவதென்பது மிகக் கடினமான செயலாகும். ஆகையால், அதற்காக இப்பொழுதிருந்தே, பொருட்களின் மேலுமுள்ள பற்றை ஒவ்வொன்றாகத் துறந்து  ஆயத்தமாகுங்கள். உங்கள் கனவுகளில் நிறைய பொருட்களைக் காண்கிறீர்கள். அதிகாரமும் பதவியும் கூடப் பெறக் கூடும். ஆனால், உங்கள் உறக்கம் கலைந்ததும் இவை உங்களுக்கு கனவில் உண்மையாகத் தோன்றி, உங்களுக்கு உண்மையான மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளித்திருந்தாலும் இவற்றை இழந்ததைப் பற்றி நீங்கள் அழுவதில்லை. “இது ஒரு கனவு தான்”, என்று நீங்களே உங்களிடம் சொல்லிக் கொண்டு, வாழ்கையை நடத்துகிறீர்கள்! நீங்கள் விழிப்பு நிலையில் இருந்த பொழுது சம்பாதித்த அனைத்தையும் அதே போன்று பற்றில்லாமல் இருக்க முடியாது? அந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு, திரை மூடும் பொழுது புன்முறுவலுடன் வெளியேறுங்கள்!

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956

Sai Inspires (Tamil Translation): 23rd February 2013

Have you not heard the story of the lion suffering from a wound in the foot? A slave who was fleeing through the forest saw it and when he approached it with sympathy, the lion put out its paw. He then slowly pulled out the thorn that had caused all that pain and left the place, only to be arrested later and taken to Rome. There, they decided to throw him into the amphitheatre and let loose upon him a lion that had been recently captured. It was, however, the same lion which the slave had saved and so, its gratitude did not allow it to harm its saviour. See, even animals exhibit gratitude, not only the pet animals, but even the wild ones like the lion. Express your gratitude to the Creator who has poured into you nectar that grants immortality! Be grateful to the Lord for endowing you with powers of discrimination, detachment and evaluation.

– Divine Discourse, February 25, 1964

காலில் பட்ட அடியினால் அவதிப்பட்ட சிங்கத்தின் கதையை நீங்கள் கேட்டதில்லையா? காட்டில் தப்பியோடிக்கொண்டிருந்த அடிமையொருவன் அதனை பார்த்ததும், அதனை பரிதாபத்துடன் அணுகியபோது அந்த சிங்கம் தன் காலைக் காண்பித்தது. வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்த முள்ளை அவன் மெதுவாக எடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி, சிறிது நேரம் கழித்து கைது செய்யப்பட்டு, ரோம் நகருக்கு இட்டுச் செல்லப்பட்டான். அங்கு, அவனை ஒரு கூடத்தில் அவனை தூக்கியெறிந்து, சில காலம் முன் பிடிபட்ட ஒரு சிங்கத்தை அவன் மீது ஏவினார்கள். அந்த சிங்கமோ, அந்த அடிமை காப்பாற்றிய அதே சிங்கம் என்பதால், அதன் நன்றியுணர்வு தன்னை காத்தவனுக்குத் தீங்கு செய்ய மறுத்தது. பாருங்கள், செல்லப்பிராணிகள் மட்டுமில்லை சிங்கம் போன்ற காட்டு விலங்குகளும் கூட நன்றியுணர்வுடன் இருக்கின்றன. அமரத்துவம் கொடுக்கவல்ல அமுதத்தை உங்களுள் ஊற்றியுள்ள படைத்தவன் பால் நன்றியுடன் இருங்கள்! உங்களுக்கு பகுத்தறிவு, பற்றின்மை மற்றும் மதிப்பிட்டும் திறன் ஆகியவற்றை அளித்துள்ளதற்காக இறைவனிடம் நன்றியுடன் இருங்கள்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 25, 1964

Sai Inspires (Tamil Translation): 12th February 2013

Detachment (vairagya) is a result of the Lord’s Grace; it needs years of yearning and struggle. Meanwhile begin today with the first step, which is cleansing of your mind and cultivation of virtues. Even if you are unable to start or follow these, at least do not laugh at those who do and discourage them. Do not depend upon others for doing your work or have someone attend to your personal wants. Do them yourself – that is the mark of being truly self-reliant and free! Never accept anything free from anyone. You must pay it back, in service or work. Thus, you will make yourselves self-respecting individuals. Receiving a favour means getting bound to the giver. Grow in self-respect and dignity. That is the best service you can do to yourself.

– Sathya Sai Speaks, Vol I, MahaShivarathri, 1955

கடவுளின் அருளினால் வைராக்கியம் பெறப்படுகிறது; வருடக்கணக்கான விழைதலும் போராட்டமும் அதற்குத் தேவைப்படுகிறது. மனதைத் தூய்மைப்படுத்தி, நற்குணங்களை வளர்ப்பது  எனும் முதல் அடியினை இன்றே எடுத்து வையுங்கள். உங்களால் இதனைத் துவங்க முடியவில்லையென்றாலும் இதனைச் செய்யும் பிறரை ஏளனப்படுத்தாமலும் அதைரியப்படுத்தாமலுமாவது இருங்கள். உங்கள் வேலையைச் செய்வதற்கும், உங்களுக்குக்காக வேலை செய்வதற்கும் பிறரைச் சார்ந்திருக்காதீர்கள். அவற்றை நீங்களே செய்யுங்கள் – அதுவே உண்மையில் தற்சார்புடன் இருப்பதற்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் உண்மையான அடையாளமாகும்! யாரிடமிருந்தும் எதனையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளாதீர்கள். ஒரு சேவையாலோ அல்லது ஏதோவொரு செயலாலோ நீங்கள் அவர்களுக்குத் திருப்பித் தாருங்கள். இவ்வாறு, உங்களை நீங்கள் சுயமரியாதை கொண்டவர்களாக ஆக்கிக்கொள்வீர்கள். ஒருவரிடமிருந்து ஒரு உபகாரத்தை நீங்கள் பெற்றுக்கொள்வது கொடுத்தவருடன் உங்களை கட்டுண்டிருக்கச் செய்கிறது. சுயமரியாதையையும், கண்ணியத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளும் மிகவுயர்ந்த சேவையாகும்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி, 1955

Sai Inspires (Tamil Translation): 18th January 2013

Take the ups and downs of life as natural. They are incidental to the world of compounds and components. When an empty plantain leaf is kept, it tends to move up in the wind and fly. But, when you serve dishes on it, the food and the leaf will remain unshaken. So too, fill your mind and heart with the virtues of faith, steady discipline, devotion, detachment and equanimity – these are items of the spiritual menu. Then you will not sink with every blow. When you have attained true wisdom, you will find that good fortune should not be gloated over, nor bad fortune grieved over. A hero treats both with equal unconcern. Pain and Gain are breezes and storms that cannot affect the depths of the ocean of bliss in the heart of a true devotee.

– Divine Discourse, October 19, 1966

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை இயல்பாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவை இந்தக் கலவையினால் ஆனால் உலகில் நடக்கக் கூடியவையே. ஒரு வாழை இலை காலியாக வைக்கப்பட்டால் அது காற்றில் மேலெழும்பி பறக்கும். ஆனால், அதன் மேல் உணவு வகைகளைப் பரிமாறினால், உணவும் இலையும் அசையாமல் இருக்கும். அதே போல, உங்கள் மனதையும், இதயத்தையும் ஆன்மீக உணவுகளான நம்பிக்கை, நிதானமான கட்டுப்பாடு, பக்தி, பற்றின்மை மற்றும் மனச் சமநிலை ஆகிய நற்குணங்களால் நிரப்புங்கள். அவ்வாறானால், நீங்கள் ஒவ்வொரு அடியிலும் தடுமாறமாட்டீர்கள். உண்மையான ஞானத்தை நீங்கள் அடைந்திருந்தால், அதிர்ஷ்டத்தை எண்ணி குதூகலிக்கவோ, துரதிர்ஷ்டத்தை எண்ணி வருத்தப்படவோ கூடாது என்பதனை நீங்கள் அறிவீர்கள். ஒரு நாயகம் இவ்விரண்டையுமே ஒரே மாதிரியாகக் கருதுவான். வலியும், இலாபமும் ஒரு உண்மையான பக்தனின் இதயத்திலுள்ள ஆனந்த சமுத்திரத்தின் ஆழங்களை பாதிக்க முடியாத காற்றுகளும், புயல்களுமே ஆகும்,

– தெய்வீக உரை, அக்டோபர் 19, 1966

Sai Inspires (Tamil Translation): 15th December 2012

One must develop deep detachment. There is no use renouncing some food or drink, to which you have become bound, when you hear a discourse, or when some religious text is expounded within hearing. Detach yourself from all that keeps you away from God. Spend more time on meditation or namasmarana, for peace and joy are not to be found in external nature; they are treasures lying hidden in the inner realms of each and everyone. Once they are located, one can never again be sad or agitated. With every inhalation, utter the Name of the Lord. With every exhalation, utter the Name of the Lord. Use this splendid and precious chance in your life to the fullest. Live in God, for Him and with Him.

– Divine Discourse, October 15, 1966

பற்றின்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பேருரையை கேட்ட பிறகோ அல்லது ஒரு ஆன்மீகப் புத்தகத்திலுள்ள நல்விஷயங்களைப் பற்றி விரிவுரைக்கும் பொழுதோ உங்களுக்கு மிகவும் பற்றுள்ள ஒரு உணவுப் பண்டத்தையோ அல்லது பானத்தையோ விலக்குவதில் எவ்விதப் பயனும் இல்லை. உங்களைக் கடவுளிடமிருந்து விலக்கி வைக்கும் அனைத்திலிருந்தும் விலகியிருங்கள். தியானத்திலும் நாமஸ்மரணையிலும் அதிக அளவில் நேரத்தைச் செலவழியுங்கள். ஏனெனில் அமைதியும் மகிழ்ச்சியும் வெளிவுலகில் கிடைக்காது. அவை, ஒவ்வொருவரிலும் உள்ளே புதைந்திருக்கும் புதையல்கள். அவை இருப்பதைக் கண்டுவிட்டால், ஒருவர் மீண்டும், எப்பொழுதும் சோகமாகவோ, கலக்கமாகவோ இருக்கமாட்டார்கள். ஒவ்வொரு முறை மூச்சை இழுக்கும் பொழுதும் கடவுளின் திருநாமத்தை உச்சரியுங்கள். ஒவ்வொரு முறை மூச்சை வெளியே விடும் பொழுதும், கடவுளின் திருநாமத்தை உச்சரியுங்கள். இந்த அற்புதமான, அரிய வாய்ப்பை உங்கள் வாழ்வில் பூரணமாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். கடவுளில் வாழுங்கள்; கடவுளுக்காக வாழுங்கள்; கடவுளுடன் வாழுங்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966

Sai Inspires (Tamil Translation): 12th November 2012

If you want to light a lamp, you need four things – a container, oil, a wick and a match box. If any one of these is lacking, you cannot light the lamp. Similarly, to light the lamp of spiritual wisdom in your heart, you need – the container of detachment, wick of one-pointed concentration, matchstick of wisdom and the oil of devotion. Of these, the spirit of detachment (vairagya) is crucial. Detachment means absence of body attachment. The sense of possessiveness (mamakara) and the ego-feeling are the causes of this raga (disease). Eradicate this disease of attachment through the process of self-enquiry. When you realise the impermanence of the body and all the sensory experiences, you will naturally acquire detachment (vairagya). Discharge all your duties as an offering to God and treat your body solely as a God-given instrument for the purpose of serving others.

– Divine Discourse, 9 November 1988

நீங்கள் ஒரு விளக்கை ஏற்ற விரும்பினால் உங்களுக்கு நான்கு பொருட்கள் தேவைப்படுகின்றன – ஒரு கொள்கலன் (அகல்), எண்ணெய், ஒரு திரி மற்றும் ஒரு தீப்பெட்டி. இவற்றில் ஏதாவதொன்று இல்லையெனினும் உங்களால் விளக்கை ஏற்ற இயலாது. அது போல, ஆன்மீக ஞானம் எனும் விளக்கை உங்கள் இதயத்தில் ஏற்றுவதற்கு, பற்றின்மை எனும் கொள்கலனும், ஒருமுகச் சிந்தனை எனும் திரியும், ஞானம் எனும் தீக்குச்சியும், பக்தி எனும் எண்ணெய்யும் உங்களுக்குத் தேவைப்படுகின்றன. இவற்றில், பற்றின்மை எனும் உணர்வு (வைராக்கியம்) மிகவும் அத்தியாவசியமானதாகும். பற்றின்மை என்றால் உடல் மேல் பற்று கொள்ளாமல் இருப்பது என்று பொருள். மமகாரம் மற்றும் அஹங்காரம் தான் இராகம் எனப்படும் நோய்க்குக் காரணமாகின்றன.சுய விசாரணை மூலம் இந்த நோயினைப் போக்குங்கள். இவ்வுடல் மற்றும் அனைத்துப் புலன் சார்ந்த அனுபவங்கள் ஆகியவற்றின் நிலையற்ற தன்மையை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் இயல்பாகவே பற்றின்மை (வைராக்கியம்) பெறுவீர்கள். உங்கள் அனைத்துக் கடமைகளையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பாகச் செய்து, பிறருக்குச் சேவை செய்யும் பொருட்டு, ஒரு கருவியாக உங்கள் உடலைக் கடவுள் அளித்துள்ளார் என்று கருதுங்கள்.

– தெய்வீக உரை, 9 நவம்பர் 1988

Sai Inspires (Tamil Translation): 20th October 2012

All water is not potable. The stagnant pool is to be avoided, the flowing river is better. Select safe and pure water to drink. Use the mosquito net, but see that mosquitoes do not enter into the net, when you go to bed. Keep the mosquitoes away; do not imprison them inside the net. Sail in the boat that floats on water, but do not allow the water to enter the boat. So too, be in worldly life, but do not allow it to get into you. The lotus born in slime and mud rises up through water and lifts its head high above the water. It refuses to get wet though water is the element which gives it life. Be like the lotus.

– Divine Discourse, January 1, 1964

அனைத்து நீரும் குடிநீர் அல்ல. தேங்கி நிற்கும் குட்டை ஒதுக்கப்பட வேண்டும், ஓடும் ஆறு தான் மேலானது. பாதுகாப்பான, சுத்தப்படுத்தப்பட்ட நீரையே குடிப்பதற்குத் தேர்ந்தெடுங்கள். கொசுவலையை பயன்படுத்துங்கள். ஆனால் படுப்பதற்கு அதனுள் செல்லும் பொழுது அதனுள் கொசுக்கள் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசுக்களை அண்டையில் விடாதீர்கள். அவற்றை வலைக்குள் சிறைப்படுத்தாதீர்கள். நீரின் மேல் மிதக்கும் படகில் சவாரி செய்யுங்கள். ஆனால் படகினுள் நீர் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல, உலக வாழ்க்கையில் இருங்கள் ஆனால் அதனை உங்களுள் நுழைய அனுமதிக்காதீர்கள். சகதியிலும் மண்ணிலும் தோன்றிய தாமரை மலர், நீரின் வழியாக வெளி வந்து, அதன் தலையை நீரின் மட்டத்திலிருந்து வெகு உயரத்திற்குக் கொண்டு வருகிறது. நீர் எனும் பொருள் அதற்கு வாழ்வளித்தாலும் அது தன்னை நனைப்பதற்கு அனுமதிப்பதில்லை. தாமரை மலர் போல் இருங்கள்.

– தெய்வீக உரை, ஜனவரி 1, 1964

Sai Inspires (Tamil Translation): 14th September 2012

In spite of warnings, admonitions, advice and appeals that one should not submerge themselves in the trivial and the transitory, people are still drawn towards misery by defects in their understanding. Hatred, greed, factions and fights are prevalent because God is discarded as superfluous or as superstition. The scriptures are the records of the thoughts and experiences of pure and unprejudiced love-filled seekers of truth. You will do well, if you trust them. They clearly explain the following tenets: Love alone prevails, Detachment is your true wealth, Unity alone is the truth and God alone should be your goal in life. Just as when light from the oil-based lamp gets dull, its wick is adjusted or fuel is added, it is about time the nobler and higher impulses of all human beings are invigorated. That alone will save you from calamity. You must desire for your liberation from the bonds you have woven around yourself.

– Divine Discourse, Oct 1, 1965

சாதாரணமான, நிலையற்ற விஷயங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டாம் என பல எச்சரிக்கைகள், கடிந்துரைகள், அறிவுரை மற்றும் முறையீடுகள் விடுத்தும், தாம் புரிந்து கொண்டதில் குறைகள் உள்ளதால், மக்கள் துயரத்தின் அருகாமையில் செல்கிறார்கள். கடவுள் ஒரு சாதாரண விஷயமாகவோ அல்லது மூடநம்பிக்கையாகவோ கருதப்படுவதால் இந்நாளில் வெறுப்பு, பேராசை, வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. புனித நூல்கள், புனிதமான, பங்கமில்லாத அன்பு-நிறைந்த, சத்தியத்தை நாடுபவர்களது எண்ணங்கள் மற்றும் அனுபவங்களை பதிவு செய்திருக்கின்றன. அவற்றின் மேல் நம்பிக்கை கொண்டால் நீங்கள் நன்றாக இருக்கலாம். அவை உங்களுக்கு, பின்வரும் கருத்துகளை தெளிவாக விவரிக்கின்றன: அன்பே நிலைத்திருக்கும், பற்றின்மையே உங்களது உண்மைச் செல்வம், ஒற்றுமையே சத்தியம் மற்றும் கடவுளே உங்கள் வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒரு எண்ணெய் விளக்கின் ஒளி குன்றும்போது எவ்வாறு அதன் திரி சரி செய்யப்படுகிறதோ அல்லது எண்ணெய் ஊற்றுப்படுகிறதோ அவ்வாறே  சரியான நேரத்தில் அனைத்து மனிதர்களிலும் உள்ள உயர்ந்த, மேன்மையான உந்துதல்கள் வீரியப்படுத்தப்பட வேண்டும். அதுவே உங்களை பெருந்துன்பத்திலிருந்துக் காப்பாற்றும். உங்களைச் சுற்றி நீங்களே கட்டியுள்ள பற்றுதல்களிலிருந்து உங்களுக்கு விடுதலைக் கிடைப்பதற்கு நீங்கள் விருப்பபட வேண்டும்.

– தெய்வீக உரை, அக்டோபர் 1, 1965