Tag Archives: devotion

Sai Inspires (Short – Tamil) – 20/Dec/2020

Without firm faith in the omnipresence of the Divine, devotion has no meaning. By developing faith, devotion is nourished and devotion enables one to face all the vicissitudes of life with fortitude and serenity, regarding them as dispensations of Providence.

Bhagawan Sri Sathya Sai Baba,
Divine Discourse, Jan 19, 1986

Sai Inspires (Tamil Translation): 20th July 2013

A true devotee will have no eye on the profit of any kind that can be derived from their service. If you quarrel with your spouse and desist from food for a day, that does not count as fasting in the book of God. Also praising one God as great and decrying another is incorrect. Any of these acts reflect the fact that you are unaware of the elementary rules of spiritual discipline. Dhana (wealth) is the currency of the world. Sadhana (Spiritual Practice) is the currency of the spirit. Be an example to others through your conduct – sweet speech, humility, reverence to elders and steadfastness in truth and faith. This way you will influence more people into practicing spirituality; it is better than establishing societies, collecting donations or running temples. The Lord looks for sincerity, simplicity and steady joy in the contemplation of His Name and Form.

– Divine Discourse, August 19, 1964

ஒரு உண்மையான பக்த,ன் தான் ஆற்றும் தொண்டின் மூலம் எந்தவொரு வகையான இலாபத்தையும் எதிர்பார்ப்பதில்லை. உன் வாழ்க்கைத் துணைவரிடம் சண்டை போட்டுக் கொண்டு ஒரு நாள் உணவருந்தாமல் இருந்தால், அது விரதம் என்று கடவுள் ஏற்றுக் கொள்ளமாட்டார். மேலும், ஒரு கடவுளை மற்றொரு கடவுளை விட மேலானவர் என்று போற்றுதல் தவறானதாகும். நீங்கள் இச்செயல்களில் ஈடுபட்டால், அது, ஆன்மீகப் பாதையின் அடிப்படைச் சட்டங்களை நீங்கள் அறியாததைக் குறிக்கிறது. தனம் (செல்வம்) உலகின் நாணயம் ஆகும். சாதனை (ஆன்மீகப் பயிற்சி) ஆன்மாவின் நாணயம் ஆகும். உங்கள் இனிமையான பேச்சு, பணிவு, பெரியோரை வணங்குதல், சத்தியம் மற்றும் நம்பிக்கையில் உறுதியாக இருத்தல் ஆகியவற்றின் மூலம் பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழுங்கள். இதன் மூலம் நீங்கள் மேலும் பலரை ஆன்மீகத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஈர்க்க முடியும்; சங்கங்களை ஏற்படுத்தி, ஆலயங்களை நடத்துவதற்கு நீங்கள் நன்கொடை வசூலிப்பதை விட இது மேலானதாகும். நேர்மை, எளிமை மற்றும் அவருடையத் திருபெயரிலும் அவருடைய திருவுருவத்திலும் நீங்கள் பெரும் நிலையான மகிழ்ச்சியையும் தான் கடவுள் எதிர்பார்க்கிறார்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 19, 1964

Sai Inspires (Tamil Translation): 22nd February 2013

The greatest obstacle in the path of surrender is egoism (ahamkaram) and Attachment or Possessiveness (mamakaram). This is ingrained in your personality since ages and its tentacles go deeper and deeper with the experience of every succeeding life. It can be removed only by the twin detergents of discrimination and renunciation. Devotion is the water to wash away this dirt of ages, and the soap of japam, dhyaanam and yoga (repetition of God’s name, meditation and communion) will help to remove it quicker and more effectively. Slow and steady progress will surely win the race in this one; quicker means of travel can spell disaster. Proceed step by step in your spiritual practices – placing one steady step before you take the next. Do not waver or slide back two paces with one step forward. Cultivate deep faith – that will make your progress steady!

– Divine Discourse, August 1, 1956

சரணாகதியின் பாதையில் அஹங்காரமும் மமகாரமும் மிகப் பெரிய தடைகளாகும். காலம் காலமாக இது உங்களில் ஆழப்பதிந்துள்ளது. அவற்றின் பற்றிழைகள் ஒவ்வொரு வெற்றியான வாழ்க்கையின் அனுபவத்தின் மூலமும் மேலும் ஆழமாகச் செல்கின்றன. பகுத்தறிவு மற்றும் துறவு ஆகிய இரண்டு சலவைத் தூள்களால் கொண்டு மட்டுமே இதனை நீக்க முடியும். இந்த காலாந்திர அழுக்கை நீக்குவதற்கு பக்தி தான் தண்ணீர், ஜபம், தியானம் மற்றும் யோகம் ஆகியவை சோப்புகள் அதனை சீக்கிரமாகவும், நன்றாகவும் நீக்குவதற்குப் பயன்படும். மெதுவாகவும், நிதானமாகவும் முன்னேறுவது இந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றியை ஈட்டுத் தரும். சீக்கிரமாகப் பயணித்தால் பேராபத்தில் முடியலாம். உங்கள் ஆன்மீக சாதனைகளில் ஒவ்வொரு அடியாக முன்னேறுங்கள் – நீங்கள் ஒரு அடியையும் நிதானமாக எடுத்து வையுங்கள். ஒரு அடி முன்னே எடுத்து வைத்து இரண்டடிகள் பின்னே எடுத்து வைக்காதீர்கள். ஆழ்ந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் – அது உங்கள் முன்னேற்றத்தை நிதானமாக்கும்!

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 1, 1956

Sai Inspires (Tamil Translation): 5th February 2013

There are three types of devotion: The Vihanga method, where like a bird swooping down upon the ripe fruit on the tree, the devotee is too impatient and by the very impatience one exhibits, loses the fruit, which falls from one’s hold. The Markata method is akin to a monkey which grabs one fruit and then chooses another and tugs at that, giving way to unsteadiness as it is unable to decide which fruit it wants. So too, the devotee of this type hesitates and changes the goal much too often and thus loses all chances of success. The third and ideal type is the Pipeelika method, where like the ant, which slowly but steadily proceeds towards the sweetness, the devotee also moves directly, with undivided attention towards the Lord and wins His Grace.

– Sathya Sai Speaks, Volume I, MahaShivarathri, 1955

பக்தி மூன்று வகைப்படும்: விஹங்க முறை – ஒரு பறவை எவ்வாறு ஒரு மரத்திலுள்ள பழுத்த பழத்திற்காக கீழ் நோக்கிப் பாய்கிறதோ, அவ்வாறே  பக்தனும் மிகவும் பொறுமையற்று, அந்தப் பொறுமையின்மையாலேயே அந்தப் பழத்தை நழுவவிடுகிறான். மர்கட முறை – எவ்வாறு ஒரு குரங்கானது ஒரு பழத்தை கையில் எடுத்ததும் மற்றொரு பழத்திற்காக இதனை விட்டுவிடுகிறதோ, அவ்வாறே நிதானமற்று, எந்தப் பழம் வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாமல் இருக்கிறதோ, அவ்வாறே இந்த விதமான பக்தனும் தயக்கத்துடன் தன் குறிக்கோளை மீண்டும் மீண்டும் மாற்றிக்கொண்டு வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளையும் இழக்கிறான். மூன்றாவதான, உயர்வான முறை பிப்பீலக முறையாகும். இம்முறையில், ஒரு எரும்பு எவ்வாறு மெதுவாக ஆனால் நிதானமாக இனிமையை நோக்கிச் செல்கிறதோ, அவ்வாறே பக்தனும் கடவுளை நோக்கி நேராக, கவனம் சிதறாமல் சென்று அவருடைய அருளைப் பெறுகிறான்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி 1955

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹா சிவராத்திரி 1955

Sai Inspirations (Tamil Translation): 1st February 2013

The Lord is a Mountain of Love. Any number of ants carrying away particles of sweetness cannot exhaust His plenty. He is an Ocean of Mercy without a limiting shore. And devotion is the easiest way to win His Grace and also to realize that He pervades everything; in fact, He is everything! Sharanagathi (total surrender) or leaving everything to His Will, is the highest form of devotion. Devotion and the attitude of surrender, which is its final fruit, will give you great courage to meet any emergency; such courage is what is called Renunciation. When Devotion is just emerging as a sapling, a fence is needed to protect the tender plant. That fence is religion and its rules, restrictions, directions and commands.

– Sathya Sai Speaks, Volume 1, MahaShivarathri, 1955

கடவுள் அன்பின் சிகரம் ஆவார். எவ்வளவு எறும்புகள் அதன் இனிப்புத் துகள்களை எடுத்துச் சென்றாலும் அவருடைய நிறைவு என்றும் குன்றுவதில்லை. எல்லையற்ற கருணைக் கடவுள் அவர். பக்தியே அவருடைய அருளைப் பெறுவதற்கும், அவர் அனைத்திலும் ஊடுருவியிருக்கிறார் என்றும், அவரே அனைத்தும் என்றும் உணர்வதற்கும் எளிதான வழியாகும்! பூரண சரணாகதி அல்லது அவருடைய சங்கல்பத்திடம்  அனைத்தையும் விட்டுவிடுவது என்பதே பக்தியின் மிக உயர்ந்த நிலை ஆகும். பக்தியும், அதன் கடைசிப் பலனான சரணாகதியும் உங்களுக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் சந்திக்கும் தைரியத்தை அளிக்கும். அப்படிப்பட்ட தைரியமே வைராக்கியம் ஆகும். பக்தி சிறு செடியாகத் துளிர்விடும் போது, அதனைப் பாதுகாப்பதற்கு ஒரு வேலி தேவைப்படுகிறது. அந்த வேலியே மதம், அதன் சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் அதன் ஆணைகள் ஆகும்.

– சாயி அருளமுதம், அத்தியாயம் 1, மஹாசிவராத்திரி, 1955

Sai Inspires (Tamil Translation): 18th January 2013

Take the ups and downs of life as natural. They are incidental to the world of compounds and components. When an empty plantain leaf is kept, it tends to move up in the wind and fly. But, when you serve dishes on it, the food and the leaf will remain unshaken. So too, fill your mind and heart with the virtues of faith, steady discipline, devotion, detachment and equanimity – these are items of the spiritual menu. Then you will not sink with every blow. When you have attained true wisdom, you will find that good fortune should not be gloated over, nor bad fortune grieved over. A hero treats both with equal unconcern. Pain and Gain are breezes and storms that cannot affect the depths of the ocean of bliss in the heart of a true devotee.

– Divine Discourse, October 19, 1966

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை இயல்பாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவை இந்தக் கலவையினால் ஆனால் உலகில் நடக்கக் கூடியவையே. ஒரு வாழை இலை காலியாக வைக்கப்பட்டால் அது காற்றில் மேலெழும்பி பறக்கும். ஆனால், அதன் மேல் உணவு வகைகளைப் பரிமாறினால், உணவும் இலையும் அசையாமல் இருக்கும். அதே போல, உங்கள் மனதையும், இதயத்தையும் ஆன்மீக உணவுகளான நம்பிக்கை, நிதானமான கட்டுப்பாடு, பக்தி, பற்றின்மை மற்றும் மனச் சமநிலை ஆகிய நற்குணங்களால் நிரப்புங்கள். அவ்வாறானால், நீங்கள் ஒவ்வொரு அடியிலும் தடுமாறமாட்டீர்கள். உண்மையான ஞானத்தை நீங்கள் அடைந்திருந்தால், அதிர்ஷ்டத்தை எண்ணி குதூகலிக்கவோ, துரதிர்ஷ்டத்தை எண்ணி வருத்தப்படவோ கூடாது என்பதனை நீங்கள் அறிவீர்கள். ஒரு நாயகம் இவ்விரண்டையுமே ஒரே மாதிரியாகக் கருதுவான். வலியும், இலாபமும் ஒரு உண்மையான பக்தனின் இதயத்திலுள்ள ஆனந்த சமுத்திரத்தின் ஆழங்களை பாதிக்க முடியாத காற்றுகளும், புயல்களுமே ஆகும்,

– தெய்வீக உரை, அக்டோபர் 19, 1966

Sai Inspires (Tamil Translation): 12th January 2013

Every being needs love, every being inhales and exhales Love. Love is the very breath of life; each and every one of you are embodiments of Love. Love knows no fear, and so, love needs no falsehood to support it. It is only fear, that makes people warp the face of truth, to make it pleasant for those whom they fear. Love seeks no reward, love is its own reward. Even a small trace of greed for gain (vishaya vasana) degrades love into a bargain over the counter. Love removes all egoism; the self is transcended, forgotten and superseded when there is love. When such pure Love is directed towards the Lord, it is called Bhakthi (Devotion).

– Divine Discourse, October 19, 1966

ஒவ்வொரு ஜீவனுக்கும் அன்பு தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஜீவனும் அன்பையே மூச்சாக சுவாசிக்கின்றது. அன்பு உயிர் மூச்சாகும்; உங்களில் ஒவ்வொருவரும் அன்பின் வடிவங்களே. அன்பு பயமறியாது. ஆகையால், அன்பு பொய்யைச் சார்ந்திருப்பதில்லை. பயம் தான், தாம் கண்டு அஞ்சுபவர்களுக்கு இனிமையாக இருப்பதற்காக,  உண்மையை மறைக்கிறது. அன்பு எதனையும் எதிர்பார்க்காது, அன்பே அதன் பரிசாகும். இலாபம் என்ற ஒரு சின்ன பேராசையின் சுவடு அன்பில் தென்பட்டாலும் அது அன்பை வியாபாரம் ஆக்கிவிடும். அன்பு  அனைத்து அகந்தையையும் நீக்குகிறது. அன்பு, நான் எனும் உணர்வை கடக்க வைத்து , மறக்க வைத்து , அதற்கப்பால் இட்டுச் செல்கிறது.  அப்படிப்பட்ட புனிதமான அன்பு கடவுளின் பால் செலுத்தப்பட்டால் அதுவே பக்தி ஆகிறது.

– தெய்வீக உரை, அக்டோபர் 19, 1966

Sai Inspires (Tamil Translation): 2nd January 2013

God will not be attracted by learning, wealth or material possessions. God is drawn only by devotion. Take to Him, any troubles you have – He will accept all of them and fill you with joy. God loves every devotee. He accepts you for who you are. He is aware of all the difficult situations, trials and tribulations you go through and your devotion to Him, which gives you so much happiness. However, this devotion alone is not enough. What is needed is the regulation of that Divine Love, in the form of virtue and service. Do not criticise others, rather criticize yourself. Have the Name of the Lord on your tongue and the Form of the Lord before your eye. If you shape yourself this way, the place where you live will be the holiest of all. Let all your activities be directed only towards this purification in your hearts. I bless each and every one of you with success, in this noble effort!

– Divine Discourse, February 3, 1964

கடவுள் படிப்பினாலும், செல்வத்தினாலும், பொருட்களினாலும் ஈர்க்கப்படுவதில்லை. கடவுள் பக்தியால் மட்டுமே ஈர்க்கப்படுகிறார். அவரை நாடுங்கள். அவர் உங்களுடைய  துயரங்கள் அனைத்தையும் உங்களிடமிருந்து வாங்கிக் கொண்டு உங்களை ஆனந்தத்தால் நிறைப்பார். கடவுள் ஒவ்வொரு பக்தனையும் நேசிக்கிறார். நீங்கள் எவ்வாறு உள்ளீர்களோ அவ்வாறே உங்களை ஏற்றுக் கொள்கிறார். நீங்கள் அனுபவிக்கும் அனைத்து கஷ்டமான சூழ்நிலைகளையும், துயரங்களையும், வருத்தங்களையும், உங்களுக்கு ஆனந்தமளிக்கும் அவர் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பையும் அவர் நன்கறிவார். ஆனால், இந்த பக்தி மட்டுமே போதாது. அந்த தெய்வீகப் பிரேமை நற்குணமாகவும், சேவையாகவும் மாற்றப்பட வேண்டும். பிறரை விமர்சிக்காதீர்கள். மாறாக உங்களையே விமர்சித்துக் கொள்ளுங்கள். உங்கள் நாவின் மேல் ஆண்டவனுடைய திருநாமத்தையும், உங்கள் கண் முன்னே அவரது திருவுருவத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களை இவ்வாறாக மாற்றிக்கொண்டால், நீங்கள் வாழுமிடம் அனைத்திலும் புனிதமாக மாறிவிடும். உங்கள் அனைத்துச் செயல்களும் உங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக இருக்கட்டும். இந்த உயர்ந்த முயற்சியில் வெற்றி பெற உங்கள் ஒவ்வொருவரையும் நான் ஆசீர்வதிக்கிறேன்.

– தெய்வீக உரை, பிப்ரவரி 3, 1964

Sai Inspires (Tamil Translation): 28th December 2012

The body is a house, given to you for rent. The owner is God. Live there, so long as He wills, thanking Him for it, and paying Him the rent of Faith and Devotion. A strong will is the best tonic you can intake; the will becomes strong when you know that you are a child of immortality or a person who has earned the Grace of the Lord. In the epic Mahabharatha, the Pandavas are wonderful shining examples of faith and devotion. They won the Grace of the Lord and successfully defeated every single one of the wily strategy of their foes. The reinforcement of Grace from the Lord is the most reliable means of support. When you win the Grace of Lord, dishonour, defeat and despair fade away like fog evaporates before the Sun. Even disease cannot touch you. Hence, I advise you to face life by strengthening your spiritual urges and invoking the Grace of the Lord.

– Divine Discourse, October 15, 1966

இவ்வுடல் உங்களுக்கு வாடகைக்கு அளிக்கப்பட்ட ஒரு வீடாகும். இறைவனே அதன் சொந்தக்காரர் ஆவார். அவர் விரும்பும் வரை, நன்றியுடன், நம்பிக்கை மற்றும் பக்தி ஆகிய வாடகையைச் செலுத்தி நீங்கள் அதனுள் வசிக்கலாம். திட சங்கல்பமே தலை சிறந்த சத்து மருந்து (டானிக்) ஆகும். நீங்கள் இறவாமையின் குழந்தைகள் என்பதனையும், கடவுளின் அருளிற்குப் பாத்திரமானவர்கள் என்பதனையும் உணர்ந்தால் அந்த சங்கல்பம் மேலும் உறுதியடையும். மஹாபாரதத்தில், பாண்டவர்கள் நம்பிக்கை மற்றும் பக்திக்கு அருமையான உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் கடவுளின் அருளைப் பெற்று, அவர்களுடைய பகைவர்களின் ஒவ்வொரு சூழ்ச்சியானத் தந்திரத்தையும் வெற்றிகரமாகத் தோற்கடித்தார்கள். வலிமைப்படுத்தும் கடவுளின் அருள் தான் மிகவும் நம்பகமான, ஆதரவளிக்கும் உறுதுணையாகும். எவ்வாறு சூரியனின் முன் மூடுபனி ஆவியாகிவிடுமோ, அவ்வாறு கடவுளின் அருளை நீங்கள் பெற்றால், அவமரியாதை, தோல்வி மற்றும் துயரம் ஆகியவை வலுவிழந்துவிடும். நோய் கூட உங்களைத் தீண்ட முடியாது. ஆகையால், உங்கள் ஆன்மீக நாட்டங்களை பலப்படுத்திக் கொண்டு, கடவுளின் அருளை வேண்டிப் பெற்று, வாழ்கையை எதிர்கொள்ளவேண்டும் என நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966

Sai Inspires (Tamil Translation): 12th November 2012

If you want to light a lamp, you need four things – a container, oil, a wick and a match box. If any one of these is lacking, you cannot light the lamp. Similarly, to light the lamp of spiritual wisdom in your heart, you need – the container of detachment, wick of one-pointed concentration, matchstick of wisdom and the oil of devotion. Of these, the spirit of detachment (vairagya) is crucial. Detachment means absence of body attachment. The sense of possessiveness (mamakara) and the ego-feeling are the causes of this raga (disease). Eradicate this disease of attachment through the process of self-enquiry. When you realise the impermanence of the body and all the sensory experiences, you will naturally acquire detachment (vairagya). Discharge all your duties as an offering to God and treat your body solely as a God-given instrument for the purpose of serving others.

– Divine Discourse, 9 November 1988

நீங்கள் ஒரு விளக்கை ஏற்ற விரும்பினால் உங்களுக்கு நான்கு பொருட்கள் தேவைப்படுகின்றன – ஒரு கொள்கலன் (அகல்), எண்ணெய், ஒரு திரி மற்றும் ஒரு தீப்பெட்டி. இவற்றில் ஏதாவதொன்று இல்லையெனினும் உங்களால் விளக்கை ஏற்ற இயலாது. அது போல, ஆன்மீக ஞானம் எனும் விளக்கை உங்கள் இதயத்தில் ஏற்றுவதற்கு, பற்றின்மை எனும் கொள்கலனும், ஒருமுகச் சிந்தனை எனும் திரியும், ஞானம் எனும் தீக்குச்சியும், பக்தி எனும் எண்ணெய்யும் உங்களுக்குத் தேவைப்படுகின்றன. இவற்றில், பற்றின்மை எனும் உணர்வு (வைராக்கியம்) மிகவும் அத்தியாவசியமானதாகும். பற்றின்மை என்றால் உடல் மேல் பற்று கொள்ளாமல் இருப்பது என்று பொருள். மமகாரம் மற்றும் அஹங்காரம் தான் இராகம் எனப்படும் நோய்க்குக் காரணமாகின்றன.சுய விசாரணை மூலம் இந்த நோயினைப் போக்குங்கள். இவ்வுடல் மற்றும் அனைத்துப் புலன் சார்ந்த அனுபவங்கள் ஆகியவற்றின் நிலையற்ற தன்மையை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் இயல்பாகவே பற்றின்மை (வைராக்கியம்) பெறுவீர்கள். உங்கள் அனைத்துக் கடமைகளையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பாகச் செய்து, பிறருக்குச் சேவை செய்யும் பொருட்டு, ஒரு கருவியாக உங்கள் உடலைக் கடவுள் அளித்துள்ளார் என்று கருதுங்கள்.

– தெய்வீக உரை, 9 நவம்பர் 1988