Tag Archives: Divine Banker

Sai Inspires (Tamil Translation): 21st September 2012

To protect valuables, jewels, legal documents and precious metals like silver and gold from thieves, you go to the banks and deposit them in the safe vaults or lockers. Thus, you dismiss the anxiety in your minds, are freed from worry and are able to sleep in peace at your homes. So too, you must surrender to the Lord, your jewels of intelligence, brilliance and capacity to serve. Most importantly, you attach a lot of value to your ego – leave it also to His care. Then you will be very happy. In the Bhagavad Gita, Lord Krishna advises Arjuna – Maam Ekam Sharanam Vraja – Surrender to Me alone. Then, He assures, Maa suchah – You need not grieve at all.

– Divine Discourse, July 14, 1966

விலைமதிப்பானவற்றையும், நகைகளையும், சட்டக் கோப்புகளையும், வெள்ளி மற்றும் தங்கம் போன்ற அரிய உலோகங்களையும் திருடர்களிடமிருந்து காப்பதற்கு நீங்கள் வங்கிகளுக்குச் சென்று அவற்றை பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கின்றீர்கள். இவ்வாறாக நீங்கள் உங்கள் மனதிலிருந்து மன உளைச்சலை நீக்கி, கவலையிலிருந்து விடுபட்டு உங்கள் வீடுகளில் நிம்மதியாகக் தூங்க முடிகிறது. அதே போல, நீங்கள் கடவுளிடம் உங்கள் நகைகளான புத்தி, சாமர்த்தியம் மற்றும் சேவை செய்வதற்கான தகுதி ஆகியவற்றைச் சமர்ப்பித்துவிடுங்கள். மிகவும் முக்கியமாக, நீங்கள் உங்கள் அஹங்காரத்திற்கு பெரும் மதிப்பளிக்கிறீர்கள் – அதனையும் அவர் பாதுகாப்பில் விட்டுவிடுங்கள். பின்பு நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். பகவத் கீதையில், அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் இவ்வாறு அறிவுரை வழங்குகிறார் – மாம் ஏகம் சரணம் வ்ரஜ – “என்னிடம் மட்டும் சரண் புகுவாயாக”. அவ்வாறானால், அவர் மா சுச: – “நீ கவலைப்படாதே” என்று உறுதியளிக்கிறார்.

– தெய்வீக உரை, ஜூலை 14, 1966

Sai Inspires (Tamil Translation): 12th September 2012

While you should develop the habit of saving money in a bank for the sake of old age and rainy days, you must also start the habit of making deposits in the Spiritual Bank, so that you can truly be ‘saved’. The currency and metals accepted in the Divine Bank are Truth, Love and Right Conduct. All words, feelings, actions, thoughts ringing with purity of these metals will be gladly accepted as deposits. So, as you take care of your savings deposit in the many worldly banks, you must make it a point to have an account and grow it in the Bank of the Divine too. When you are hard-pressed for money, you approach your bank seeking loans. The bank will help you, but only in proportion to your deposits. Similarly your Divine Banker will save you from distress and grief very quickly if you have deposited with Him the wealth of Truth, Love, Right Conduct and Peace.

– Divine Discourse, July 14, 1966

முதுமைக்காலத்திற்காகவும் மழைக்காலத்திற்காகவும் நீங்கள் பணம் சேமிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதுடன், நீங்கள் உண்மையிலேயே “save” ஆகுவதற்காக அதாவது காக்கப்படுவதற்காக தெய்வீக வங்கியிலும் சேமிக்கத் துவங்க வேண்டும். சத்யம், அன்பு மற்றும் தர்மமே தெய்வீக வங்கியில் வாங்கிக் கொள்ளப்படும் பணமும் உலோகங்களும் ஆகும். இந்த உலோகங்களின் தூய்மையுடன் உள்ள அனைத்து சொற்களும், உணர்வுகளும், செயல்களும், எண்ணங்களும் இந்த வங்கியில் சேமிப்பாக மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்ளப்படும். ஆகையால், உலகின் பல வங்கிகளில் உங்கள் சேமிப்புகளை பத்திரப்படுத்தும் நீங்கள் தெய்வீக வங்கியிலும் ஒரு கணக்கை வைத்துக் கொண்டு அதனை வளர்க்கவும் வேண்டும். உங்களுக்குப் பணம் மிகவும் தேவையான தருணத்தில் கடன் பெறுவதற்காக நீங்கள் வங்கியை நாடுகிறீர்கள். உங்களின் வைப்புத் தொகைக்கு ஏற்றவாறே வங்கி உங்களுக்கு உதவும். அதே போல, உங்கள் தெய்வீக வங்கியாளரும், நீங்கள் அவரிடம் சத்யம், அன்பு, தர்மம்  மற்றும் அமைதியைச் சேமித்திருந்தால்,  வருத்தத்திலிருந்தும் துக்கத்திலிருந்தும் உங்களை வெகு விரைவில் காப்பாற்றுவார்.

– தெய்வீக உரை, ஜூலை 14, 1966