Tag Archives: Elephant

Sai Inspires (Tamil Translation): 22nd December 2012

Lord Jesus Christ gave the following example while teaching His fishermen disciples: ‘In a river the water is flowing in a swift current. But the tiny fishes are able to swim in it and move about merrily, despite the speed of the current. In the same river, a huge elephant caught in the rapids, is likely to get washed away or drowned in spite of its enormous size. The elephant just cannot survive there! The reason is: What you need for survival in a river is not being large, but the ability to swim. Likewise a person who is caught up in the ocean of worldly existence needs, not so much metaphysics, scholarship or wealth, as much as the grace of Divine love.’ Without any knowledge of Vedanta, one can still surmount all the problems of life if one is blessed with God’s love. Hence, remember the Lord with Love, worship Him with Love and sanctify your life with Love.

– Divine Discourse, December 25, 1988

இயேசுபிரான் தன் மீனவ சீடர்களுக்கு உபதேசிக்கும் பொழுது பின்வரும் உதாரணத்தைக் கூறினார்: “ஆற்றில் நீர் விரைவான ஓட்டத்துடன் பாய்கிறது. ஆனால் சிறு மீன்களால் அதனுள் நீந்தி, அந்த நீரோட்டம் வேகமாக உள்ள போதிலும் மிகவும் சந்தோஷமாகச் சுற்றிவர முடிகிறது. அதே ஆற்றில், ஒரு பெரிய யானை அப்படிப்பட்ட விரைவான நீரோட்டங்களில் மாட்டிக் கொண்டு, அதனால் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கிவிடும். யானையால் அச்சூழ்நிலையில் உயிர் வாழ முடியாது! காரணம் என்னவென்றால்: நீங்கள் நீரில் வாழ்வதற்கு உருவில் பெரிதாக இருந்தால் போதாது, ஆனால் நீந்தத் தெரிய வேண்டும். அதே போல, உலகியல் தேவைகளின் சமுத்திரத்தில் மாட்டிக் கொண்டுள்ளவர்களுக்கு, தத்துவ சாஸ்திரமோ, பாண்டித்தியமோ, செல்வமோ, தெய்வீக அன்பின் அருளின் அளவிற்கு உதவாது.” வேதாந்தத்தின் ஞானம் இல்லாமலேயே ஒருவரால் கடவுளுடைய அன்பின் அருள் கொண்டே வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளையும் சமாளிக்க இயலும். ஆகையால், கடவுளை அன்புடன் நினைவில் கொள்ளுங்கள், அவரை அன்புடன் வணங்குங்கள், அன்பினால் உங்கள் வாழ்க்கையைப் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

– தெய்வீக உரை, டிசம்பர் 25, 1988

Sai Inspires (Tamil Translation): 19th December 2012

Man is the monarch of all animals. Though the elephant lives longer, the lion is more fierce, the eagle more far-seeing, the cock more punctual in early rising, the cow more imbued with the spirit of sacrifice and so on, human birth alone has in it, the potentialities that can be brought out by proper culture. You are born with a helpless lamenting cry; you should die with a smile of joy. That is the purpose of the years between. But those years are wasted now. People are tossed about from one want to another, one grief to another, until they are blinded by despair and exhausted by foiled pursuits. Most illnesses are due to this despair and exhaustion. God alone is your anchor, who will save you from stress and storm. Do not neglect or ignore Him in your life.

– Divine Discourse, October 15, 1966

மனிதனே அனைத்து மிருகங்களுக்கும் தலைவனாக விளங்குகிறான். யானை நீண்ட காலம் வாழ்ந்தாலும், சிங்கம் மிகவும் ஆக்ரோஷமாக விளங்கினாலும், கழுகால் நீண்ட தூரம் பார்க்க முடிந்தாலும், கோழி முதலில் விழித்து நேரம் தவறாமல் இருந்தாலும், பசு அதிக அளவில் தியாக உணர்வு கொண்டிருந்தாலும், சரியான பண்பாட்டினால் அடையக் கூடியவற்றை மனிதப் பிறவி மட்டுமே அடைய முடிகிறது. நீங்கள் பிறக்கும் பொழுது வருத்ததுடனான அழுகையுடன் பிறக்கிறீர்கள்; இறக்கும் பொழுது மகிழ்ச்சியுடனான புன்னகையைக் கொள்ளுங்கள். இவற்றின் நடுவில் வாழ்ந்த வருடங்களின் பலன் இதுவே. ஆனால் அந்த வருடங்கள் இப்பொழுது வீணடிக்கப்படுகின்றன. மக்கள் ஒரு ஆசையிலிருந்து மற்றொரு ஆசைக்கும், ஒரு துயரத்திலிருந்து மற்றொரு துயரத்திற்கும், நம்பிக்கையின்மையால் குருடாக்கப்பட்டும், தொடர முடியாத குறிக்கோள்களால் களைப்பாக்கப்பட்டும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான நோய்கள் இந்த நம்பிக்கையின்மை மற்றும் களைப்பால் தான் உருவாகின்றன. கடவுள் மட்டுமே உங்களை மன அழுத்தத்திலிருந்தும் புயலிலிருந்தும் காப்பாற்றவல்ல நங்கூரமாக உள்ளார். உங்கள் வாழ்க்கையில் அவரை உதாசீனப்படுத்தாதீர்கள், ஒதுக்காதீர்கள்.

– தெய்வீக உரை, அக்டோபர் 15, 1966