Tag Archives: Envy

Sai Inspires (Tamil Translation): 26th November 2012

Sand that has little grains of mica is valuable. But the sand, which has veins of gold, is much more precious. Thus, sand is valued according to the preciousness of the metal, which it has in its fold. Similarly, human hearts are evaluated by the contents therein. Keep God in your hearts. That is the best way to make your heart the most precious of your possessions. When God is installed in the heart, you will see only God everywhere, even in the objective world. The influence of God is such that even as you contemplate on Him, all traces of envy and greed will disappear from the mind.

– Divine Discourse, January 14, 1964

மைக்கா எனும் கனிமப் பொருளைக் கொண்ட மணல் விலை மதிப்பானதாகும். ஆனால், தங்க இழைகளைக் கொண்ட மணல் அதனை விட மேலும் மதிப்பு வாய்ந்ததாகும். ஆகையால், தன்னுள் கொண்டிருக்கும் உலோகத்தின் மதிப்பைக் கொண்டுதான் மணல் மதிப்பிடப்படுகிறது. அது போல, மனித இதயங்களும் அவற்றுள் உள்ளவற்றின்படியே மதிப்பிடப்படுகின்றன. கடவுளை உங்கள் இதயங்களில் கொள்ளுங்கள். உங்கள் இதயத்தை, உங்களின் மிகவும் மதிப்பான உடைமையாக மாற்ற இதுவே சிறந்த வழியாகும். கடவுளை உங்கள் இதயத்தில் அமர்த்தினால், நீங்கள் எங்கும் கடவுளைக் காண்பீர்கள். ஏன் இந்த பௌதிக உலகிலும் கூட அவரைக் காண்பீர்கள்! கடவுளின் தாக்கம் எவ்வாறு உள்ளதென்றால், அவரைப் பற்றி நினைத்தாலே, பொறாமை, பேராசை ஆகியவைச் சுவடே இல்லாமல் உங்கள் மனதிலிருந்து நீங்கிவிடும்.

– தெய்வீக உரை, ஜனவரி 14, 1964

Sai Inspires (Tamil Translation): 29th September 2012

The Government, the administration and the people (prabhuthwam, adhikaaris and praja) are like the three blades of an electric fan; when all three rotate together in the same direction and at the same speed, they conduce to comfort. Anger, malice, greed, envy – all these are obstacles in the path of love and cooperation. They lower man from the Divine to the animal level. Bear with others with patience and understanding; practise forbearance and sympathy. Try to discover points of contact rather than that of conflict. Spread brotherliness and deepen kindness through knowledge. Then without fail, life shall become worthwhile.

– Divine Discourse, August 3, 1966

அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் மக்கள் ஒரு மின்விசிறியின் மூன்று தகடுகளைப் போன்றவர்கள். இம்மூன்றும் ஒரே திசையில் ஒரே வேகத்தில் சுற்றும்பொழுது அவை சுகமளிக்கும். கோபம், காழ்ப்புணர்ச்சி, பேராசை மற்றும் பொறாமை ஆகிய அனைத்தும் அன்பு மற்றும் ஒத்துழைப்பின் பாதையில் தடைகளாக இருக்கின்றன. மனிதனை தெய்வீக நிலையிலிருந்து மிருக நிலைக்குத் தள்ளுகின்றன. பிறரைப் பொறுமை மற்றும் ஒத்திசைவுடன் பொறுத்துக் கொள்ளுங்கள். பொறுமையையும் பரிவையும் பின்பற்றுங்கள். முரண்பாட்டிற்கு பதிலாக ஒத்திசைவிற்கான குறிப்புகளைக் கண்டுபிடிக்க முயலுங்கள். சகோதரத்துவத்தை பரப்பி, அறிவின் மூலம் இரக்கத்தை ஆழமாக்குங்கள். அவ்வாறானால், தவறாமல் வாழ்க்கை பயனுடையதாக அமையும்.

– தெய்வீக உரை, ஆகஸ்ட் 3, 1966