Tag Archives: Equanimity

Sai Inspires (Short – Tamil) – 20/Dec/2020

Without firm faith in the omnipresence of the Divine, devotion has no meaning. By developing faith, devotion is nourished and devotion enables one to face all the vicissitudes of life with fortitude and serenity, regarding them as dispensations of Providence.

Bhagawan Sri Sathya Sai Baba,
Divine Discourse, Jan 19, 1986

Sai Inspires (Tamil Translation): 27th January 2013

Live with the consuming conviction that you are the Divine Self (Atma). This is the hard core eternal truth. The Atma it is, that sees through your eyes, hears through your ears, works through your fingers and moves through your feet. This true ‘you’ will not be elated by praise or deflated by blame. If someone carps at you, reason out thus within yourself: “Is he or she casting aspersions on my body? Well, why should I be worried then? Or are the abuses being addressed to the Atma? Nothing can affect its purity, or tarnish its glory. So remain calm and unperturbed.” You may ask, what happens then to the strings of abuse? Like the letter sent by post and refused by the addressee, it returns to the sender.

– Divine Discourse, February 19, 1964

நீ தெய்வீக ஆத்மா தான் என்ற முழு திடவுறுதியுடன் வாழ வேண்டும். அதுவே உண்மையான நிரந்தர சத்தியம். உனது கண்கள் மூலமாகப் பார்ப்பதும், செவிகள் மூலமாகக் கேட்பதும், விரல்கள் மூலமாகச் செயல்படுவதும் பாதங்கள் மூலமாக நகர்வதும் ஆத்மா தான். இந்த உண்மையான “நீ”-யானது பாராட்டினால் பெருமிதம் அடைவதோ, பழிசொல்லால் வருத்தம் அடைவதோ கிடையாது. யாராவது உன்னில் குறை கண்டால், “அவர் என் உடலைத் தூற்றுகிறார்களா? அவ்வாறிருந்தால் நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இல்லை அந்தப் பழிச்சொற்கள் ஆன்மாவைக் குறித்து கூறப்படுகின்றனவா?” அதன் தூய்மையைக் குலைக்கவும், அதன் மகிமையைக் கறைப்படுத்தவும் எதனாலும் முடியாது. ஆகையால், அமைதியாகவும், பதட்டப்படாமலும் இருக்க வேண்டும்.” அந்தப் பழிச்சொற்கள் என்ன ஆகும் என்று நீ கேட்கலாம்? ஒருவருக்கு அனுப்பப்பட்ட கடிதம், அவரால் நிராகரிக்கப்பட்டால் எவ்வாறு அனுப்புனருக்கே வந்து சேர்கிறதோ, அவ்வாறே இவையும் அனுப்பியவருக்கே திரும்பச் செல்கின்றன.

– தெய்வீக உரை, பிப்ரவரி 19, 1964

Sai Inspires (Tamil Translation): 18th January 2013

Take the ups and downs of life as natural. They are incidental to the world of compounds and components. When an empty plantain leaf is kept, it tends to move up in the wind and fly. But, when you serve dishes on it, the food and the leaf will remain unshaken. So too, fill your mind and heart with the virtues of faith, steady discipline, devotion, detachment and equanimity – these are items of the spiritual menu. Then you will not sink with every blow. When you have attained true wisdom, you will find that good fortune should not be gloated over, nor bad fortune grieved over. A hero treats both with equal unconcern. Pain and Gain are breezes and storms that cannot affect the depths of the ocean of bliss in the heart of a true devotee.

– Divine Discourse, October 19, 1966

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை இயல்பாக ஏற்றுக் கொள்ளுங்கள். அவை இந்தக் கலவையினால் ஆனால் உலகில் நடக்கக் கூடியவையே. ஒரு வாழை இலை காலியாக வைக்கப்பட்டால் அது காற்றில் மேலெழும்பி பறக்கும். ஆனால், அதன் மேல் உணவு வகைகளைப் பரிமாறினால், உணவும் இலையும் அசையாமல் இருக்கும். அதே போல, உங்கள் மனதையும், இதயத்தையும் ஆன்மீக உணவுகளான நம்பிக்கை, நிதானமான கட்டுப்பாடு, பக்தி, பற்றின்மை மற்றும் மனச் சமநிலை ஆகிய நற்குணங்களால் நிரப்புங்கள். அவ்வாறானால், நீங்கள் ஒவ்வொரு அடியிலும் தடுமாறமாட்டீர்கள். உண்மையான ஞானத்தை நீங்கள் அடைந்திருந்தால், அதிர்ஷ்டத்தை எண்ணி குதூகலிக்கவோ, துரதிர்ஷ்டத்தை எண்ணி வருத்தப்படவோ கூடாது என்பதனை நீங்கள் அறிவீர்கள். ஒரு நாயகம் இவ்விரண்டையுமே ஒரே மாதிரியாகக் கருதுவான். வலியும், இலாபமும் ஒரு உண்மையான பக்தனின் இதயத்திலுள்ள ஆனந்த சமுத்திரத்தின் ஆழங்களை பாதிக்க முடியாத காற்றுகளும், புயல்களுமே ஆகும்,

– தெய்வீக உரை, அக்டோபர் 19, 1966

Sai Inspires (Tamil Translation): 24th December 2012

In the world today all those who are held in high esteem as great personages, have earned their good name only by their character and conduct. To accomplish anything, one should have a firm determination. All religions and scriptures agree that helping fellow-beings in times of need and saving them from distress is the greatest virtue. Every human being has equal rights in the world, for Divinity is present in all. To enjoy peace of mind, it is essential to practice forbearance and equanimity. Good and bad, rich and poor, educated and uneducated exist in every country. Even though born in the same family, some are narrow minded and have crooked ideas and indulge in selfish deeds, while others are noble and selfless. To be friendly towards all beings and do good with love is the primary duty of all.

– Divine Discourse, December 25, 1992

இன்றைய உலகில் மாபெரும் மனிதர்களாகக் கருதப்படும் மக்கள், தம் குணத்தாலும் நடத்தையாலும் மட்டுமே அத்தகைய நிலையை எய்தியுள்ளார்கள். எதனை அடைய வேண்டுமானாலும் உறுதியாக இருக்க வேண்டும். அனைத்து மதங்களும், புனித நூல்களும் சக மனிதர்களுக்கு உதவி தேவைப்படும் பொழுது அவர்களுக்கு உதவி அவர்களைத் துயரத்திலிருந்து மீட்பதே மிக உயர்ந்த நற்குணம் என்பதை ஆமோதிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் இவ்வுலகில் சம உரிமை இருக்கிறது. ஏனெனில் அனைவரிலும் கடவுள் உறைகிறார். மன அமைதியை அனுபவித்திட சகிப்புத்தன்மையும் சம மனப்பாங்கும் கொள்வது அத்தியாவசியமானதாகும். நல்லோரும் தீயோரும், ஏழையும் பணக்காரரும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ளார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சிலர் குறுகிய மனப்பான்மை கொண்டு, தீய எண்ணங்களுடன், சுயநலமான செயல்களில் ஈடுபடுகிறார்கள், ஆனால் மற்றவர்களோ உயர்ந்த எண்ணத்துடன் தன்னலமற்றவர்களாகவும் இருக்கின்றனர். அனைத்து ஜீவராசிகளிடமும் தோழமை கொண்டு, அவர்கட்கு அன்புடன் நன்மை செய்வதே அனைவரின் தலையாய கடமையாகும்.

– தெய்வீக உரை, டிசம்பர் 25, 1992

Sai Inspires (Tamil Translation): 8th November 2012

When students score low marks parents feel great grief. Similarly, when we fall low in morals and spiritual virtues, our motherland bemoans her fate ten times more sadly. We have to assuage the grief of the physical mother and promote the peace and prosperity of our motherland. The motherland is not a mere lump of earth. When we desire her progress, we have to promote the progress of the people who dwell therein. The skills needed for resuscitating and reforming are found in youth. The reforming process involves the removal, in daily living, of bad conduct and bad habits, and the practice of good conduct and good deeds. You must express your humility, fortitude, equanimity, and gratitude for kindness received, in various acts in your daily life, every day.

– Divine Discourse, November 22, 1981

மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றால், பெற்றோர்கள் மிகுந்த துயரம் கொள்கிறார்கள். அதே போல, அறத்திலிருந்தும், ஆன்மீகத் தன்மைகளிலிருந்தும் நாம் தவறும் பொழுது, நம் தேசத்தாய் தன் அவல நிலையை நினைத்து, பத்து மடங்கு வருத்தம் கொள்கிறாள். தாயின் துயரத்தைப் போக்கி, தாய்நாட்டின் அமைதியையும் செழிப்பையும் பேணுங்கள். தாய்நாடு என்பது வெறும் மண் கிடையாது. அவளது முன்னேற்றத்தை நாம் விரும்பினால், இங்கு வாழும் மக்களின் முன்னேற்றத்திற்கு நாம் பாடுபடவேண்டும். புத்துயிர் கொடுப்பதற்கும், சீர்திருத்தம் ஏற்படுத்துவதற்கும் தேவையான திறன்கள் அனைத்தும் இளைஞர்களில் உள்ளன. தினசரி வாழ்க்கையிலிருந்து தீய நடத்தை மற்றும் தீய பழக்கங்களை நீக்குவதும், நன்னடத்தை மற்றும் நற்செயல்களைப் பின்பற்றுவதும் சீர்த்திருத்தம் செய்வதில் அடங்கும். தினமும், உங்கள் தினசரி வாழ்க்கையில் நீங்கள் பணிவு, மனவுரம், உள்ளச்சமநிலை மற்றும் பரிவைப் பெற்றதற்கு நன்றியும் கொண்டிருக்க வேண்டும்.

– தெய்வீக உரை, நவம்பர் 22, 1981